பாட்டுக்கு ஏற்ப நடனமாடும் மின் விளக்குகள்... பிரபல கார் நிறுவனத்தின் அசத்தலான அப்டேட்! எந்த நிறுவனம் தெரியுமா?

பாட்டுக்கு ஏற்ப மின் விளக்குகள் நடனமாடம் வகையில் அப்டேட்டினை பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று மென்பொருள் வாயிலாக வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பாட்டுக்கு ஏற்ப நடனமாடும் மின் விளக்குகள்... பிரபல கார் நிறுவனத்தின் அசத்தலான அப்டேட்! எந்த நிறுவனம் தெரியுமா?

அமெரிக்காவை தாயமாகக் கொண்டு இயங்கி வரும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் டெஸ்லா (Tesla). இந்நிறுவனத்தின் மின் வாகன தயாரிப்புகள் அதி நவீன தொழில்நுட்பம், கவர்ச்சி தோற்றம், மிக சிறந்த திறன் வெளிப்பாடு மற்றும் சிறப்பு வசதிகள் ஆகியவற்றிற்கு பெயர்-போனவையாக விளங்குகின்றது.

பாட்டுக்கு ஏற்ப நடனமாடும் மின் விளக்குகள்... பிரபல கார் நிறுவனத்தின் அசத்தலான அப்டேட்! எந்த நிறுவனம் தெரியுமா?

இந்த நிலையில், டெஸ்லா நிறுவனம் தற்போது புதிய சாஃப்ட்வேர் அப்டேட்டை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க தொடங்கியிருக்கின்றது. 'ஹாலிடே சாஃப்ட்வேர் அப்டேட்' (Holiday Software Update) என்ற பெயரில் இந்த அப்டேட்டை மின் வாகன உற்பத்தி நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

பாட்டுக்கு ஏற்ப நடனமாடும் மின் விளக்குகள்... பிரபல கார் நிறுவனத்தின் அசத்தலான அப்டேட்! எந்த நிறுவனம் தெரியுமா?

இந்த சாஃப்ட்வேர் அப்டேட்டின் மிக முக்கியமான அம்சம், காரில் இடம் பெற்றிருக்கும் மின் விளக்குகளை இசைக்கு ஏற்ப நடனமாட செய்வதாகும். ஆம், டெஸ்லா நிறுவனம் அதன் கார்களில் இருக்கும் மின் விளக்குகளை இசைக்கு ஏற்ப அணைந்து, எறியும் வசதியையே முக்கிய அப்டேட்டாக புதிய ஹாலிடே சாஃப்ட்வேர் அப்டேட்டில் வழங்கியிருக்கின்றது.

பாட்டுக்கு ஏற்ப நடனமாடும் மின் விளக்குகள்... பிரபல கார் நிறுவனத்தின் அசத்தலான அப்டேட்! எந்த நிறுவனம் தெரியுமா?

இது சோகமான மன நிலைியல் இருப்பவர்களைக் கூட குஷியாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வசதி மினி பார்ட்டி மூடையே வழங்கும் வகையில் இருக்கின்றது. இந்த சாஃப்ட்வேர் அப்டேட் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் பொருந்தும் என டெஸ்லா அறிவித்துள்ளது.

பாட்டுக்கு ஏற்ப நடனமாடும் மின் விளக்குகள்... பிரபல கார் நிறுவனத்தின் அசத்தலான அப்டேட்! எந்த நிறுவனம் தெரியுமா?

தற்போது டெஸ்லா நிறுவனம் மாடல் 3 (Model 3), மாடல் எஸ் (Model S), மாடல் ஒய் (Model Y) மற்றும் மாடல் எக்ஸ் (Model X) ஆகிய மின்சார கார் மாடல்களை உலகளவில் விற்பனைச் செய்து வருகின்றது. ஆனால், இதில் ஒன்றுகூட இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷடவசமானது.

