ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல! ரொம்ப நாள் காத்திருப்பு காலம் கொண்ட டாப் 10 கார்கள்!

இந்தியாவில் அதிக நாட்கள் காத்திருப்பு காலம் கொண்ட டாப் 10 கார்கள் பற்றிய தகவலைப் பற்றி இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த முக்கிய விபரங்களை இப்பதிவில் காணலாம்.

ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல... ரொம்ப நாள் காத்திருப்பு காலம் டாப் 10 கார்கள்!

இந்திய இளைஞர்கள் மத்தியில் குறிப்பிட்ட சில கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதன் விளைவாக அக்குறிப்பிட்ட கார்களுக்கு காத்திருப்பு காலம் சற்று அதிகமாக காணப்படுகின்றது. அதாவது, அதிகளவில் புக்கிங் கிடைத்து வருவதால் குறிப்பிட்ட சில கார்களை கையில் பெற பல நாட்கள் (மாதங்கள்) காத்திருக்க வேண்டும் என்ற நிலை தென்படுகின்றது.

ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல... ரொம்ப நாள் காத்திருப்பு காலம் டாப் 10 கார்கள்!

மாத கணக்கில் sகாத்திருப்பு காலமா?.. அப்படி எந்த காருக்குங்க மாச கணக்குல காத்திருக்கணும்னு கேக்குறீங்களா. இதுகுறித்த தகவலைதான் நாம் இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். 2021 ஆகஸ்டு மாத நிலவரப்படி இத்தகவல் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல... ரொம்ப நாள் காத்திருப்பு காலம் டாப் 10 கார்கள்!

மஹிந்திரா தார்

நாட்டின் மிக மிக அதிக காத்திருப்பு காலத்தைக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் முதல் இடத்தை மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் பிடித்திருக்கின்றது. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதன் விளைவாக சுமார் ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலை நாட்டில் நிலவுகின்றது.

ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல... ரொம்ப நாள் காத்திருப்பு காலம் டாப் 10 கார்கள்!

மாநிலம் மற்றும் நகரத்தைப் பொருத்து இந்த காத்திருப்பு காலம் வேறுபட்டு காணப்படுகின்றன. இருப்பினும் பெரும்பாலான முக்கிய நகரங்களில் இக்காருக்கு காத்திருப்பு காலம் 12 மாதங்களாக காட்சியளிக்கின்றன. பலர் இத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பது தெரிந்தும் புக்கிங்கை செய்து வருகின்றனர்.

ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல... ரொம்ப நாள் காத்திருப்பு காலம் டாப் 10 கார்கள்!

ஹூண்டாய் க்ரெட்டா

ஹூண்டாய் க்ரெட்டா ஓர் நாட்டின் மிக சிறந்த விற்பனையாகும் எஸ்யூவி காராகும். இக்காருக்கு காத்திருப்பு காலம் 9 மாதங்கள் ஆகும். ஆம், இப்போது நீங்கள் புக் செய்தால் அதனையில் உங்கள் கையில் பெற 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல... ரொம்ப நாள் காத்திருப்பு காலம் டாப் 10 கார்கள்!

விலைக்கேற்ற தரம், பன்முக தேர்வு, அதிக சிறப்பு வசதிகள் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டும் இந்தியாவில் எஸ்யூவி வாகன சந்தையில் புரட்சியைச் செய்யும் வகையில் க்ரெட்டா விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.

ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல... ரொம்ப நாள் காத்திருப்பு காலம் டாப் 10 கார்கள்!

மாருதி சுசுகி எர்டிகா

மாருதி சுசுகி நிறுவனத்தின் மிக சிறந்த கார் தயாரிப்புகளில் எர்டிகாவும் ஒன்று. இது ஓர் எம்பிவி ரக காராகும். இந்தியாவில் அதிகம் விற்பனையைப் பெற்று வரும் எம்பிவி ரக கார்களில் இதுவே முதல் இடம். இதை உறுதிப்படுத்தும் வகையில் இக்காரின் காத்திருப்பு காலம் பற்றிய தகவல் அமைந்திருக்கின்றது.

ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல... ரொம்ப நாள் காத்திருப்பு காலம் டாப் 10 கார்கள்!

மாருதி சுசுகி எர்டிகா காருக்கு 8 மாதங்கள் வரை காத்திருப்பு காலும் நிலவுகின்றது. மாநிலம் மற்றும் நகரத்தைப் பொருத்து மூன்று மாதங்கள் தொடங்கி எட்டு மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுகிறது. இந்த காரை மாருதி நிறுவனம் சிஎன்ஜி தேர்விலும் விற்பனைக்கு வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல... ரொம்ப நாள் காத்திருப்பு காலம் டாப் 10 கார்கள்!

