Just In
- just now
ஸ்கோடா ஆக்டேவியாவில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட்!! புதுமையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டது...
- 7 hrs ago
மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!
- 9 hrs ago
சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?
- 11 hrs ago
டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்!
Don't Miss!
- Sports
பிரிட் லீ ஸ்டைல்.. ஹைதராபாத்தை கலங்கடித்த இளம் பவுலர்.. இவரை உடனே வேர்ல்ட் கப் டி 20 டீம்ல எடுங்க!
- News
''எச்சரிக்கையாக இருங்க.. கூச் பிகார் போன்ற சம்பவம் இன்னும் அதிகம் நடக்கலாம்''.. சொல்வது பாஜக தலைவர்
- Finance
தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..!
- Movies
'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்
- Lifestyle
தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் மாருதி சுஸுகி!! ஸ்விஃப்ட், பலேனோ டாப்...
கடந்த மார்ச் மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எஸ்யூவி கார்களின் விற்பனையில் ஹூண்டாயின் ஆதிக்கம் என்றால், ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகியின் கை தான் எப்போதும் ஓங்கி இருக்கும்.

ஏனெனில் இந்த நிறுவனமே அதிக எண்ணிக்கையில் ஹேட்ச்பேக் கார்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக மாருதியின் ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ ஹேட்ச்பேக் கார்களுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Rank | Model | Mar'21 | Mar'20 | Growth (%) |
1 | Maruti Swift | 21,714 | 8,575 | 153 |
2 | Maruti Baleno | 21,217 | 11,406 | 86 |
3 | Maruti Wagonr | 18,757 | 9,151 | 105 |
4 | Maruti Alto | 17,401 | 10,829 | 61 |
5 | Hyundai Grand i10 NIOS | 11,020 | 4,293 | 156.7 |
6 | Hyundai i20 | 9,045 | 3,455 | 161.7 |
7 | Maruti S-Presso | 7,252 | 5,159 | 40.5 |
8 | Tata Altroz | 7,550 | 1,147 | 558 |
9 | Tata Tiago | 6,893 | 1,127 | 511 |
10 | Maruti Celerio | 4,720 | 4,010 | 17.7 |
இந்த டாப்-10 ஹேட்ச்பேக் லிஸ்ட்டில் முதலிடத்தில் உள்ள மாருதி ஸ்விஃப்ட் சமீபத்தில் வழங்கப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினால் 2020 மார்ச் மாதத்தை காட்டிலும் சுமார் 153 சதவீதம் அதிகமாக 21,714 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பலேனோவின் விற்பனையிலும் 86 சதவீத முன்னேற்றத்தை மாருதி சுஸுகி நிறுவனம் கண்டுள்ளது. ஸ்விஃப்ட்-ஐ போன்று இதன் விற்பனை எண்ணிக்கையும் 21 ஆயிரத்தை கடந்துள்ளது. இவை இரண்டும் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதத்திற்கும் 20 ஆயிரம் யூனிட்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றை தொடர்ந்து மாருதியின் உயரமான ஹேட்ச்பேக் காரான வேகன்ஆர் 18,757 யூனிட்கள் விற்பனையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஹேட்ச்பேக் கார்கள் என்று மட்டுமில்லாமல், இந்த மூன்று மாருதி கார்கள் தான் கடந்த 2021 மார்ச்சில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஒட்டு மொத்த கார்களின் லிஸ்ட்டிலும் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

அந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டா இருந்தது. ஆனால் அது எஸ்யூவி கார் என்பதால், இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தை மீண்டும் மாருதி காராக ஆல்டோ 61 சதவீத விற்பனை வளர்ச்சி உடன் பெற்றுள்ளது.

மாருதி கார்களின் இந்த தொடர் ஆதிக்கத்தை தொடர்ந்து ஒரு வழியாக ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் ஹூண்டாய் மோட்டார்ஸின் க்ராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஐ20 ஹேட்ச்பேக் கார்களை பார்க்க முடிகிறது. இவற்றின் கடந்த மாத விற்பனை 11,020 மற்றும் 9,045 ஆகும்.

மாருதி சுஸுகியின் சிறிய ரக ஹேட்ச்பேக் காராக விற்பனை செய்யப்பட்டு வரும் எஸ்-பிரெஸ்ஸோ 7,252 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. இது இதன் 2020 மார்ச் மாத விற்பனை எண்ணிக்கை உடன் 40.5 சதவீதம் அதிகமாகும்.

8வது மற்றும் 9வது இடங்களில் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காராக விளங்கும் டாடா அல்ட்ராஸும், டாடா டியாகோவும் உள்ளன. இவற்றின் விற்பனை எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில் 1,100 என்ற அளவில் தான் இருந்துள்ளது. ஆனல் தற்போது 7 ஆயிரம் வரையில் அதிகரித்துள்ளது.

இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 10வது இடத்தில் மாருதி சுஸுகி செலிரியோ 4,720 யூனிட் கார்களின் விற்பனை உடன் உள்ளது. 2020 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனையில் பெரிய அளவில் மாற்றமில்லை. கொரோனா வைரஸ் பரவலினால் 2020 மார்ச் மாதத்தில் பெரும்பான்மையான கார்களின் விற்பனை எண்ணிக்கை குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.