Just In
- 1 hr ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 1 hr ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 1 hr ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 2 hrs ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- News
"மனித உடல்கள்".. எந்த ஊர்னே தெரியல.. வரிசையாக அடுக்கி வச்சு.. பெட்ரோலை ஊற்றி.. எரியும் சடலங்கள்..!
- Finance
கையை நீட்டினால் போதும்.. அமேசானின் புதிய பேமெண்ட் முறை..!
- Lifestyle
சமையலுக்கு பயன்படுத்தும் இந்த பருப்பு வகைகள் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாக்குமாம் தெரியுமா?
- Movies
ரம்ஜான் நாளில் சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட்.. ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு!
- Education
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Sports
ஹர்பஜன் காலில் விழுந்த சுரேஷ் ரெய்னா. களத்திலேயே நடந்த சம்பவம்.. சக வீரர்கள் திகைப்பு..காரணம் என்ன?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போன மாசம் அதிகம் விற்பனையான கார் மாடல் எது தெரியுமா? விற்பனை சரிவால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஆல்டோ...
கடந்த பிப்ரவரி மாதத்தில் எந்த நிறுவனத்தின் கார் மாடல் அதிகம் விற்பனையானது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது இந்தியாவில் கார் வாங்குவோரின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. பைக்குகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கார் விற்பனை நாட்டில் வளர்ச்சியடைய தொடங்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் 2020 பிப்ரவரியைக் காட்டிலும் 2021 பிப்ரவரியில் பல மடங்கு கார்களின் விற்பனை அதிகரித்திருக்கின்றது.

2020 பிப்ரவரியில் 2,50,645 யூனிட்டுகளாக மட்டுமே இருந்த நான்கு சக்கர வாகன விற்பனை 2021 பிப்ரவரியில் 3,08,593 யூனிட்டுகளாக வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இது மிகப்பெரிய வளர்ச்சியாகும். இதில், எந்த நிறுவனத்தின் என்ன மாடல் கார் அதிகம் விற்பனையாகியிருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

பொதுவாக, மாருதி நிறுவனத்தின் ஆல்டோ மற்றும் வேகன்ஆர் ஆகிய மாடல் கார்களே விற்பனையில் முதல் இடங்களில் இருப்பது வழக்கம். ஆனால், இந்த நிலை தற்போது மாறியிருக்கின்றது. மாருதி சுசுகியின் ஸ்விஃப்ட் காரே இம்முறை முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

அதாவது, 2020 பிப்ரவரியைக் காட்டிலும் 2021 பிப்ரவரியில் 8 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்று முதல் இடத்தை ஸ்விஃப்ட் பிடித்திருக்கின்றது. மிக தெளிவாக கூற வேண்டுமானால், 2020 பிப்ரவரியில் 18,696 யூனிட்டுகளாக இருந்த ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரின் விற்பனை 2021 பிப்ரவரியில் 20,264 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கின்றது.

இத்தனை யூனிட்டுகளை விற்பனைச் செய்தே இக்கார் தற்போது நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார் என்ற மகுடத்தைச் சூடியிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக பலினோ கார் இருக்கின்றது. இது ஓர் பிரீமியம் ரக காராகும். இக்கார் சுமார் 21 சதவீத விற்பனை வளர்ச்சியை கடந்த 2020 ஆண்டின் பிப்ரவரியைக் காட்டிலும் 2021 பிப்ரவரியில் பெற்றிருக்கின்றது. 16,585 யூனிட்டுகளாக மட்டுமே இருந்த இக்காரின் விற்பனை 20,070 யூனிட்டுகளைப் பெற்று 2ம் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

மூன்றாவது இடத்தையும் மாருதி நிறுவனத்தின் தயாரிப்பே பிடித்திருக்கின்றது. நிறுவனத்தின் வேகன் ஆர் கார் இவ்விடத்தைப் பிடித்துள்ளது. 2020 பிப்ரவரியில் 18,235 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தநிலையில் நடப்பாண்டு பிப்ரவரியில் 18,728 யூனிட் வேகன்ஆர் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

தொடர்ந்து, நான்காவது இடத்திலும் மாருதியின் தயாரிப்பே இருக்கின்றது. ஆல்டோ இவ்விடத்தைப் பிடித்திருக்கின்றது. சுமார் 6 சதவீத விற்பனை வீழ்ச்சியை 2021 பிப்ரவரியில் சந்தித்திருக்கின்ற வேலையிலும் முதல் நான்காவது இடத்தை இக்கார் பிடித்திருக்கின்றது. 2020 பிப்ரவரியில் 17,921 யூனிட்டுகளாக இருந்த ஆல்டோவின் விற்பனை 2021 பிப்ரவரியில் 16,919 யூனிட்டுகளாக குறைந்திருக்கின்றது.

இருப்பினும், இக்கார் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இது இந்திய ஆட்டோத்துறைக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தை ஹூண்டாய் க்ரெட்டா கார் பிடித்திருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இக்கார் சுமார் 1675 சதவீதம் என்ற பிரமாண்ட விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

அதாவது, 2020 பிப்ரவரியில் வெறும் 700 யூனிட்டுகளாக மட்டுமே இருந்த இதன் விற்பனை 2021 பிப்ரவரியில் அப்படியே பல மடங்குகள் உயர்ந்து 12,428 யூனிட்டுகள் என்ற விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இது மாபெரும் விற்பனை வளர்ச்சியாகும்.

இதற்கு அடுத்த இடத்தில் 63 சதவீத வளர்ச்சியுடன் மாருதி டிசையரும், 6 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் மாருதி ஈகோ காரும், 69 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் மாருதி சுசுகி விட்டார ப்ரெஸ்ஸா காரும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன.

தொடர்ந்து, 9 சதவீத வளர்ச்சியுடன் ஒன்பதாவது இடத்தில் ஹூண்டாய் வென்யூ காரும், 1 சதவீத விற்பனை வீழ்ச்சியுடன் பத்தாவது இடத்தை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் காரும் பிடித்திருக்கின்றன. இவையே கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் ஆகும்.

அதிகம் விற்பனையான கார்கள் பற்றிய தகவலை பட்டியலாகக் கீழே பார்க்கலாம்:
வரிசை | மாடல் | பிப்ரவரி 2021 | பிப்ரவரி 2020 | வளர்ச்சி விகிதம் (%) |
1 | Maruti Swift | 20,264 | 18,696 | 8 |
2 | Maruti Baleno | 20,070 | 16,585 | 21 |
3 | Maruti WagonR | 18,728 | 18,235 | 3 |
4 | Maruti Alto | 16,919 | 17,921 | -6 |
5 | Hyundai Creta | 12,428 | 700 | 1675 |
6 | Maruti Dzire | 11,901 | 7,296 | 63 |
7 | Maruti Eeco | 11,891 | 11,227 | 6 |
8 | Maruti Vitara Brezza | 11,585 | 6,866 | 69 |
9 | Hyundai Venue | 11,224 | 10,321 | 9 |
10 | Hyundai Grand i10 | 10,270 | 10,407 | -1 |