மாருதி வேகன்ஆரின் விற்பனை படு ஜோர்!! ஸ்விஃப்ட், பலேனோவின் விற்பனை சரிந்தது!

கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றில் டாப்-10 கார்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி வேகன்ஆரின் விற்பனை படு ஜோர்!! ஸ்விஃப்ட், பலேனோவின் விற்பனை சரிந்தது!

கொரோனா வைரஸின் 2வது அலை பரவிவரும் நிலையில் கார் நிறுவனங்களின் விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் கொஞ்சம் சரிவை கண்டுள்ளது. இருப்பினும் 2020 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஏப்ரல் மாதம் எவ்வளவோ பரவாயில்லை.

மாருதி வேகன்ஆரின் விற்பனை படு ஜோர்!! ஸ்விஃப்ட், பலேனோவின் விற்பனை சரிந்தது!

ஏனெனில் அந்த மாதத்தில் விற்பனை என்பது முற்றிலுமாக தடைப்பட்டு இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் லிஸ்ட்டில் மாருதி சுஸுகியின் வேகன்ஆர் முதலிடத்தை பிடித்துள்ளது.

மாருதி வேகன்ஆரின் விற்பனை படு ஜோர்!! ஸ்விஃப்ட், பலேனோவின் விற்பனை சரிந்தது!

உயரம் அதிகம் கொண்ட ஹேட்ச்பேக் காரான மாருதி வேகன்ஆர் கடந்த மாதத்தில் 18,656 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு சில நூறு யூனிட்கள் மட்டுமே குறைவாக விற்கப்பட்ட மாருதி ஸ்விஃப்ட் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Rank Model Sales
1 Maruti Wagonr 18,656
2 Maruti Swift 18,316
3 Maruti Alto 17,303
4 Maruti Baleno 16,384
5 Maruti Dzire 14,073
6 Hyundai Creta 12,463
7 Hyundai Grand i10 11,540
8 Maruti Eeco 11,469
9 Hyundai Venue 11,245
10 Maruti Vitara Brezza 11,220
மாருதி வேகன்ஆரின் விற்பனை படு ஜோர்!! ஸ்விஃப்ட், பலேனோவின் விற்பனை சரிந்தது!

ஸ்விஃப்ட்டின் விற்பனை கடந்த சில மாதங்களாக 20 ஆயிரத்தை கடந்தப்படியாகவே ஒவ்வொரு மாதத்திலும் இருந்து வந்தது. ஆனால் அது கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடரவில்லை. 18,316 ஸ்விஃப்ட் கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மாருதி வேகன்ஆரின் விற்பனை படு ஜோர்!! ஸ்விஃப்ட், பலேனோவின் விற்பனை சரிந்தது!

மாருதி ஆல்டோ 17,303 மாதிரிகளின் விற்பனையுடன் இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இவற்றிற்கு அடுத்து தொடர்ந்து மாருதி சுஸுகியின் தயாரிப்புகளாக பலேனோ, டிசைர் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.

மாருதி வேகன்ஆரின் விற்பனை படு ஜோர்!! ஸ்விஃப்ட், பலேனோவின் விற்பனை சரிந்தது!

மாருதியின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோ கடந்த மாதத்தில் 16,384 யூனிட்களும், கம்பெக்ட் செடானான டிசைர் 14,073 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கு அடுத்து ஒரு வழியாக மாருதி அல்லாத காராக ஹூண்டாய் க்ரெட்டா ஆறாவது இடத்தில் உள்ளது.

மாருதி வேகன்ஆரின் விற்பனை படு ஜோர்!! ஸ்விஃப்ட், பலேனோவின் விற்பனை சரிந்தது!

இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராக உள்ள க்ரெட்டா கடந்த ஏப்ரலில் 12,463 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. ஏழாவது இடத்திலும் ஹூண்டாய் மோட்டார்ஸின் தயாரிப்பாக க்ராண்ட் ஐ10 உள்ளது.

மாருதி வேகன்ஆரின் விற்பனை படு ஜோர்!! ஸ்விஃப்ட், பலேனோவின் விற்பனை சரிந்தது!

சிறு சிறு வியாபாரங்களுக்கு மிகவும் ஏற்ற வாகனமான மாருதி ஈக்கோ 11,469 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்கப்பட்டுள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி இரு இடங்களை அதிகளவில் விற்பனையாகும் இரு காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிடித்துள்ளன.

மாருதி வேகன்ஆரின் விற்பனை படு ஜோர்!! ஸ்விஃப்ட், பலேனோவின் விற்பனை சரிந்தது!

9வது இடத்தில் ஹூண்டாய் வென்யூவும், 10வது இடத்தில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவும் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை முறையே 11,245 மற்றும் 11,220 ஆகும். வென்யூவை காட்டிலும் விட்டாரா பிரெஸ்ஸா வெறும் 25 யூனிட்கள் மட்டுமே குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Cars In April 2021, Maruti Wagon R Beats Swift, Alto, Baleno & Dzire.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X