Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எஸ்யூவி கார் இருந்தாலே தனி கெத்துதான்... இந்தியர்கள் அதிகம் வாங்கும் டாப்-10 மாடல்கள் எது எதுன்னு தெரியுமா?
2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்களின் டாப்-10 பட்டியல் வெளியாகியுள்ளளது. இதில், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவியான ஹூண்டாய் வெனியூ முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 12,313 வெனியூ கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 9,521 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் 29 சதவீத விற்பனை வளர்ச்சியுடன், இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி என்ற பெருமையை ஹூண்டாய் வெனியூ பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை அதே சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டை சேர்ந்த மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா பெற்றுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 12,251 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. நூலிழையில் முதலிடத்தை ஹூண்டாய் வெனியூவிடம் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா விட்டு கொடுத்துள்ளது. இதுதவிர மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 13,658 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது என்னும் நிலையில், 2020ம் ஆண்டு டிசம்பரில் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது. மூன்றாவது இடத்தை ஹூண்டாய் கிரெட்டா பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் 6,713 ஆக இருந்த ஹூண்டாய் கிரெட்டாவின் விற்பனை எண்ணிக்கை 2020ம் ஆண்டு டிசம்பரில் 10,592 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் விற்பனையில் 58 சதவீத வளர்ச்சியை ஹூண்டாய் கிரெட்டா பதிவு செய்துள்ளது. புதிய தலைமுறை மாடல் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஹூண்டாய் கிரெட்டாவின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. அதே சமயம் புதிய தலைமுறை மாடலின் வருகையால் ஹூண்டாய் கிரெட்டாவின் போட்டியாளரான கியா செல்டோஸின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 4வது இடத்தை, குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' காரான டாடா நெக்ஸான் பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா நிறுவனம் 6,835 நெக்ஸான் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 4,350 ஆக மட்டுமே இருந்தது.

இதன் மூலம் விற்பனையில் 57 சதவீத வளர்ச்சியை டாடா நெக்ஸான் பதிவு செய்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் சமீப காலமாக பாதுகாப்பு குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பாதுகாப்பு விஷயத்தில் டாடா கார்கள் தலை சிறந்து விளங்குகின்றன. எனவே ஒட்டுமொத்தமாகவே டாடா கார்களின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

டாடா நெக்ஸானின் விற்பனை வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. 5வது இடத்தை புதுவரவான கியா சொனெட் பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் கியா நிறுவனம் 5,959 சொனெட் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் அறிமுகம் செய்யப்பட்டது என்பதால், இதன் விற்பனை எண்ணிக்கை 2019ம் ஆண்டு டிசம்பரில் ஒப்பிட இயலாது.

இந்த பட்டியலில் 6வது இடத்தை கியா செல்டோஸ் பிடித்துள்ளது. கியா நிறுவனம் கடந்த டிசம்பரில் 5,608 செல்டோஸ் எஸ்யூவிகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 4,645 ஆக இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 21 சதவீத வளர்ச்சியை கியா செல்டோஸ் பதிவு செய்துள்ளது.

7வது இடத்தை மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் 2,132 ஆக இருந்த எக்ஸ்யூவி300 கார்களின் விற்பனை எண்ணிக்கை 2020ம் ஆண்டு டிசம்பரில் 3,974 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 86 சதவீத வளர்ச்சியை எக்ஸ்யூவி300 பதிவு செய்துள்ளது. இந்த காம்பேக்ட் எஸ்யூவியும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் எம்ஜி ஹெக்டர் 8வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்ஜி நிறுவனம் 3,021 ஹெக்டர் கார்களை எம்ஜி விற்பனை செய்திருந்தது. 2020ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 3,430 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 14 சதவீத வளர்ச்சியை எம்ஜி ஹெக்டர் பதிவு செய்துள்ளது.

எம்ஜி நிறுவனம் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. எனவே வரும் மாதம் அதன் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த பட்டியலில் 9வது இடத்தை மஹிந்திரா ஸ்கார்பியோ பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனம் 3,656 ஸ்கார்பியோ எஸ்யூவிகளை விற்பனை செய்திருந்தது.

இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டு டிசம்பரில் 3,417 ஆக குறைந்துள்ளது. இது 7 சதவீத வீழ்ச்சியாகும். புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ நடப்பாண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வருகைக்கு பின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை மஹிந்திரா தார் பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனம் 2,296 தார் எஸ்யூவிகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனம் வெறும் 2 தார் எஸ்யூவிகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. தார் எஸ்யூவியின் விற்பனை பெருமளவு உயர்ந்துள்ளதற்கு இதுவே முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.