Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹேட்ச்பேக் கார் வாங்க போறீங்களா? இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்கள் எதுன்னு தெரிஞ்சுகோங்க...
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி ஆல்டோ முதல் இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18,140 ஆல்டோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் 15,489 ஆக மட்டுமே இருந்தது. இது 17 சதவீத வளர்ச்சியாகும்.

இரண்டாவது இடத்தை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18,131 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 14,769 ஆக மட்டுமே இருந்தது. இது 23 சதவீத வளர்ச்சியாகும். ஆல்டோவிடம், ஸ்விஃப்ட் நூலிழையில் முதலிடத்தை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18,464 பலேனோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் 2020ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 18,030 ஆக குறைந்துள்ளது. இது 2 சதவீத வீழ்ச்சியாகும். என்றாலும் இது மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கை என்பதில் சந்தேகமில்லை.

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி வேகன் ஆர் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17,684 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் 2019ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை வெறும் 10,781 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 64 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது தொடர்பாக மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

இந்தியாவில் கடந்த டிசம்பரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் 5வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் 10,263 கிராண்ட் ஐ10 நியோஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் 2019ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 7,598 ஆக மட்டுமே இருந்தது. இது 35 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் 6வது இடத்தை ஹூண்டாய் ஐ20 பிடித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் 8,004 ஐ20 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் 2019ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 7,740 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 3 சதவீத வளர்ச்சியை ஹூண்டாய் ஐ20 பதிவு செய்துள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த பட்டியலில் 7வது இடத்தை மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 8,394 எஸ்-பிரெஸ்ஸோ கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டு டிசம்பரில் 6,787 ஆக குறைந்துள்ளது. இது 19 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 8வது இடத்தை மாருதி சுஸுகி செலிரியோ பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் 6,660 செலிரியோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 5,429 ஆக இருந்தது. இது 23 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் 9வது இடத்தை டாடா அல்ட்ராஸ் பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் டாடா நிறுவனம் 6,600 அல்ட்ராஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை 2019ம் ஆண்டு டிசம்பருடன் ஒப்பிட முடியாது.

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா அல்ட்ராஸ் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. அதன் விற்பனை சிறப்பாக இருந்து வருவதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை டாடா டியாகோ பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா நிறுவனம் 6,066 டியாகோ கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 4,558 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 33 சதவீத வளர்ச்சியை டாடா டியாகோ பதிவு செய்துள்ளது. டாடா அல்ட்ராஸை போலவே டாடா டியாகோ காரும் மிகவும் பாதுகாப்பானது. சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை டாடா டியாகோ பலமுறை காப்பாற்றியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.