இந்தியாவில் பணியாளர்களை நியமிக்க தொடங்கியது அமெரிக்க நிறுவனம் டெஸ்லா... தகுதிகளின் அடிப்படையில் வாய்ப்பு!!

அமெரிக்க மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் பணியாளர்களை நியமிக்கும் பணியைத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

இந்தியாவில் பணியாளர்களை நியமிக்க தொடங்கியது அமெரிக்க நிறுவனம் டெஸ்லா... தகுதிகளின் அடிப்படையில் வாய்ப்பு!!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம் இந்தியாவில் விரைவில் கால் தடம் பதிக்க இருக்கின்றது. நிறுவனத்தின் தலைமையகம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தில் அமைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பணியாளர்களை நியமிக்க தொடங்கியது அமெரிக்க நிறுவனம் டெஸ்லா... தகுதிகளின் அடிப்படையில் வாய்ப்பு!!

அதேசமயம், இதன் உற்பத்தி ஆலை பெங்களூருவில் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில், புதிதாக அமைய இருக்கும் தங்களின் நிறுவனத்திற்கான பணியாளர்களை நியமிக்கும் பணியில் மின் வாகன உற்பத்தி நிறுவனம் களமிறருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பணியாளர்களை நியமிக்க தொடங்கியது அமெரிக்க நிறுவனம் டெஸ்லா... தகுதிகளின் அடிப்படையில் வாய்ப்பு!!

அண்மையில் நிறுவனம் சார்பில் கார்பரேட் விவகார அமைச்சகத்திற்கு ஓர் ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், வைபவ் தனேஜா, வெங்கட் ராம் ஸ்ரீராம், டேவிட் ஜான் ஃபைன்ஸ்டீன் ஆகியோர் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்தியாவில் பணியாளர்களை நியமிக்க தொடங்கியது அமெரிக்க நிறுவனம் டெஸ்லா... தகுதிகளின் அடிப்படையில் வாய்ப்பு!!

இந்த நிலையிலேயே தற்போது உற்பத்தி மற்றும் பிற பணிகளுக்கான பணியாளர்களை நியமிக்கும் பணியில் டெஸ்லா ஈடுபட்டு வருவாதக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்த தகவலை ஆங்கில செய்து தளமான ப்ளூம்பெர்க் வெளயிட்டிருக்கின்றது.

இந்தியாவில் பணியாளர்களை நியமிக்க தொடங்கியது அமெரிக்க நிறுவனம் டெஸ்லா... தகுதிகளின் அடிப்படையில் வாய்ப்பு!!

எச்ஆர் (மனிதவள) துறை தலைவர் மற்றும் சந்தை மற்றும் விற்பனைத் துறை தலைவரை நியமிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ப்ளூம்பெர்க் வெளியிட்டிருக்கும் செய்தியில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக நடத்தப்பட்ட முதல் கட்ட பணியாளர்கள் தேர்வில் மனுஜ் குரானா தொழில்வளர்ச்சி மற்றும் கொள்கை தலைவராக பணியமர்த்தப்பட்டார்.

இந்தியாவில் பணியாளர்களை நியமிக்க தொடங்கியது அமெரிக்க நிறுவனம் டெஸ்லா... தகுதிகளின் அடிப்படையில் வாய்ப்பு!!

சிஇஓ-வாக பிரசாந்த் மேனன், சார்ஜிங் மேனேஜராக நிஷாந்த் பிரசாத் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து, மனிதவள துறையின் தலைவராக சித்ரா தாமஸ் என்பவரையும் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இவ்வாறு, பல முக்கிய பொறுப்புகளுக்கான அதிகாரிகளை நிறுவனம் தேர்வு செய்திருக்கின்றது.

இந்தியாவில் பணியாளர்களை நியமிக்க தொடங்கியது அமெரிக்க நிறுவனம் டெஸ்லா... தகுதிகளின் அடிப்படையில் வாய்ப்பு!!

இன்னும் பல்வேறு பிரிவுகளுக்கான ஆட்களைச் சேர்க்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. டெஸ்லா மின்சார கார் ஓர் பிரீமியம் தர எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். மெர்சிடிஸ் பென்ஸ், ஜாகுவார் ஐ பேஸ், ஆடி இ ட்ரான் ஆகிய கார்களுக்கே டஃப் கொடுக்கும் வசதிகளுடன் இக்கார் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் பணியாளர்களை நியமிக்க தொடங்கியது அமெரிக்க நிறுவனம் டெஸ்லா... தகுதிகளின் அடிப்படையில் வாய்ப்பு!!

இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட காரே மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இத்துடன், ஆலையை அமைக்கும் பணிகளும் அதிக வேகத்தில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla Started To Hire Top Executives In India. Read In Tamil.
Story first published: Thursday, June 3, 2021, 16:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X