Just In
- 1 hr ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 1 hr ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 3 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- Education
ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO-வில் பணியாற்றலாம் வாங்க!
- News
இறக்கும் முன்னர் கொரோனா விழிப்புணர்வு.. இறந்த பின் விவேக் மக்களுக்கு சொல்லும் அறிவுரை "இதுதான்!"
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
101 ஆண்டுகால வரலாற்றில் இப்படியொரு பெண்ட்லீ கார் வந்ததே இல்லை!! வருகிற 23ஆம் தேதி அறிமுகமாகிறது...
புதிய பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு காரின் டீசர் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பெண்ட்லீயின் 101 ஆண்டுகால வரலாற்றில் மிகவும் டைனாமிக் சாலை காராக 2021 காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக பெண்ட்லீ நிறுவனம் கூறி வருகிறது.

இதன் அறிமுகம் வருகிற மார்ச் 23ஆம் தேதி என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் தான் தற்போது இந்த டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் இந்த படத்தில் கார் 23ஆம் தேதியில் வெளியிடப்படவுள்ள நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டீசர் படங்களில் டார்க் மெட்டால் க்ரே நிறத்தில் மூன்றாம் தலைமுறை பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி கார் காட்சியளிக்கிறது.

மேலும் இந்த ஸ்பீடு மாடலில் வழக்கமான காண்டினெண்டல் ஜிடி காரின் க்ரோம் பாகங்களுக்கு மாற்றாக கருப்பு நிற உள்ளீடுகள் வழங்கப்பட்டிருக்கலாம். இவற்றுடன் இந்த காரில் சேசிஸ் தொழிற்நுட்பத்தையும் பெண்ட்லீ நிறுவனம் திருத்தியமைத்துள்ளது.

இது நிச்சயமாக 2021 காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு காரின் ஹேண்டிலிங்கை மேம்படுத்தும். மற்றப்படி காரின் உட்புறத்தை இப்போதைக்கு தயாரிப்பு நிறுவனம் வெளிக்காட்டவில்லை, அறிமுக நாளில் தான் வெளியிட முடிவு செய்துள்ளது.

நமக்கு தெரிந்த வரையில், இந்த 2021 பெண்ட்லீ கார் மாடலின் உட்புறத்தில் அதிகளவில் கார்பன்-ஃபைபர் உள்ளீடுகள் கேபின் முழுக்க வழங்கப்படலாம். இந்த டீசர் படங்களுடன் புதிய காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு காரின் அறிமுக தேதி தொடர்பான வீடியோ ஒன்றினையும் பெண்ட்லீ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் காரின் உறுமும் எக்ஸாஸ்ட் சத்தத்தை கேட்க முடிந்தது. தற்சமயம் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி காரில் இரட்டை-டர்போ டபிள்யூ12 என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 626 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. அதுவே முந்தைய தலைமுறை காண்டினெண்டல் ஜிடி கார் அதிகப்பட்சமாக 633 பிஎச்பி ஆற்றலில் இயங்கும் விதத்தில் வழங்கப்பட்டது.

இதனால் புதிய காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு காரை அதிகப்பட்சமாக 650 பிஎச்பி-க்கும் அதிகமான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் உடன் எதிர்பார்க்கிறோம். எப்படியிருந்தாலும் இந்த ஸ்பீடு வெர்சன் காரில் எந்த மாதிரியான என்ஜின் வழங்கப்படவுள்ளது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.