தயாரிப்பு பணிகள் குறைந்த போதிலும், ஹேட்ச்பேக் விற்பனையில் முதலிடத்தில் மாருதி சுஸுகி!! டாப்-10 ஹேட்ச்பேக்ஸ்

கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தயாரிப்பு பணிகள் குறைந்த போதிலும், ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் முதலிடத்தில் மாருதி சுஸுகி!! டாப்-10 ஹேட்ச்பேக்ஸ்

பயணிகள் வாகன சந்தை கடந்த மாதத்தில் 36.6 சதவீதம் என்கிற பெரிய அளவிலான சரிவை 2020 செப்டம்பர் உடன் ஒப்பிடுகையில் அடைந்துள்ளது. இதற்கான காரணம் நம்மில் பெரும்பாலானோர்க்கு தெரிந்ததுதான், குறைக்கடத்திகளின் பற்றாக்குறை.

தயாரிப்பு பணிகள் குறைந்த போதிலும், ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் முதலிடத்தில் மாருதி சுஸுகி!! டாப்-10 ஹேட்ச்பேக்ஸ்

இதன் காரணமாக பல முன்னணி நிறுவனங்களது தயாரிப்பு பணிகள் தடைப்பட்டன. இது ஹேட்ச்பேக் கார்களின் விற்பனையிலும் எதிரொலித்துள்ளது. நாம் இந்த செய்தியில் பார்க்க போகும் சிறந்த பத்து ஹேட்ச்பேக் கார்களில் பாதி, அதாவது ஐந்து வழக்கம்போல் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும்.

தயாரிப்பு பணிகள் குறைந்த போதிலும், ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் முதலிடத்தில் மாருதி சுஸுகி!! டாப்-10 ஹேட்ச்பேக்ஸ்

இந்த வரிசையில் மாருதி சுஸுகியின் ஆல்டோ 12,143 யூனிட்களின் விற்பனையுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இருப்பினும் உண்மையில் இந்த எண்ணிக்கை 33 சதவீதம் குறைவு. ஏனெனில் 2020 செப்டம்பரில் மொத்தம் 18,246 மைக்ரோ ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

தயாரிப்பு பணிகள் குறைந்த போதிலும், ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் முதலிடத்தில் மாருதி சுஸுகி!! டாப்-10 ஹேட்ச்பேக்ஸ்

இரண்டாவது இடத்தில் மற்றொரு மாருதி தயாரிப்பான பலேனோ உள்ளது. கடந்த மாதத்தில் இந்த ஹேட்ச்பேக் கார் 8,077 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவும் 2020 செப்டம்பருடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 58% குறைவாகும். ஏனென்றால் அந்த மாதத்தில் சுமார் 19,433 பலேனோ கார்கள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

தயாரிப்பு பணிகள் குறைந்த போதிலும், ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் முதலிடத்தில் மாருதி சுஸுகி!! டாப்-10 ஹேட்ச்பேக்ஸ்

மாருதி வேகன்ஆர் மூன்றாவது இடத்தை தனதாக்கியுள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட வேகன்ஆர் கார்களின் எண்ணிக்கை 7,632 ஆகும். ஆனால் 2020 செப்டம்பரில் 17,581 வேகன்ஆர் கார்கள் விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்த மற்றொரு பிரபலமான மாருதி காரின் விற்பனை 57 சதவீதம் குறைந்துள்ளது.

தயாரிப்பு பணிகள் குறைந்த போதிலும், ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் முதலிடத்தில் மாருதி சுஸுகி!! டாப்-10 ஹேட்ச்பேக்ஸ்

குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் குறிப்பாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்ட போதிலும். மற்ற ஹேட்ச்பேக் கார்களுக்கு விற்பனையில் மாருதி ஹேட்ச்பேக் கார்கள் தான் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகின்றன. இத்தனைக்கும் மற்ற நிறுவனங்களின் தயாரிப்பு பணிகள் கடந்த மாதங்களில் பெரிதாக பாதிக்கப்படவில்லை.

