2020ஆம் ஆண்டின் அதிகம் விற்பனையான மின்சார கார் எது தெரியுமா?... தெரிஞ்சிக்கோங்க உதவியாக இருக்கும்!!

2020ம் ஆண்டில் அதிகம் விற்பனையான மின்சார கார் எது என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

2020ஆம் ஆண்டின் அதிகம் விற்பனையான மின்சார கார் எது தெரியுமா?... தெரிஞ்சிக்கோங்க உதவியாக இருக்கும்!!

2020ம் ஆண்டில் அதிகம் விற்பனையான கார்கள் பற்றிய தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன. அந்தவகையில், அண்மையில் வெளியாகிய தகவலின் வாயிலாக அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்புகளே உலகளவில் முதல் இடத்தைப் பிடித்திருந்தது. இந்த நிலையில் உலகளவில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார் எது என்பது பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.

2020ஆம் ஆண்டின் அதிகம் விற்பனையான மின்சார கார் எது தெரியுமா?... தெரிஞ்சிக்கோங்க உதவியாக இருக்கும்!!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார காரே இந்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்சார கார் மாடல்களில் மாடல் 3-யும் ஒன்று. இந்த காரின் மூலமாகவே இந்நிறுவனம் இவ்விடத்தைப் பிடித்திருக்கின்றது.

2020ஆம் ஆண்டின் அதிகம் விற்பனையான மின்சார கார் எது தெரியுமா?... தெரிஞ்சிக்கோங்க உதவியாக இருக்கும்!!

டெஸ்லா மாடல் 3 மலிவு விலைக் கொண்ட சூப்பர் வசதிகள் மின்சார காராகும். எனவேதான் இந்த காருக்கு உலக மக்கள் மத்தியில் பேராதாரவு கிடைத்து வருகின்றது. அந்தவகையில், கடந்த 2020 ஆண்டில் 3,65,240 யூனிட்டுகள் வரை டெஸ்லா மாடல் 3 மின்சார கார் விற்பனையாகியிருக்கின்றது. இது சந்தையின் ஒட்டுமொத்த மின்சார கார் விற்பனையில் 12 சதவீதம் ஆகும்.

2020ஆம் ஆண்டின் அதிகம் விற்பனையான மின்சார கார் எது தெரியுமா?... தெரிஞ்சிக்கோங்க உதவியாக இருக்கும்!!

தனியாளாக நின்று இத்தகைய வரவேற்பை இக்கார் பெற்றுக் கொடுத்துள்ளது. டெஸ்லா மாடல் 3 மின்சார காருக்கு அடுத்தபடியாக உலிங் ஹாஹ்குவாங் மினி மின்சார கார் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது. சீனர்கள் நல்ல மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் காராக இக்கார் இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 119,255 யூனிட்டுகளை விற்பனைச் செய்து இவ்விடத்தை இந்த மின்சார கார் பிடித்திருக்கின்றது.

2020ஆம் ஆண்டின் அதிகம் விற்பனையான மின்சார கார் எது தெரியுமா?... தெரிஞ்சிக்கோங்க உதவியாக இருக்கும்!!

ரெனால்ட் நிறுவனத்தின் ஜோயி மின்சார கார் இதற்கு அடுத்த இடத்தில் இருக்கின்றது. இந்த கார் உலகளவில் ஒட்டுமொத்தமாக 1,00,431 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனைத் தொடர்ந்து, டெஸ்லாவின் மாடல் ஒய் மின்சார கார் நான்காவது இடத்திலும், ஹூண்டாய் கோனா மின்சார கார் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன.

2020ஆம் ஆண்டின் அதிகம் விற்பனையான மின்சார கார் எது தெரியுமா?... தெரிஞ்சிக்கோங்க உதவியாக இருக்கும்!!

79,734 யூனிட்டுகளை விற்பனைச் செய்தே டெஸ்லா மாடல் ஒய் நான்கு இடத்தை தக்கவைத்திருக்கின்றது. இதேபோன்று, 65,075 யூனிட்டுகளை விற்பனைச் செய்து ஐந்தாவது இடத்தை ஹூண்டாய் கோனா மின்சார கார் பிடித்துள்ளது. இவையே உலகளவில் மிக சிறந்த விற்பனையைப் பெறும் ஐந்து பெஸ்ட் மின்சார கார்களாகும்.

2020ஆம் ஆண்டின் அதிகம் விற்பனையான மின்சார கார் எது தெரியுமா?... தெரிஞ்சிக்கோங்க உதவியாக இருக்கும்!!

உலகளவில் மின் வாகனங்களுக்கான தேவை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனை வெளிப்படுத்தும் வகையில் கடந்த 2019ம் ஆண்டைக் காட்டிலும் 2020ல் கணிசமாக மின்சார கார்களின் விற்பனை வளர்ச்சி அடைந்திருப்பது இருக்கின்றது.

2020ஆம் ஆண்டின் அதிகம் விற்பனையான மின்சார கார் எது தெரியுமா?... தெரிஞ்சிக்கோங்க உதவியாக இருக்கும்!!

இவை சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வரும் பெட்ரோல், டீசல் விலையுர்வில் இருந்து நம்முடைய பர்சை காப்பாற்றவும் உதவும்.

Most Read Articles

English summary
Top 5 Best-Selling EV In 2020; Tesla Model 3 Is The No 1 EV. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X