Just In
- 8 hrs ago
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- 11 hrs ago
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
- 12 hrs ago
100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!
- 13 hrs ago
மாஸ்க் அணியவில்லை என்றால், என்ன இப்படி தூக்குறாங்க!! போலீஸாரிடம் சிக்கிய தம்பதியினர்...
Don't Miss!
- News
போலி செய்தி பரப்பினால்.. அது யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம்.. மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விற்பனையில் தனியாளாக மாருதி கார்களுக்கு டஃப் கொடுக்கும் ஹூண்டாய் க்ரெட்டா!! டாப்-10 லிஸ்ட் இதோ...
கடந்த மார்ச் மாதத்தில் அதிகளவில் விற்பனையான டாப்-10 கார்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2020-21ஆம் நிதியாண்டின் கடைசி மார்ச் மாதம் கார்களின் நல்லப்படியான விற்பனைகளுடனே நிறைவு பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த மாதத்தில் 3,20,487 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் 2020 மார்ச் மாதத்தில் வெறும் 1,40,566 எண்ணிக்கையிலான கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இது கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 128 சதவீதம் குறைவாகும்.

இதற்கு கொரோனா வைரஸ் பரவலை மிக முக்கிய காரணமாக சொல்லலாம். ஏனெனில் அந்த சமயத்தில் தான் கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் எதிரொலிக்க ஆரம்பித்தது.

இந்தியாவில் கார்களின் விற்பனையில் இந்திய- ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகி முன்னிலை வகிக்கிறது. இந்த டாப்-10 லிஸ்ட்டிலும் வழக்கம்போல் இந்த நிறுவனத்தின் 7 கார்கள் இடம் பிடித்துள்ளன.

குறிப்பாக முதல் நான்கு இடங்களில் மாருதி கார்களே உள்ளன. இதன்படி முதலிடத்தில் மாருதி சுஸுகியின் மிக பிரபலமான ஹேட்ச்பேக் கார் மாடலான ஸ்விஃப்ட் உள்ளது. கடந்த 2021 மார்ச் மாதத்தில் மொத்தம் 21,714 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதுவே, 2020 மார்ச்சில் 8,575 ஸ்விஃப்ட் கார்களையே மாருதி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் இந்த ஹேட்ச்பேக் காரின் விற்பனையில் 153 சதவீத வளர்ச்சியை மாருதி நிறுவனம் கண்டுள்ளது.
Rank | Model | Mar'21 | Mar'20 | Growth (%) |
1 | Maruti Swift | 21714 | 8575 | 153 |
2 | Maruti Baleno | 21217 | 11406 | 86 |
3 | Maruti Wagonr | 18757 | 9151 | 105 |
4 | Maruti Alto | 17401 | 10829 | 61 |
5 | Hyundai Creta | 12640 | 6706 | 88 |
6 | Maruti Eeco | 11547 | 5966 | 94 |
7 | Maruti Dzire | 11434 | 5476 | 109 |
8 | Maruti Vitara Brezza | 11274 | 5513 | 104 |
9 | Hyundai Grand i10 | 11020 | 4293 | 157 |
10 | Hyundai Venue | 10722 | 6127 | 75 |

அதேபோல் இந்த நிறுவனத்தின் மற்றொரு பிரபலமான, சற்று ப்ரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காரான பலேனோ 21,217 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு மார்ச் மாத விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 ஆயிரம் குறைவாகும்.

இவற்றிற்கு அடுத்து மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களிலும் மாருதியின் ஹேட்ச்பேக் கார்களாக வேகன்ஆர் மற்றும் ஆல்டோ உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை முறையே 18,757 மற்றும் 17,401 ஆகும்.

வழக்கமாக இந்த டாப்-10 லிஸ்ட்டில் முதல் ஐந்து இடங்களை பெரும்பாலும் மாருதி கார்களே பிடித்துவிடும். ஆனால் சமீப காலமாக புதிய தலைமுறை க்ரெட்டா காருக்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதினால், ஐந்தாவது இடத்தை இந்த ஹூண்டாய் எஸ்யூவி பிடித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 12,640 க்ரெட்டா கார்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. புதிய தலைமுறை க்ரெட்டா 2020 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவற்றிற்கு அடுத்து ஆறாவதில் இருந்து எட்டாவது இடம் வரையில் மீண்டும் மாருதி சுஸுகியின் தயாரிப்பு வாகனங்களாக ஈக்கோ, டிசைர் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸாவும், கடைசி இரு இடங்களில் ஹூண்டாயின் க்ராண்ட் ஐ10 மற்றும் வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி கார்களும் உள்ளன.