Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாதுகாப்பானவை என்ற அடையாளத்துடன், ஹேட்ச்பேக் கார்களை விற்றுத்தள்ளும் டாடா!! ஆனாலும் மாருதிதான் டாப்...
கடந்த 2021 ஜனவரி மாதத்தில் அதிகளவில் விற்பனையான டாப்-10 ஹேட்ச்பேக் கார்களின் பெயர்கள் அவற்றின் விற்பனை எண்ணிக்கையுடன் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹேட்ச்பேக் மட்டுமின்றி ஒட்டு மொத்தமாக கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு முதலிடத்தில் இருக்கும் மாருதி ஆல்டோ ஹேட்ச்பேக் கார்தான் இந்த லிஸ்ட்டிலும் முதலிடத்தை வகிக்கிறது.

இவ்வாறு பல லிஸ்ட்களில் முதலிடம் வகித்தாலும், ஆல்டோவின் விற்பனை உண்மையில் கடந்த 2020 ஜனவரியை காட்டிலும் கடந்த ஜனவரி மாதத்தில் 3.45 சதவீதம் குறைந்துள்ளது. ஆல்டோவின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 18,260 ஆகும்.

அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள மாருதி ஸ்விஃப்ட்டின் விற்பனையும் 14 சதவீதம் அளவில் குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் 17,180 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள ஸ்விஃப்ட் 2020 ஜனவரியில் 19,981 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

சில வெளிப்புற தோற்ற மாறுபாடுகள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் ஸ்விஃப்ட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Rank | Model | Jan'21 | Jan'20 | Growth (%) |
1 | Maruti Alto | 18,260 | 18,914 | -3.45 |
2 | Maruti Swift | 17,180 | 19,981 | -14.01 |
3 | Maruti WagonR | 17,165 | 15,232 | 12.69 |
4 | Maruti Baleno | 16,648 | 20,485 | -18.73 |
5 | Hyundai Grand i10 NIOS | 10,865 | 8,774 | 24 |
6 | Hyundai i20 | 8,505 | 8,137 | 5 |
7 | Tata Altroz | 7,378 | 4,505 | 64 |
8 | Maruti Celerio | 6,963 | 6,236 | 12 |
9 | Tata Tiago | 6,909 | 4,313 | 60 |
10 | Maruti S-Presso | 6,893 | 6,971 | -1 |

ஆல்டோ, ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்குகளின் விற்பனை சற்று குறைந்திருந்தாலும், மாருதியின் மற்றொரு பிரபலமான ஹேட்ச்பேக் மாடலான வேகன்ஆரின் விற்பனை 2020 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் 12.69 சதவீதம் அதிகரித்துள்ளது.

அந்த மாதத்தில் 15,232 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்த இந்த கார் 2021 ஜனவரியில் 17,165 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. டாடா அல்ட்ராஸ், 2020 ஹூண்டாய் ஐ20 போன்ற கார்களுடன் விற்பனையில் மல்லுக்கட்டிவரும் மாருதி பலேனோ கடந்த ஜனவரி மாதத்தில் 16,648 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் 2020 ஜனவரி இதன் விற்பனை 20 ஆயிரத்தை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவை நான்கும் சேர்த்து மொத்தமாக 6 மாருதி ஹேட்ச்பேக் கார்கள் இந்த டாப்-10 லிஸ்ட்டை ஆக்கிரமித்துள்ளன. மீதி இரண்டு கார்களில் மாருதி செலேரியோ 6,963 யூனிட்கள் (+12%) விற்பனையுடன் 8வது இடத்திலும், எஸ்-பிரெஸ்ஸோ 6,893 யூனிட்கள் விற்பனையுடன் கடைசி பத்தாவது இடத்திலும் உள்ளன.

இந்த மாருதி சுஸுகி தயாரிப்புகளை தவிர்த்து பார்த்தோமேயானால், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஐ20 முறையே 5வது மற்றும் 6வது இடங்களிலும், டாடா மோட்டார்ஸின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரான அல்ட்ராஸ் சுமார் 64 சதவீத விற்பனை முன்னேற்றத்துடன் 7வது இடத்திலும், டாடா டியாகோ 60 சதவீத முன்னேற்றத்துடன் 9வது இடத்திலும் உள்ளன.