நிஸான் மேக்னைட்

நாட்டின் மலிவு விலை எஸ்யூவி ரக கார்களில் நிஸான் மேக்னைட் காரும் ஒன்று. அதிக கவர்ச்சியான தோற்றம், நவீன கால தொழில்நுட்ப அம்சங்கள் என எக்கசக்க சிறப்பு வசதிகளை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்தியர்கள் மத்தியில் நல்ல அமோகமான வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல... ரொம்ப நாள் காத்திருப்பு காலம் டாப் 10 கார்கள்!

இதனால் இக்காருக்கு இந்தியாவில் 7 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீடிக்கின்றது. நிஸான் மேக்னைட் புதிய கார் வாங்குவோர்களை வெகுவாக கவர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான் அதிகளவில் இக்காருக்கு காத்திருப்பு காலம் அதிகரித்திருக்கின்றது. டீலர், நகரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த காத்திருப்பு காலம் மாறுபட்டு காணப்படும்.

ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல... ரொம்ப நாள் காத்திருப்பு காலம் டாப் 10 கார்கள்!

கியா சொனெட்

கியா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் சொனெட். பன்முக எஞ்ஜின் தேர்வு மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஆகையால், இந்த காருக்கும் இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. அந்தவகையிில், சுமார் 5 மாதங்கள் வரை இக்காருக்கு காத்திருப்பு காலம் நிலவுகின்றது.

ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல... ரொம்ப நாள் காத்திருப்பு காலம் டாப் 10 கார்கள்!

கியா செல்டோஸ்

கியா நிறுவனத்தின் மற்றுமொரு அதிக காத்திருப்பு காலம் கொண்ட காராக செல்டோஸ் எஸ்யூவி இருக்கின்றது. இது ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி ரக வாகனமாகும். இப்பிரிவில் அதிகம் விற்பனையாகும் காராகவும் இது மாறியிருக்கின்றது. இக்காரை இப்போது புக் செய்தால் சுமார் 5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இதுவும், மாநிலம், நகரம் மற்றும் விற்பனையாளரைப் பொருத்து மாறுபடும்.

ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல... ரொம்ப நாள் காத்திருப்பு காலம் டாப் 10 கார்கள்!

டாடா நெக்ஸான்

டாடாவின் மிக அதிக பாதுகாப்பு திறன் கொண்ட காரே நெக்ஸான். குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் பரிசோதனையில் இக்கார் ஐந்திற்கு, ஐந்திற்கு ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. ஆகையால், மிகவும் நம்பகமான மற்றும் அதிக உறுதியான இந்திய தயாரிப்பாக இக்கார் மாறியிருக்கின்றது.

ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல... ரொம்ப நாள் காத்திருப்பு காலம் டாப் 10 கார்கள்!

இந்த நிலை இக்காரின் விற்பனையையும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஆகையால், சுமார் 5 மாதங்களாவது இக்காரை காத்திருந்து பெற வேண்டும் என்ற நிலை இந்தியாவில் நிலவுகின்றது. டாடா மோட்டார்ஸ் இக்காரை நெக்ஸான் இவி எனும் பெயரில் மின்சார வாகனமாகவும் விற்பனைக்கு வழங்குகின்றது.

ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல... ரொம்ப நாள் காத்திருப்பு காலம் டாப் 10 கார்கள்!

ரெனால்ட் கைகர்

நாட்டின் மற்றுமொரு மலிவு விலை எஸ்யூவி காராக ரெனால்ட் கைகர் இருக்கிறது. இந்த காருக்குக் கிடைத்து வரும் அமோக வரவேற்பின் காரணமாக நான்கு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக குறைந்த விலையிலான கவர்ச்சியான காராக இது இருக்கின்றது.

ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல... ரொம்ப நாள் காத்திருப்பு காலம் டாப் 10 கார்கள்!

எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ்

எம்ஜி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளாக ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் கார் மாடல்கள் இருக்கின்றன. ஹெக்டர் ப்ளஸ் மாடலானது மூன்று இருக்கை வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. இரு கார்களுக்கும் இந்தியாவில் 3 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் தென்படுகின்றது. வேரியண்ட், டீலர், நகரம் உள்ளிட்டவற்றை பொருத்து காத்திருப்பு காலம் மாறுபடுகின்றது.

ஆகஸ்டு மாதம் வந்தாச்சு இன்னும் காத்திருப்பு காலம் குறையல... ரொம்ப நாள் காத்திருப்பு காலம் டாப் 10 கார்கள்!

டாடா சஃபாரி

டாடா சஃபாரி நீண்ட வருடங்களுக்கு பின்னர் இந்தியாவில் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கின்றது. அரசியல்வாதிகளின் மிக பிரியமான கார் மாடலுக்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலை நாட்டில் நிலவுகின்றது.

Most Read Articles

English summary
Top 10 cars with highest waiting period in india in august 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X