Just In
- 5 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 7 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 9 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 9 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவில் 6 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் டெஸ்லா... மஹாராஷ்டிரா அமைச்சர் தகவல்...
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் 6 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் கூறியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய மாநிலத்தில் முதலீடு செய்ய வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் விரும்புகின்றன. இந்த சூழலில் மஹாராஷ்டிரா மாநிலம் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை கர்நாடகாவிடம் இழந்து விட்டதாக வெளிவரும் தகவல்களை அம்மாநில அமைச்சர் சுபாஷ் தேசாய் தற்போது மறுத்துள்ளார்.

அத்துடன் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த சில தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார். முதலில் மாடல் 3 எலெக்ட்ரிக் காருடன் மட்டுமே டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைக்கும் என யூகிக்கப்பட்டது. ஆனால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் 6 எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்க திட்டமிட்டிருப்பதாக தற்போது நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து இந்த வாகனங்கள் தருவிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும். எனவே ஆரம்பத்தில் முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்துதான் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் என எதிர்பார்க்கலாம். எனவே அவற்றின் விலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

ஆனால் அதன்பின் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 6 தயாரிப்புகளில் எது வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது? என்பதை ஆராய டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி அதிக வரவேற்பை பெறும் கார், இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என தெரிகிறது. இதன் காரணமாக விலை கணிசமாக குறையும்.

எனவே எந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது? என்பதை பார்த்து விட்டு அதன் பிறகுதான், உற்பத்தி ஆலையை எங்கு அமைப்பது? என்பதை டெஸ்லா நிறுவனம் முடிவு செய்யும் என கூறப்படுகிறது. இதுகுறித்து மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறுகையில், ''டெஸ்லா கர்நாடகாவிற்கு சென்று விடவில்லை. இந்த விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

அங்கே ஒர்க் ஷாப் மற்றும் ஷோரூமை அமைப்பதற்கு டெஸ்லா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதுபோன்ற ஷோரூம் மும்பையிலும் திறக்கப்படும். இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கு டெஸ்லா விரும்புகிறது. முழு அளவிலான உற்பத்தி ஆலையை அமைப்பதற்கு முன்பு, எந்த கார் அதிக வரவேற்பை பெறுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்தியாவில் 6 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய அவர்கள் விரும்புகின்றனர்.

எனவே முதலில் அவர்கள் விற்பனைதான் செய்ய போகின்றனர். இந்த கார்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து கொண்டு வரப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும். இதில், ஒரு காரை இந்திய சந்தைக்காக இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு டெஸ்லா தேர்வு செய்யும். அதன்பின்னர்தான் உற்பத்தி ஆலையை எங்கு அமைப்பது? என்பதை டெஸ்லா முடிவு செய்யும்'' என்றார்.

மாடல் 3, மாடல் ஒய், மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் என தற்போதைய நிலையில் டெஸ்லாவின் லைன்அப்பில் 4 எலெக்ட்ரிக் கார்கள் உள்ளன. எனவே இந்த கார்கள் பல்வேறு வேரியண்ட்களில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே ஒரு நிறுவனமாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பெங்களூரில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பையும் டெஸ்லா அமைத்துள்ளது. அம்மாநில முதல்வர் எடியூரப்பா இந்த தகவலை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான் மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் சுபாஷ் தேசாய் மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.