இந்திய தொழிலதிபர்கள் சிலர் தங்களுக்கென பிரத்யேகமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஆசியாவின் மாபெரும் பணக்கரரான அம்பானியும் ஒருவர் ஆவார். டெஸ்லா நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

பாட்டுக்கு ஏற்ப நடனமாடும் மின் விளக்குகள்... பிரபல கார் நிறுவனத்தின் அசத்தலான அப்டேட்! எந்த நிறுவனம் தெரியுமா?

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தனது கார் பயனர்களையும், புதிய வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும் பொருட்டு புதிய சாஃப்ட்வேர் அப்டேட்டை அனைத்து மாடல்களுக்கும் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. டெஸ்லாவின் 'லைட் ஷோ' கஸ்டமைசேஷன் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கானதை நீங்களே மாற்று வடிவமைப்பு செய்து கொள்ளலாம்.

பாட்டுக்கு ஏற்ப நடனமாடும் மின் விளக்குகள்... பிரபல கார் நிறுவனத்தின் அசத்தலான அப்டேட்! எந்த நிறுவனம் தெரியுமா?

உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இதற்கான வசதி வாய்ப்பையும் டெஸ்லா ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இதற்கான மென்பொருளையும் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. அந்த செயலியைக் கொண்டு உங்களுக்கான லைட் ஷோவை நீங்களே மாற்றியமைப்பு செய்துக் கொள்ளலாம். இதற்கு ஓர் கணினி மட்டுமே தேவைப்படும்.

பாட்டுக்கு ஏற்ப நடனமாடும் மின் விளக்குகள்... பிரபல கார் நிறுவனத்தின் அசத்தலான அப்டேட்! எந்த நிறுவனம் தெரியுமா?

வெர்ஷன் 11.0 வாயிலாகவே இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், லைட் ஷோ மட்டுமின்றி இன்னும் சில அப்டேட்டுகளையும் நிறுவனம் இந்த அப்டேட்டில் வழங்கியிருக்கின்றது. நேவிகேஷன், விளையாட்டு (Games), பொழுதுபோக்கு (தொடுதிரையில் டிக்டாக் செயலியை பயன்டுத்தும் வசதி), ஆடியோ (முன்பைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பான வெளிப்பாட்டுடன்), பிளைண்ட் ஸ்பாட், ஆட்டோ பைலட்டின் போது கம்ஃபோர்டான சஸ்பென்ஷன் வசதியை வழங்குதல் போன்ற பல்வேறு அப்டேட்டுகள் இதன் வாயிலாக வழங்கப்பட்டிருக்கின்றன.

பாட்டுக்கு ஏற்ப நடனமாடும் மின் விளக்குகள்... பிரபல கார் நிறுவனத்தின் அசத்தலான அப்டேட்! எந்த நிறுவனம் தெரியுமா?

ஆகையால், நிச்சயம் இந்த அப்டேட் டெஸ்லா மின்சார கார் பயனர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே பலர் இந்த அப்டேட் குறித்த வீடியோக்களை அவர்களது சமூக வலை தள பக்கங்கள் வெளியிட தொடங்கிவிட்டனர் என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது.

பாட்டுக்கு ஏற்ப நடனமாடும் மின் விளக்குகள்... பிரபல கார் நிறுவனத்தின் அசத்தலான அப்டேட்! எந்த நிறுவனம் தெரியுமா?

டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகளவில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்நிறுவனத்தின் முதல் மின்சார கார் மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது. இதற்கான சாத்தியக் கூறுகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. டெஸ்லா நிறுவனத்தின் முதன்மையான தயாரிப்புகளில் ஒன்றான மாடல் 3 எலெக்ட்ரிக் காரே முதலில் இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படுகின்றது. இது இந்தியாவில் விற்பனைக்கு வருமானால் தற்போது விற்பனையில் இருக்கும் கோனா எலெக்ட்ரிக், ஆடி இ-ட்ரான் மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக அமையும்.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla rolling out holiday software update to entire fleet
Story first published: Saturday, December 25, 2021, 16:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X