மீண்டும் இந்தியாவில் வளர்ச்சி கண்டுள்ள செடான் கார்கள் விற்பனை!! மாருதி டிசைர் முதலிடம்

கடந்த 2021 ஜூன் மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 செடான் கார்களை பற்றிய விபரங்கள் விற்பனை எண்ணிக்கைகளுடன் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் இந்தியாவில் வளர்ச்சி கண்டுள்ள செடான் கார்கள் விற்பனை!! மாருதி டிசைர் முதலிடம்

ஒரு காலத்தில், அதாவது 21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவில் கார்கள் விற்பனையில் செடான் கார்களே ஆட்சி செய்து வந்தன. ஆனால் தற்போது உள்ள நிலைமையே வேறு.

மீண்டும் இந்தியாவில் வளர்ச்சி கண்டுள்ள செடான் கார்கள் விற்பனை!! மாருதி டிசைர் முதலிடம்

சற்று அதிகமான உயரத்தையும், நிமிர்ந்த தோற்றத்தையும் கொண்ட எஸ்யூவி கார்களையே தற்போதைய இளம் தலைமுறையினர் வாங்க விருப்பப்படுகின்றனர். எஸ்யூவி கார்களின் வளர்ச்சி, செடான் கார்களின் வீழ்ச்சியாக அமைந்துவிட்டது.

மீண்டும் இந்தியாவில் வளர்ச்சி கண்டுள்ள செடான் கார்கள் விற்பனை!! மாருதி டிசைர் முதலிடம்

இருப்பினும் மற்ற கார் பிரிவுகளை போன்று செடான் கார்களின் விற்பனையும் கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு கடந்த 2021 ஜூன் மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக கடந்த மாத விற்பனை லிஸ்ட்டில் முதலிடத்தில் உள்ள மாருதி டிசைரின் விற்பனை எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

மீண்டும் இந்தியாவில் வளர்ச்சி கண்டுள்ள செடான் கார்கள் விற்பனை!! மாருதி டிசைர் முதலிடம்

மாருதி டிசைர் கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 12,639 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2020 ஜூன் மாதத்தில் வெறும் 5,834 டிசைர் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்தியாவில் தற்சமயம் அதிகளவில் விற்பனையாகும் செடான் கார் மாருதி டிசைர் மட்டுமே.

மீண்டும் இந்தியாவில் வளர்ச்சி கண்டுள்ள செடான் கார்கள் விற்பனை!! மாருதி டிசைர் முதலிடம்

ஏனெனில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹூண்டாய் அவ்ரா, 2020 ஜூன் மாதத்தில் மாருதி டிசைர் விற்பனையான அளவிற்கு கூட கடந்த மாதத்தில் விற்பனையாகவில்லை. இருப்பினும் அவ்ரா கடந்த ஆண்டு ஜூனை காட்டிலும் (1,016) 2021 ஜூன் மாதத்தில் 207 சதவீதம் அதிகமாக 3,126 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் இந்தியாவில் வளர்ச்சி கண்டுள்ள செடான் கார்கள் விற்பனை!! மாருதி டிசைர் முதலிடம்

ஒரு சமயத்தில் மிக பிரபலமாக இருந்த ஹோண்டா சிட்டி கடந்த மாதத்தில் 2,571 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதுவே, 2020 ஜூனில் வெறும் 585 சிட்டி செடான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இந்தியாவில் வளர்ச்சி கண்டுள்ள செடான் கார்கள் விற்பனை!! மாருதி டிசைர் முதலிடம்
Rank Model Jun-21 Jun-20 Growth (%)
1 Maruti Dzire 12,639 5,834 116.64
2 Hyundai Aura 3,126 1,016 207.68
3 Honda City 2,571 585 339.49
4 Hyundai Verna 2,181 1,083 101.39
5 Honda Amaze 1,487 139 969.78
6 Tata Tigor 1,076 553 94.58
7 Maruti Ciaz 602 553 8.86
8 Skoda Rapid 454 577 -21.32
9 Volkswagen Vento 178 282 -36.88
10 Skoda Octavia 117 21 457.14

நான்காவது இடத்தில் உள்ள ஹூண்டாய் வெர்னா கடந்த மாதத்தில் 2,181 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கடுத்த 5வது மற்றும் ஆறாவது இடங்களில் ஹோண்டா அமேஸ் மற்றும் டாடா டிகோர் செடான் கார்கள் உள்ளன.

மீண்டும் இந்தியாவில் வளர்ச்சி கண்டுள்ள செடான் கார்கள் விற்பனை!! மாருதி டிசைர் முதலிடம்

இவற்றின் கடந்த ஜூன் மாத விற்பனை எண்ணிக்கை முறையே 1,487 மற்றும் 1,076 ஆகும். இவற்றிற்கு அடுத்துள்ள கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆயிரத்தை கூட தொடவில்லை. 7வது மற்றும் 8வது இடங்களில் உள்ள மாருதி சியாஸ் மற்றும் ஸ்கோடா ராபிட் கார்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 602 மற்றும் 454 ஆகும்.

மீண்டும் இந்தியாவில் வளர்ச்சி கண்டுள்ள செடான் கார்கள் விற்பனை!! மாருதி டிசைர் முதலிடம்

இதில், விரைவில் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாக கூறப்படும் ஸ்கோடா ராபிட் காரின் விற்பனை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் 21.32% குறைந்துள்ளது. அதேபோல் 9வது இடத்தில் உள்ள ஃபோக்ஸ்வேகன் வெண்டோ காரின் விற்பனையும் 36.88% குறைந்துள்ளது.

மீண்டும் இந்தியாவில் வளர்ச்சி கண்டுள்ள செடான் கார்கள் விற்பனை!! மாருதி டிசைர் முதலிடம்

இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இடத்தில் ஸ்கோடா ஆக்டேவியா 117 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. கடைசி இடத்தில் இருந்தாலும், ஆக்டேவியா ப்ரீமியம் செடான் காரின் விற்பனையை கண்டு ஸ்கோடா மகிழ்ச்சியடைந்திருக்கும். ஏனெனில் 2020 ஜூனில் வெறும் 21 ஆக்டேவியா கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Sedans June 2021, Honda City Beats Verna & Ciaz.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X