2021 ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்!! மாருதி வேகன்ஆர் ஹேட்ச்பேக் முதலிடம்!

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்!! மாருதி வேகன்ஆர் ஹேட்ச்பேக் முதலிடம்!

2021 ஜூன் மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மொத்த கார்களில் அதிகளவில் விற்கப்பட்ட முதல் 10 கார்கள் மட்டுமே 50 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன. அதாவது இந்த லிஸ்ட்டில் இல்லாத மற்ற கார்களே மீதி 50 சதவீதத்தை பூர்த்தி செய்கின்றன.

2021 ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்!! மாருதி வேகன்ஆர் ஹேட்ச்பேக் முதலிடம்!

இந்தியாவில் கார்களின் விற்பனை என்றாலே அதில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும். இந்த நிலை கடந்த ஜூன் மாதத்திலும் வழக்கம்போல் தொடர்ந்துள்ளது.

Rank Model June'21 June'20 Growth (%)
1 Maruti Wagonr 19,447 6,972 178.9
2 Maruti Swift 17,721 4,013 341.7
3 Maruti Baleno 14,701 4,300 241.9
4 Maruti Vitara Brezza 12,833 4,542 182.5
5 Maruti Dzire 12,639 5,834 116.6
6 Maruti Alto 12,513 7,298 71.5
7 Hyundai Creta 9,941 7,207 37.9
8 Maruti Ertiga 9,920 3,306 200.1
9 Maruti Eeco 9,218 3,803 142.4
10 Hyundai Grand i10 8,787 3,593 144.6

Source: Autopunditz

2021 ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்!! மாருதி வேகன்ஆர் ஹேட்ச்பேக் முதலிடம்!

இருப்பினும் இந்த டாப்-10 லிஸ்ட்டில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த டாப்-10 கார்களில் எதுவொன்றின் விற்பனையும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடனான ஒப்பிடுகையிலும் சரி, முந்தைய 2021 மே மாத விற்பனை எண்ணிக்கை உடனான ஒப்பிடுகையிலும் சரி சில யூனிட்கள் கூட குறையவில்லை.

2021 ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்!! மாருதி வேகன்ஆர் ஹேட்ச்பேக் முதலிடம்!

கிட்டத்தட்ட மாருதி சுஸுகியின் 8 மாடல்கள் இந்த டாப்-10 லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன. முதலிடத்தில் உயரமான ஹேட்ச்பேக் காரான வேகன்ஆர் உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 19,447 வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2021 ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்!! மாருதி வேகன்ஆர் ஹேட்ச்பேக் முதலிடம்!

அதுவே 2020 ஜூன் மாதத்தில் 6,972 வேகன்ஆர் கார்களையும், 2021 மே மாதத்தில் வெறும் 2,086 கார்களையுமே மாருதி நிறுவனம் விற்றிருந்தது. கொரோனா வைரஸ் பரவலால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளே இந்த மாதங்களில் விற்பனை குறைந்ததற்கு காரணமாகும்.

2021 ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்!! மாருதி வேகன்ஆர் ஹேட்ச்பேக் முதலிடம்!

ஸ்விஃப்ட் இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மாருதி ஸ்விஃப்ட் கார்கள் கடந்த ஜூன் மாதத்தில் 17,727 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் 2020 ஜூன் மாத விற்பனை எண்ணிக்கை 4,013, கடந்த மே மாத விற்பனை எண்ணிக்கை 7,005 ஆகும்.

2021 ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்!! மாருதி வேகன்ஆர் ஹேட்ச்பேக் முதலிடம்!

மூன்றாவது இடத்தை மாருதி பலேனோ ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் பிடித்துள்ளது. இதன் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 14,701 ஆகும். முதல் மூன்று இடங்கள் மட்டுமின்றி, இந்த டாப்-10 லிஸ்ட்டில் முதல் ஆறு இடங்களிலும் மாருதி சுஸுகியின் தயாரிப்பு கார்களே உள்ளன.

2021 ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்!! மாருதி வேகன்ஆர் ஹேட்ச்பேக் முதலிடம்!

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா (12,833), டிசைர் (12,639), ஆல்டோ (12,513) என்பவை முறையே அடுத்த மூன்று இடங்களில் உள்ள மாருதி சுஸுகி கார்களாகும். இதில் விட்டாரா பிரெஸ்ஸா 2021 மே மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் சுமார் 10,000க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

2021 ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்!! மாருதி வேகன்ஆர் ஹேட்ச்பேக் முதலிடம்!

7வது இடத்தில் ஒருவழியாக மாற்று நிறுவனத்தின் காராக ஹூண்டாய் க்ரெட்டா உள்ளது. கொரோனா இரண்டாவது அலையால் கடந்த மே மாதத்தில் ஆட்டோமொபைல் துறையே ஆடிப்போய் இருந்த சமயத்திலும் கிட்டத்தட்ட 7,500க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த க்ரெட்டா கடந்த ஜூன் மாதத்தில் 9,941 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது.

2021 ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்!! மாருதி வேகன்ஆர் ஹேட்ச்பேக் முதலிடம்!

8வது மற்றும் 9வது இடங்களில் மீண்டும் மாருதியின் வாகனங்களாக எர்டிகா எம்பிவி மற்றும் ஈக்கோ மாடல்கள் உள்ளன. எர்டிகாவின் விற்பனை எண்ணிக்கை க்ரெட்டாவை காட்டிலும் வெறும் 21 யூனிட்கள் மட்டுமே குறைவாகும். கடைசி பத்தாவது இடத்தில் ஹூண்டாய் ஐ10 கிராண்ட் மாடல் 8,787 என்ற விற்பனை எண்ணிக்கை உடன் உள்ளது.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Selling Cars in India for June 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X