கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி எது தெரியுமா? டாப்-10 பட்டியலுக்குள் நுழைந்தது மேக்னைட்

2021ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி எது தெரியுமா? டாப்-10 பட்டியலுக்குள் நுழைந்தது மேக்னைட்

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹூண்டாய் கிரெட்டா மிட்-சைஸ் எஸ்யூவி முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் ஹூண்டாய் நிறுவனம் 12,284 கிரெட்டா எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் 2020ம் ஆண்டு ஜனவரியில் இந்த எண்ணிக்கை வெறும் 6,900 ஆக மட்டுமே இருந்தது.

கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி எது தெரியுமா? டாப்-10 பட்டியலுக்குள் நுழைந்தது மேக்னைட்

இதன் மூலம் 78.02 சதவீதம் என்ற மிக பிரம்மாண்டமான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்திருப்பதுடன், டாப்-10 பட்டியலில் ஹூண்டாய் கிரெட்டா முதல் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது. இந்த டாப்-10 பட்டியலில் அதே ஹூண்டாய் நிறுவனத்தின் வெனியூ சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி எது தெரியுமா? டாப்-10 பட்டியலுக்குள் நுழைந்தது மேக்னைட்

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் ஹூண்டாய் நிறுவனம் 11,779 வெனியூ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் இந்த எண்ணிக்கை வெறும் 6,733 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் 74.94 சதவீதம் என்ற மிக பிரம்மாண்டமான விற்பனை வளர்ச்சியை ஹூண்டாய் வெனியூ பதிவு செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி எது தெரியுமா? டாப்-10 பட்டியலுக்குள் நுழைந்தது மேக்னைட்

கிரெட்டா மற்றும் வெனியூ ஆகிய இரண்டு எஸ்யூவிகளும் ஹூண்டாய் நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளன. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 10,623 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி எது தெரியுமா? டாப்-10 பட்டியலுக்குள் நுழைந்தது மேக்னைட்

சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவியான இதன் விற்பனை எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் 10,134 ஆக இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 4.82 சதவீத வளர்ச்சியை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் கியா செல்டோஸ் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் கியா நிறுவனம் 9,869 செல்டோஸ் மிட்-சைஸ் எஸ்யூவிகளை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி எது தெரியுமா? டாப்-10 பட்டியலுக்குள் நுழைந்தது மேக்னைட்

ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் இந்த எண்ணிக்கை 15,000 ஆக இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 34.20 சதவீத வீழ்ச்சியை கியா செல்டோஸ் பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் கியா சொனெட் 5வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் கியா நிறுவனம் 8,859 சொனெட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி எது தெரியுமா? டாப்-10 பட்டியலுக்குள் நுழைந்தது மேக்னைட்

கியா சொனெட் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி 6வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் டாடா நிறுவனம் 8,225 நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி எது தெரியுமா? டாப்-10 பட்டியலுக்குள் நுழைந்தது மேக்னைட்

ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 3,382 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 143.19 சதவீதம் என்ற மிக பிரம்மாண்ட வளர்ச்சியை டாடா நெக்ஸான் பதிவு செய்துள்ளது. டாப்-10 பட்டியலில் உள்ள கார்களிலேயே அதிக விற்பனை வளர்ச்சியை பதிவு செய்திருப்பது நெக்ஸான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி எது தெரியுமா? டாப்-10 பட்டியலுக்குள் நுழைந்தது மேக்னைட்

இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 4,612 எக்ஸ்யூவி300 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் இந்த எண்ணிக்கை 3,360 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 37.26 சதவீத வளர்ச்சியை எக்ஸ்யூவி300 பதிவு செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி எது தெரியுமா? டாப்-10 பட்டியலுக்குள் நுழைந்தது மேக்னைட்

இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை மஹிந்திரா ஸ்கார்பியோ பிடித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 4,081 ஸ்கார்பியோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் 2020ம் ஆண்டு ஜனவரியில் இந்த எண்ணிக்கை 5,316 ஆக இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 23.23 சதவீத வீழ்ச்சியை மஹிந்திரா ஸ்கார்பியோ சந்தித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி எது தெரியுமா? டாப்-10 பட்டியலுக்குள் நுழைந்தது மேக்னைட்

மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி காரின் புதிய தலைமுறை மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. டொயோட்டா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 3,075 அர்பன் க்ரூஸர் கார்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி எது தெரியுமா? டாப்-10 பட்டியலுக்குள் நுழைந்தது மேக்னைட்

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனான டொயோட்டா அர்பன் க்ரூஸர் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை நிஸான் மேக்னைட் பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் நிஸான் நிறுவனம் 3,011 மேக்னைட் கார்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி எது தெரியுமா? டாப்-10 பட்டியலுக்குள் நுழைந்தது மேக்னைட்

நிஸான் நிறுவனம் மேக்னைட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த மாதத்திலேயே டாப்-10 பட்டியலில் நிஸான் மேக்னைட் இடம்பிடித்து விட்டது. தற்போது இந்த காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Most Read Articles
English summary
Top 10 Most Sold SUVs In January 2021 - Tata Nexon Registers 143.19 Per cent Growth. Read in Tamil
Story first published: Wednesday, February 3, 2021, 10:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X