தயாரிப்பு பணிகள் குறைந்த போதிலும், ஹேட்ச்பேக் விற்பனையில் முதலிடத்தில் மாருதி சுஸுகி!! டாப்-10 ஹேட்ச்பேக்ஸ்

இதற்கு உதாரணமாக, டாடா அல்ட்ராஸ் அதிகம் விற்பனையாகும் இந்த டாப்-10 ஹேட்ச்பேக்குகள் லிஸ்ட்டில் நான்காவது இடத்தில் உள்ளது. 2020 செப்டம்பரில் 5,952 அல்ட்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில் கடந்த மாதத்தில் 5,772 அல்ட்ராஸ் கார்கள் விற்கப்பட்டுள்ளன. இதன்படி பார்க்கும்போது அல்ட்ராஸ் கார்களின் விற்பனை வெறும் 3.02 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளதை அறியலாம்.

தயாரிப்பு பணிகள் குறைந்த போதிலும், ஹேட்ச்பேக் விற்பனையில் முதலிடத்தில் மாருதி சுஸுகி!! டாப்-10 ஹேட்ச்பேக்ஸ்

மாருதி சுஸுகிக்கு அடுத்தப்படியாக விற்பனையில் சரிவை கண்டுள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 ஹேட்ச்பேக் மாடல் 5,153 யூனிட்களின் விற்பனை உடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அதுவே 2020 செப்டம்பரில் மொத்தம் 9,852 ஐ20 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

தயாரிப்பு பணிகள் குறைந்த போதிலும், ஹேட்ச்பேக் விற்பனையில் முதலிடத்தில் மாருதி சுஸுகி!! டாப்-10 ஹேட்ச்பேக்ஸ்

ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களில் மீண்டும் டாடா & ஹூண்டாய் கார்களாக டியாகோ மற்றும் ஐ10 நியோஸ் கார்கள் உள்ளன. இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், அல்ட்ராஸ் & ஐ20 மாடல்கள் சற்று விலைமிக்க பிரீமியம் தர ஹேட்ச்பேக் கார்கள், இவை முன்னிலையில் உள்ளன. டியாகோ மற்றும் ஐ10 நியோஸ் என்ற மலிவான ஹேட்ச்பேக் கார்கள் பின்தங்கி உள்ளன.

தயாரிப்பு பணிகள் குறைந்த போதிலும், ஹேட்ச்பேக் விற்பனையில் முதலிடத்தில் மாருதி சுஸுகி!! டாப்-10 ஹேட்ச்பேக்ஸ்

கடந்த செப்டம்பர் மாதத்தில் 5,121 டாடா டியாகோ கார்களும், 4,168 ஐ10 நியோஸ் கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதிலிலும் குறிப்பாக ஐ10 நியோஸின் விற்பனை 2020 செப்டம்பரை காட்டிலும் பெரிய அளவில் 59.87% குறைந்துள்ளது. இவற்றிற்கு அடுத்துள்ள மாடல்கள் 3 ஆயிரத்திற்கும் குறைவான யூனிட்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தயாரிப்பு பணிகள் குறைந்த போதிலும், ஹேட்ச்பேக் விற்பனையில் முதலிடத்தில் மாருதி சுஸுகி!! டாப்-10 ஹேட்ச்பேக்ஸ்

2,793 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்கப்பட்டுள்ள மாருதி எஸ்-பிரெஸ்ஸோ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2,793 யூனிட்கள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 9வது இடத்தில் ரெனால்ட் க்விட் உள்ளது. கடந்த மாதத்தில் 2,710 க்விட் கார்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஏதோ ஒரு ஹேட்ச்பேக் கார் குறைவது போல் உங்களுக்கு தோன்றலாம்.

தயாரிப்பு பணிகள் குறைந்த போதிலும், ஹேட்ச்பேக் விற்பனையில் முதலிடத்தில் மாருதி சுஸுகி!! டாப்-10 ஹேட்ச்பேக்ஸ்

அதுதான், மாருதி சுஸுகியின் தற்கால சிறந்த விற்பனை மாடல்களுள் ஒன்றான ஸ்விஃப்ட். வருடம்-வருடம் ஒப்பிடுகையில் சுமார் 88.87 சதவீத வீழ்ச்சியை விற்பனையில் இந்த கார் கண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் கிட்டத்தட்ட 22,643 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் வெறும் 2,520 ஸ்விஃப்ட் கார்களே விற்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top-10 Hatchbacks September 2021, Maruti Suzuki dominates.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X