டெலிவிரிக்கு தயாராக ஷோரூம்களை வந்தடைந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! அறிமுகம் எப்போதுதாங்க?

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார்கள் டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டெலிவிரிக்கு தயாராக ஷோரூம்களை வந்தடைந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! அறிமுகம் எப்போதுதாங்க?

இந்தியாவில் சி5 ஏர்க்ராஸ் காரின் மூலமாக காலடி தடத்தை பதிக்க பிஎஸ்ஏ க்ரூப்பின் சிட்ரோன் நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது. இந்த காரின் அறிமுகம் மிக விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிவிரிக்கு தயாராக ஷோரூம்களை வந்தடைந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! அறிமுகம் எப்போதுதாங்க?

இதற்கிடையில் தற்போது சில சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார்கள் டீலர்ஷிப் மையங்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதுகுறித்த வீடியோ டாக்டர்.அமிட் பிஸ்வாஸ் என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பிஎஸ்ஏ க்ரூப்பின் எம்ப்2 ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் சி5 ஏர்க்ராஸ் காரின் நீளம் 4,500மிமீ ஆகும்.

அகலம், உயரம் மற்றும் வீல்பேஸ் அளவுகள் முறையே 2,099மிமீ, 1,710மிமீ மற்றும் 2,730மிமீ என்ற அளவுகளில் உள்ளன. முன்பக்கத்தில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களை இந்த கார் எல்இடி டிஆர்எல்களுடன் கொண்டுள்ளது.

டெலிவிரிக்கு தயாராக ஷோரூம்களை வந்தடைந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! அறிமுகம் எப்போதுதாங்க?

அதேபோல் பின்பக்க ஹெட்லைட்களும் எல்இடி தரத்திலும், பின்பக்கத்தை பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகள் ஒருங்கிணைக்கப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்களுடனும், டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் 18 இன்ச்சிலும் உள்ளன.

டெலிவிரிக்கு தயாராக ஷோரூம்களை வந்தடைந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! அறிமுகம் எப்போதுதாங்க?

உட்புறத்தில் சிட்ரோன் சி5 கார் 8 இன்ச்சில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் ஹெட்-யூனிட், 6-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், சவுகரியமான இருக்கைகள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

டெலிவிரிக்கு தயாராக ஷோரூம்களை வந்தடைந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! அறிமுகம் எப்போதுதாங்க?

இவை மட்டுமின்றி எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, 2-நிலை ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் பனோராமிக் சன்ரூஃப் போன்றவற்றையும் இதன் கேபினில் பார்க்க முடிகிறது.

டெலிவிரிக்கு தயாராக ஷோரூம்களை வந்தடைந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! அறிமுகம் எப்போதுதாங்க?

இந்த ஏர்க்ராஸ் காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 3,750 ஆர்பிஎம்-ல் 174 பிஎச்பி மற்றும் 2000 ஆர்பிஎம்-ல் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

டெலிவிரிக்கு தயாராக ஷோரூம்களை வந்தடைந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ்!! அறிமுகம் எப்போதுதாங்க?

ஃபீல் மற்றும் ஷைன் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ள சிட்ரோன் சி5-இல் சஸ்பென்ஷன் அமைப்பாக சிட்ரோனின் முற்போக்கான ஹைட்ராலிக் குஷின்ஸ் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen C5 Aircross reaches dealerships
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X