மெல்ல மெல்ல மவுசை இழக்கும் செடான் கார்கள்!! கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

எஸ்யூவி கார்களின் வளர்ச்சியினால், இந்தியாவில் காம்பெக்ட் & நடுத்தர-அளவு என இரு விதமான செடான் கார்களின் விற்பனையும் முந்தைய காலங்களை காட்டிலும் தற்போதைய காலக்கட்டத்தில் வெகுவாக குறைந்து வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், நமக்கு தெரியவந்துள்ள 2021 நவம்பரில் விற்பனை செய்யப்பட்ட செடான் கார்கள் குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மெல்ல மெல்ல மவுசை இழக்கும் செடான் கார்கள்!! கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

5 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் எஸ்யூவி கார்களில் தொழிற்நுட்ப வசதிகள் அதிகளவில் வழங்கப்படுவது மட்டுமின்றி, விலையும் குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது. இதுவும் மக்கள் எஸ்யூவி பக்கம் செல்வதற்கு காரணங்களாகும்.

மெல்ல மெல்ல மவுசை இழக்கும் செடான் கார்கள்!! கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

எந்த அளவிற்கு என்றால், கடந்த 2021 ஏப்ரல் -அக்டோபர் மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட மொத்த பயணிகள் கார்களில் கிட்டத்தட்ட 50% எஸ்யூவி கார்கள் தான் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் மாருதி, ஹூண்டாய் & ஹோண்டா போன்ற முன்னணி பிராண்ட்களில் இருந்து சமீப மாதங்களில் சில புத்துணர்ச்சியான தோற்றம் கொண்ட செடான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மெல்ல மெல்ல மவுசை இழக்கும் செடான் கார்கள்!! கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

கடந்த 2021 நவம்பர் மாதத்தில் மொத்தம் 20,695 செடான் கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 நவம்பரில் 29,807 செடான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை கிட்டத்தட்ட 30.57% குறைந்துள்ளதை காணலாம். இந்த 30.57 சதவீத வீழ்ச்சி ஆனது டிகோர், வெர்னா & ஆக்டேவியாவை தவிர்த்து மற்ற அனைத்தின் மூலமாகவும் கிடைத்துள்ளன.

மெல்ல மெல்ல மவுசை இழக்கும் செடான் கார்கள்!! கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

அதாவது, மற்ற அனைத்து செடான் கார்களும் 2020 நவம்பரை காட்டிலும் கடந்த மாதத்தில் குறைவான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் 8,196 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு மாருதி டிசைர் முதலிடத்தில் உள்ளது. ஆனால் உண்மையில், கடந்த ஆண்டு நவம்பரில் சுமார் 13,536 டிசைர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

Rank Model Nov-21 Nov-20 Growth (%)
1 Maruti Dzire 8,196 13,536 -5,340
2 Honda City 2,666 3,523 -857
3 Hyundai Aura 2,562 3,063 -501
4 Honda Amaze 2,344 4,706 -2,362
5 Tata Tigor 1,785 1,259 526
6 Hyundai Verna 1,648 1,487 161
7 Maruti Ciaz 1,089 1,870 -,781
8 Skoda Octavia 194 20 174
9 Volkswagen Vento 107 125 -18
10 Skoda Superb 104 218 -114
மெல்ல மெல்ல மவுசை இழக்கும் செடான் கார்கள்!! கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

இதன்படி, மாருதி டிசைரின் விற்பனை 39.45% சரிந்துள்ளது. இந்திய சந்தையில் கடந்த மாதத்தில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட செடான் கார்களில் கிட்டத்தட்ட 39.60 சதவீத பங்கை மாருதி டிசைர் கொண்டுள்ளது. இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் பிரபல ஜப்பானிய செடான் காரான ஹோண்டா சிட்டி 2,666 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. முதலிடத்தில் உள்ள டிசைருக்கும், ஹோண்டா சிட்டிக்கும் இடையில் விற்பனை எண்ணிக்கையில் மிக பெரிய வித்தியாசம் உள்ளதை காணலாம்.

மெல்ல மெல்ல மவுசை இழக்கும் செடான் கார்கள்!! கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

2020 நவம்பரில், தற்போதைய விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 24.33% அதிகமாக 3,523 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த ஜப்பானிய காருக்கு அடுத்து 3வது இடத்தை தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸின் அவ்ரா காம்பெக்ட் செடான் மாடல் உள்ளது. இதன் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 2,562 ஆகும்.

மெல்ல மெல்ல மவுசை இழக்கும் செடான் கார்கள்!! கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

கடந்த ஆண்டு நவம்பரில் இதன் விற்பனையும் 3 ஆயிரத்தை கடந்திருந்தால், இதன் வருடம் -வருடம் ஒப்பிடுகையில் 16.36% வீழ்ச்சியை காண முடிகிறது. நான்காவது இடத்தில் மீண்டும் ஹோண்டா மாடலாக அமேஸ் 2,344 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இதன் விற்பனை 2020 நவம்பர் உடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் பாதியாக (50.19%) குறைந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் 4,706 அமேஸ் கார்களை ஹோண்டா இந்தியாவில் விற்பனை செய்திருந்தது.

மெல்ல மெல்ல மவுசை இழக்கும் செடான் கார்கள்!! கடந்த நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

5வது மற்றும் 6வது இடங்களில் உள்ள டாடா டிகோர் & ஹூண்டாய் வெர்னா கார்களின் விற்பனை 2020 நவம்பர் உடன் ஒப்பிடுகையில் எதிர்மறையாக செல்லவில்லை என முன்பே கூறியிருந்தோம். இவை இரண்டும் முறையே கடந்த மாதத்தில் 1,785 மற்றும் 1,648 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இவற்றின் 2020 நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 41.78% மற்றும் 10.83% அதிகமாகும்.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 sedans nov 2021 maruti suzuki dzire tops
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X