விற்பனையில் No.1 இடத்தில் இருந்த மாருதி ஸ்விஃப்ட் 10வது இடத்திற்கு சரிந்த பரிதாபம்! டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்

கடந்த 2021 செப்டம்பரில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்கள் பற்றிய விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி அட்டவணையாக இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் No.1 இடத்தில் இருந்த மாருதி ஸ்விஃப்ட் 10வது இடத்திற்கு சரிந்த பரிதாபம்!! டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்...

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் கார்கள் விற்பனை பெரிய அளவில் 36.6% குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், நமக்கு அனைவருக்கும் தெரிந்ததுதான் உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை. ஹேட்ச்பேக் கார்கள் பிரிவிலும் பல மாடல்களது கடந்த மாத விற்பனை பெரியதாக, கவனிக்கத்தக்க அளவில் குறைந்துள்ளது.

விற்பனையில் No.1 இடத்தில் இருந்த மாருதி ஸ்விஃப்ட் 10வது இடத்திற்கு சரிந்த பரிதாபம்!! டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்...

வழக்கம்போல் கடந்த மாதத்திலும் மாருதி சுஸுகியின் ஹேட்ச்பேக் கார்களே அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இம்முறை மாருதி பலேனோவை முந்திக்கொண்டு மாருதி ஆல்டோ முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் ஏறக்குறைய 12,143 ஆல்டோ ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனையில் No.1 இடத்தில் இருந்த மாருதி ஸ்விஃப்ட் 10வது இடத்திற்கு சரிந்த பரிதாபம்!! டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்...

2020 செப்டம்பர் உடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் ஆல்டோ கார்களின் விற்பனை 33 சதவீதம் குறைந்துள்ளது. ஏனெனில் 2020 செப்டம்பரில் இந்த மலிவான ஹேட்ச்பேக் கார் மொத்தம் 18,246 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும் அந்த மாதத்தில் மூன்றாவது இடத்தையே ஆல்டோ பெற்றிருந்தது.

விற்பனையில் No.1 இடத்தில் இருந்த மாருதி ஸ்விஃப்ட் 10வது இடத்திற்கு சரிந்த பரிதாபம்!! டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்...
Rank Model Sep'21 Sep'20 Growth (%)
1 Maruti Alto 12,143 18,246 -33
2 Maruti Baleno 8,077 19,433 -58
3 Maruti WagonR 7,632 17,581 -57
4 Tata Altroz 5,772 5,952 -3
5 Hyundai i20 5,153 9,852 -48
6 Tata Tiago 5,121 6,080 -16
7 Hyundai Grand i10 4,168 10,385 -60
8 Maruti S-Presso 2,793 9,000 -69
9 Renault Kwid 2,710 4,513 -40
10 Maruti Swift 2,520 22,643 -88.87

இரண்டாவது இடத்தில் 19,433 யூனிட்களின் விற்பனை உடன் மாருதியின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோ இருந்தது. ஆனால் கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் 8,077 பலேனோ கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் பலேனோ கார்களின் விற்பனை 58% குறைந்துள்ளது.

விற்பனையில் No.1 இடத்தில் இருந்த மாருதி ஸ்விஃப்ட் 10வது இடத்திற்கு சரிந்த பரிதாபம்!! டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்...

பலேனோ மாடலாவது பரவாயில்லை, 2020 செப்டம்பரில் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் சுமார் 22,643 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு முதலிடத்தில் இருந்த மாருதி ஸ்விஃப்ட் கடந்த மாத லிஸ்ட்டில் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த மாதத்தில் வெறும் 2,520 ஸ்விஃப்ட் கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனையில் No.1 இடத்தில் இருந்த மாருதி ஸ்விஃப்ட் 10வது இடத்திற்கு சரிந்த பரிதாபம்!! டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்...

இதன்படி இந்தியர்கள் பிரதானமாக தேர்வு செய்யக்கூடிய ஸ்விஃப்ட் கார்களின் கடந்த மாத விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனம் சுமார் 88.87% சரிவை கண்டுள்ளது. தற்போது நாம் பார்த்து கொண்டிருக்கும் இந்த டாப்-10 லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை மாருதி வேகன்ஆர் 7,632 யூனிட்களின் விற்பனை உடன் பெற்றுள்ளது.

விற்பனையில் No.1 இடத்தில் இருந்த மாருதி ஸ்விஃப்ட் 10வது இடத்திற்கு சரிந்த பரிதாபம்! டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்

மாருதியின் உயரம் அதிகம் கொண்ட ஹேட்ச்பேக் காரான வேகன்ஆரின் விற்பனையும் 2020 செப்டம்பருடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் யூனிட்கள் குறைந்துள்ளது. உலகளாவிய குறைக்கடத்திகள் பற்றாக்குறையால் குறிப்பாக மாருதி சுஸுகி கார்களின் விற்பனை தான் பெரிய அளவில் சரிந்துள்ளது.

விற்பனையில் No.1 இடத்தில் இருந்த மாருதி ஸ்விஃப்ட் 10வது இடத்திற்கு சரிந்த பரிதாபம்! டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்

மற்ற நிறுவனங்களின் விற்பனை சற்று பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக டாடா மோட்டார்ஸ் கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் கவனிக்கத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ஹேட்ச்பேக் பிரிவை பொறுத்தவரையில், டாடா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் அல்ட்ராஸின் விற்பனை கடந்த மாதத்தில் நல்லப்படியாகவே இருந்துள்ளது.

விற்பனையில் No.1 இடத்தில் இருந்த மாருதி ஸ்விஃப்ட் 10வது இடத்திற்கு சரிந்த பரிதாபம்! டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்

2020 செப்டம்பர் உடன் ஒப்பிடுகையில் டாடா அல்ட்ராஸின் விற்பனை கடந்த செப்டம்பரில் வெறும் 3% மட்டுமே குறைந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 5,952 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த இந்த கார் கடந்த செப்டம்பர் மாதத்தில் 5,772 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த லிஸ்ட்டில் ஐந்தாவது இடத்தில் உள்ள ஹூண்டாய் ஐ20 கடந்த மாதத்தில் 5,153 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

விற்பனையில் No.1 இடத்தில் இருந்த மாருதி ஸ்விஃப்ட் 10வது இடத்திற்கு சரிந்த பரிதாபம்! டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள்

அதுவே 2020 செப்டம்பரில் 9,852 ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 6வது மற்றும் 7வது இடங்களில் இந்தியாவின் மலிவான பட்ஜெட் ரக ஹேட்ச்பேக் கார்களான டாடா டியாகோ மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ20 உள்ளன. இதில் கிராண்ட் ஐ10-இன் விற்பனை 2020 செப்டம்பரை காட்டிலும் கடந்த மாதத்தில் 60 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல் 8வது இடத்தில் உள்ள மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் விற்பனையும் சுமார் 69% சரிந்துள்ளது.

Most Read Articles
English summary
Top 10 Hatchback Cars Sold In Sep 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X