எம்பிவி கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி எர்டிகா!! எக்ஸ்.எல்6 காரின் விற்பனையும் 232% அதிகரிப்பு

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட எம்பிவி கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்பிவி கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி எர்டிகா!! எக்ஸ்.எல்6 காரின் விற்பனையும் 232% அதிகரிப்பு

மற்ற கார் பிரிவுகளை போன்று எம்பிவி கார் விற்பனையிலும் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுஸுகியே முன்னிலையில் உள்ளது.

எம்பிவி கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி எர்டிகா!! எக்ஸ்.எல்6 காரின் விற்பனையும் 232% அதிகரிப்பு

மாருதி சுஸுகி எர்டிகா கடந்த மாதத்தில் 9,920 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார் என்ற பெயரை பெற்றுள்ளது. ஆனால் 2020 ஜூன் மாதத்தில் வெறும் 3,306 எர்டிகா கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

எம்பிவி கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி எர்டிகா!! எக்ஸ்.எல்6 காரின் விற்பனையும் 232% அதிகரிப்பு

இந்த வகையில் எர்டிகா எம்பிவி காரின் விற்பனை இந்தியாவில் சுமார் 200 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மாருதி எம்பிவி கார் மட்டுமின்றி பெரும்பாலான எம்பிவி கார்களின் விற்பனை கடந்த ஜூன் மாதத்தை காட்டிலும், 2020 ஜூன் மாதத்தில் மிகவும் குறைவாகவே இருந்துள்ளது.

எம்பிவி கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி எர்டிகா!! எக்ஸ்.எல்6 காரின் விற்பனையும் 232% அதிகரிப்பு

இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் மஹிந்திரா பொலிரோ 5,744 யூனிட்களின் விற்பனையுடன் உள்ளது. 2020 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனை கடந்த மாதத்தில் 74 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் 3,292 பொலிரோ கார்களையே மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

எம்பிவி கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி எர்டிகா!! எக்ஸ்.எல்6 காரின் விற்பனையும் 232% அதிகரிப்பு

மூன்றாவது இடத்தில் உள்ள மாருதி எக்ஸ்.எல்6 மாடல் மொத்தம் 3,978 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 1,198 எக்ஸ்.எல்6 கார்கள் விற்பனை செய்யப்பட்ட 2020 ஜூன் மாதத்தை காட்டிலும் சுமார் 232% அதிகமாகும்.

எம்பிவி கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி எர்டிகா!! எக்ஸ்.எல்6 காரின் விற்பனையும் 232% அதிகரிப்பு

நான்காவது இடத்தில் ஓட்டுனர்களுக்கான கார் என அழைக்கப்படும் டொயோட்டா இன்னோவா 43 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 2,973 இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றை தொடர்ந்து ரெனால்ட் ட்ரைபர் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

எம்பிவி கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி எர்டிகா!! எக்ஸ்.எல்6 காரின் விற்பனையும் 232% அதிகரிப்பு

2021 மே மாதத்தின் பெரிய விற்பனை சரிவை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் தான் பெரும்பாலான கார்களின் விற்பனை முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும் ட்ரைபர் எம்பிவி காரின் விற்பனை 2020 ஜூன் மாதத்தை காட்டிலும் 13 சதவீதம் குறைந்துள்ளது.

எம்பிவி கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி எர்டிகா!! எக்ஸ்.எல்6 காரின் விற்பனையும் 232% அதிகரிப்பு

இவற்றிற்கு அடுத்துள்ள எம்பிவி கார்களின் விற்பனை பெரிய அளவில் இல்லை. 6வது மற்றும் 7வது இடங்களில் உள்ள கியா கார்னிவல் மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ கார்கள் முறையே 503 மற்றும் 402 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எம்பிவி கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி எர்டிகா!! எக்ஸ்.எல்6 காரின் விற்பனையும் 232% அதிகரிப்பு

இருப்பினும் இதில் கார்னிவலின் விற்பனை 2020 ஜூன் மாதத்தை காட்டிலும் 212% அதிகரித்துள்ளது. மராஸ்ஸோ கடந்த ஆண்டு ஜூனில் 1 யூனிட் கூட விற்பனை செய்யப்படவில்லை. 8வது மற்றும் 9வது இடங்களில் டொயோட்டா வெல்ஃபையர் (63), டட்சன் கோ+ (12) எம்பிவி கார்கள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 MPVs In June 2021, Maruti Ertiga In Top Position.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X