கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... கெத்து காட்டிய டாடா தயாரிப்புகள்...

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... கெத்து காட்டிய டாடா தயாரிப்புகள்...

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 20,264 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை வெறும் 18,696 ஆக மட்டுமே இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... கெத்து காட்டிய டாடா தயாரிப்புகள்...

இதன் மூலம் விற்பனையில் 8 சதவீத வளர்ச்சியை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் பதிவு செய்துள்ளது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெகு சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே வரும் நாட்களில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... கெத்து காட்டிய டாடா தயாரிப்புகள்...

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 20,070 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 16,585 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 21 சதவீத வளர்ச்சியை மாருதி சுஸுகி பலேனோ பதிவு செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... கெத்து காட்டிய டாடா தயாரிப்புகள்...

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி வேகன் ஆர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரியில் 18,728 மாருதி சுஸுகி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்தாண்டு பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 18,235 ஆக இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 3 சதவீத வளர்ச்சியை வேகன் ஆர் பதிவு செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... கெத்து காட்டிய டாடா தயாரிப்புகள்...

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஆல்டோ 4வது இடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் 17,921 ஆக இருந்த ஆல்டோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 16,919 ஆக குறைந்துள்ளது. இது 6 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 5வது இடத்தை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் பிடித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... கெத்து காட்டிய டாடா தயாரிப்புகள்...

கடந்தாண்டு பிப்ரவரியில் 10,407 இருந்த கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 10,270 ஆக சரிந்துள்ளது. இது 1.3 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 6வது இடத்தை ஹூண்டாய் ஐ20 பிடித்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் 8,766 ஆக இருந்த ஹூண்டாய் ஐ20 காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 9,001 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... கெத்து காட்டிய டாடா தயாரிப்புகள்...

இது 2.6 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் 7வது இடத்தை மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ பிடித்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் 9,578 ஆக இருந்த எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 7,040 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 26 சதவீத வீழ்ச்சியை எஸ்-பிரெஸ்ஸோ பதிவு செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... கெத்து காட்டிய டாடா தயாரிப்புகள்...

இந்த பட்டியலில் டாடா அல்ட்ராஸ் 8வது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் 2,806 ஆக இருந்த டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 6,832 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 143.4 சதவீத வளர்ச்சியை டாடா அல்ட்ராஸ் பதிவு செய்துள்ளது. இது மிக பிரம்மாண்டமான விற்பனை வளர்ச்சியாகும்.

கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... கெத்து காட்டிய டாடா தயாரிப்புகள்...

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா அல்ட்ராஸ் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. மிக சிறப்பான பாதுகாப்பு அம்சங்களே டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை உயர்ந்து வருவதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் 9வது இடத்தை டாடா டியாகோ பிடித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... கெத்து காட்டிய டாடா தயாரிப்புகள்...

கடந்தாண்டு பிப்ரவரியில் வெறும் 3,921 ஆக இருந்த டாடா டியாகோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 6,787 ஆக உயர்ந்துள்ளது. இது 73 சதவீத வளர்ச்சியாகும். டாடா அல்ட்ராஸ் காரை போலவே, டாடா டியாகோவும் பாதுகாப்பானதுதான். விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை டாடா டியாகோ பலமுறை காப்பாற்றியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... கெத்து காட்டிய டாடா தயாரிப்புகள்...

இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை மாருதி சுஸுகி செலிரியோ பிடித்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 6,214 செலிரியோ கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது 2 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Top 10 Most Sold Hatchbacks In February 2021 - Maruti Suzuki Swift Leads Chart. Read in Tamil
Story first published: Friday, March 5, 2021, 17:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X