Just In
- 59 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரை நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த கார் பற்றிய முக்கிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி தவிர அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரையும் கடந்தாண்டு ஜனவரி மாதம் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.

தற்போது அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. நடப்பாண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார், வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ளது. இந்த கார் பற்றிய 5 முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டிசைன்
தற்போது விற்பனையில் உள்ள அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார், டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் மொழியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டிசைன் சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் டிசைனும், அதன் ஐசி இன்ஜின் மாடலை போலவேதான் இருக்கும்.

எனினும் ஐசி இன்ஜினில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், எலெக்ட்ரிக் வெர்ஷனின் டிசைனில் ஒரு சில நுட்பமான மாற்றங்கள் மட்டும் செய்யப்படும். மற்றபடி இரண்டு கார்களும் ஒன்று போலவேதான் இருக்கும். எனவே அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் டிசைனும் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி தொகுப்பு மற்றும் ரேஞ்ச்
அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் தொழில்நுட்ப விபரங்களை டாடா இன்னும் வெளியிடவில்லை. எனினும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் உள்ள அதே பவர்டிரெயின்தான், அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரிலும் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 129 பிஎஸ் பவர் மற்றும் 245 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 30.2 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 312 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இது அராய் நிறுவனத்தால் சான்று வழங்கப்பட்ட ரேஞ்ச் ஆகும். எனவே அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரிலும் நல்ல ரேஞ்ச் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வசதிகள்
டிசைனை போலவே, ஐசி இன்ஜின் அல்ட்ராஸ் காரின் வசதிகள்தான் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஒரு சில வசதிகள் கூடுதலாக வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் உடன் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படவுள்ளது.

இதுதவிர செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி டிஆர்எல்கள் உடன் புரொஜக்டர் ஹெட்லேம்ப்கள், ஆம்பியண்ட் லைட்டிங், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், டிரைவிங் மோடுகள், மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள் உள்ளிட்ட வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமிருக்காது.

பாதுகாப்பை பொறுத்தவரை, முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசி இன்ஜின் அல்ட்ராஸ், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் 10 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் போட்டியாளர்களை பொறுத்தவரை, இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் முதல் எலெக்ட்ரிக் பிரீமியம் ஹேட்ச்பேக் காராக டாடா அல்ட்ராஸ் இருக்கும்.

எனவே டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டி என எந்த காரையும் கூற முடியாது. ஆனால் மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்கலாம். மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரும் நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.