எஸ்யூவி விற்பனையில் 2வது இடத்திற்கு சரிந்த ஹூண்டாய் க்ரெட்டா!! நீண்ட மாதங்களுக்கு பிறகு முதலிடத்தில் செல்டோஸ்

கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை அட்டவணையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எஸ்யூவி விற்பனையில் 2வது இடத்திற்கு சரிந்த ஹூண்டாய் க்ரெட்டா!! நீண்ட மாதங்களுக்கு பிறகு முதலிடத்தில் செல்டோஸ்

கடந்த சில மாதங்களுக்கு முன்பெல்லாம் அதிகம் விற்பனையாகும் நடுத்தர-அளவு எஸ்யூவி கார் எதுவென்று கேட்டால் ஹூண்டாய் க்ரெட்டா என்றுதான் பெரும்பாலானோர் சொல்வர். ஆனால் கடந்த செப்டம்பர் மாத விற்பனையில் க்ரெட்டாவை இரண்டாவது இடத்திற்கு தள்ளி கியா செல்டோஸ் முதல் இடத்திற்கு வந்துள்ளது.

எஸ்யூவி விற்பனையில் 2வது இடத்திற்கு சரிந்த ஹூண்டாய் க்ரெட்டா!! நீண்ட மாதங்களுக்கு பிறகு முதலிடத்தில் செல்டோஸ்

கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 9,583 செல்டோஸ் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரிலும் விற்பனையில் 9 ஆயிரம் யூனிட்களை செல்டோஸ் கடந்திருந்தது. 2020 செப்டம்பரில் விற்பனை செய்யப்பட்ட செல்டோஸ் கார்களின் எண்ணிக்கை 9,079 ஆகும். இந்த வகையில் செல்டோஸ் கார்களின் விற்பனை 6 சதவீதம் அதிகரித்துள்ளது.

எஸ்யூவி விற்பனையில் 2வது இடத்திற்கு சரிந்த ஹூண்டாய் க்ரெட்டா!! நீண்ட மாதங்களுக்கு பிறகு முதலிடத்தில் செல்டோஸ்

8,193 யூனிட்களின் விற்பனை உடன் இம்முறை இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ள ஹூண்டாய் க்ரெட்டா 2020 செப்டம்பரில் சுமார் 12,325 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் அல்ல, மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எல்லா மாதங்களிலும் இத்தகைய இமாலய விற்பனை எண்ணிக்கைகளுடன் க்ரெட்டா தான் முதலிடத்தை பிடித்துவந்தது.

எஸ்யூவி விற்பனையில் 2வது இடத்திற்கு சரிந்த ஹூண்டாய் க்ரெட்டா!! நீண்ட மாதங்களுக்கு பிறகு முதலிடத்தில் செல்டோஸ்

2020 மார்ச்சில், குறிப்பிடத்தக்க அப்கிரேட்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு கிட்டத்தட்ட 1.5 வருடங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து அமோக வரவேற்பு கிடைத்துவந்தது உண்மையில் ஆச்சிரியப்பட வேண்டிய விஷயமாகும். இப்போதுக்கூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை, கடந்த செப்டம்பரில் விற்பனையில் பின்தங்கினால் என்ன... இந்த அக்டோபரில் மீண்டும் முதலிடத்திற்கு இந்த ஹூண்டாய் எஸ்யூவி கார் வரலாம்.

எஸ்யூவி விற்பனையில் 2வது இடத்திற்கு சரிந்த ஹூண்டாய் க்ரெட்டா!! நீண்ட மாதங்களுக்கு பிறகு முதலிடத்தில் செல்டோஸ்

2020 செப்டம்பர் உடன் ஒப்பிடுகையில் கடந்த 2021 செப்டம்பரில் விற்பனையில் க்ரெட்டா சுமார் 34 சதவீத சரிவை அடைந்துள்ளது. இந்திய நடுத்தர-அளவு எஸ்யூவி பிரிவில் இந்த இரு தென்கொரிய மாடல்களுக்கு இடையே தான் கடந்த பல மாதங்களாக கடுமையான போட்டி நிலவி வருகிறது. இவற்றிற்கு அடுத்துள்ளவை 5 ஆயிரம் யூனிட்களுக்கே தொலைத்தூரத்தில் உள்ளன.

எஸ்யூவி விற்பனையில் 2வது இடத்திற்கு சரிந்த ஹூண்டாய் க்ரெட்டா!! நீண்ட மாதங்களுக்கு பிறகு முதலிடத்தில் செல்டோஸ்

எந்த அளவிற்கு என்றால், மூன்றாவது இடத்தில் உள்ள டாடா ஹெரியர் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கை 2,821 ஆகும். ஆனால் உண்மையில் ஹெரியரின் விற்பனை 2020 செப்டம்பரை காட்டிலும் 61% அதிகரித்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் 1,755 டாடா ஹெரியர் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

Rank Midsize SUVs Sep 2021 Sep 2020 Growth (%)
1 Kia Seltos 9,583 9,079 6
2 Hyundai Creta 8,193 12,325 -34
3 Tata Harrier 2,821 1,755 61
4 MG Hector 2,722 2,410 13
5 Mahindra Scorpio 2,588 3,527 -27
6 Skoda Kushaq 2,158 - -
7 Hyundai Alcazar 1,929 - -
8 Maruti S-Cross 1,529 2,098 -27
9 Tata Safari 1,500 - -
10 VW Taigun 1,461 - -
11 Mahindra XUV700 1,370 - -
12 Jeep Compass 1,311 554 137
13 Nissan Kicks 371 58 540
14 Renalut Duster 275 133 107
15 MG ZS EV 227 127 79
16 Mahindra XUV500 160 595 -73
17 Hyundai Kona EV 1 29 -97
எஸ்யூவி விற்பனையில் 2வது இடத்திற்கு சரிந்த ஹூண்டாய் க்ரெட்டா!! நீண்ட மாதங்களுக்கு பிறகு முதலிடத்தில் செல்டோஸ்

நான்காவது இடத்தில் எம்ஜி ஹெக்டர் 2,722 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஹெக்டரின் விற்பனையும் 13% உயர்ந்துள்ளது. ஐந்தாவது இடத்தை மஹிந்திராவின் நீண்ட-கால எஸ்யூவி மாடலான ஸ்கார்பியோ பெற்றுள்ளது. இவற்றிற்கு அடுத்துள்ள மாடல்கள் ஸ்கோடா குஷாக், ஹூண்டாய் அல்கஸார், டாடா சஃபாரி, ஃபோக்ஸ்வேகன் டைகுன் மஹிந்திரா எக்ஸ்யூவி700 என இந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, சந்தைக்கு புதிய மாடல்களாக உள்ளன.

எஸ்யூவி விற்பனையில் 2வது இடத்திற்கு சரிந்த ஹூண்டாய் க்ரெட்டா!! நீண்ட மாதங்களுக்கு பிறகு முதலிடத்தில் செல்டோஸ்

சரியாக இவை நான்கிற்கும் மத்தியில் மாருதி எஸ்-கிராஸ் (1,529 யூனிட்கள்) 8வது இடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களாக குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பு பணிகள் பெரிய அளவில் பாதிப்படைந்து வருகின்றன. இது எஸ்-கிராஸ் எஸ்யூவி மாடலின் விற்பனையிலும் எதிரொலித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top-10 Midsize SUVs In Sep 2021, Kia Seltos beat Hyundai Creta.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X