அதிக மைலேஜை தரும் அதிக இருக்கைகள் கொண்ட கார்... புதுசா கார் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட ஒரு முறை பாத்துடுங்க!!

அதிகம் மைலேஜை தரக்கூடிய எம்பிவி கார்கள் பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

அதிக மைலேஜை தரும் அதிக இருக்கைகள் கொண்ட கார்... புதுசா கார் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட ஒரு முறை பாத்துடுங்க!!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் எந்த நிறுவனத்தின் எம்பிவி ரக கார் அதிக மைலேஜ் தரும் என்கிற தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். அண்மைக் காலங்களாக நாட்டில் எம்பிவி ரக கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது.

அதிக மைலேஜை தரும் அதிக இருக்கைகள் கொண்ட கார்... புதுசா கார் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட ஒரு முறை பாத்துடுங்க!!

குறிப்பாக, பெரிய குடும்பங்களை கொண்டிருப்போர் (குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள விரும்புவோர்) மத்தியில் எம்பிவி கார்களுக்கு அமோகமான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த ரக கார்கள் 6 முதல் 7 வரையிலான இருக்கைகளைக் கொண்டிருக்கின்றன.

அதிக மைலேஜை தரும் அதிக இருக்கைகள் கொண்ட கார்... புதுசா கார் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட ஒரு முறை பாத்துடுங்க!!

எனவேதான் குடும்பத்துடன் அதிகம் பயணம் மேற்கொள்வோர் எம்பிவி ரக வாகனங்களையே தேர்வு செய்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையிலேயே எந்த நிறுவனத்தின் எம்பிவி ரக கார் அதிக மைலேஜ் தரும் என்கிற தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

அதிக மைலேஜை தரும் அதிக இருக்கைகள் கொண்ட கார்... புதுசா கார் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட ஒரு முறை பாத்துடுங்க!!

5. மஹிந்திரா மராஸ்ஸோ

மைலேஜ்: ஒரு லிட்டருக்கு 17.31 கிமீ தரும் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்)

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக மைலேஜ் தரக்கூடிய எம்பிவி ரக கார்களில் மஹிந்திரா மராஸ்ஸோ மாடலும் ஒன்று ஆகும். ஆனால், நம்முடைய அதிக மைலேஜ் தரக்கூடிய எம்பிவி ரக கார்கள் பட்டியலில் இக்காரே கடைசி மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக மைலேஜை தரும் அதிக இருக்கைகள் கொண்ட கார்... புதுசா கார் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட ஒரு முறை பாத்துடுங்க!!

1.5 லிட்டர் டர்போ டீசல் மோட்டாரில் இயங்கக் கூடிய இக்கார் அதிகபட்சமாக 12 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 11.64 லட்சம் என்ற ஆரம்ப விலையில் மஹிந்திர மராஸ்ஸோ விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

அதிக மைலேஜை தரும் அதிக இருக்கைகள் கொண்ட கார்... புதுசா கார் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட ஒரு முறை பாத்துடுங்க!!

4. ரெனால்ட் ட்ரைபர்

மைலேஜ்: ஒரு லிட்டருக்கு 19 கிமீ தரும் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்)

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காருக்கு அடுத்தபடியாக நாம் பார்க்க இருப்பது ரெனால்ட் நிறுவனத்தின் ட்ரைபர் எம்பிவி ரக காரை பற்றியே ஆகும். இக்கார் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19கிமீ மைலேஜ் தரும். இந்தியாவின் அதிகம் விற்பனையாகக் கூடிய எம்பிவி கார்களில் ட்ரைபரும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக மைலேஜை தரும் அதிக இருக்கைகள் கொண்ட கார்... புதுசா கார் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட ஒரு முறை பாத்துடுங்க!!

இந்த கார் இந்தியாவில் ரூ. 5.30 லட்சம் தொடங்கி ரூ. 7.82 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது எக்ஸ்-ஷோரும் விலை என்பது கவனித்தகுந்தது. மலிவு விலையில் கிடைக்கும் இந்த எம்பிவி காரில் ரெனால்ட் நிறுவனம் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் எஞ்ஜினைப் பயன்படுத்தியுள்ளது. இது அதிகபட்சமாக 70பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மேனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அதிக மைலேஜை தரும் அதிக இருக்கைகள் கொண்ட கார்... புதுசா கார் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட ஒரு முறை பாத்துடுங்க!!

3. மாருதி சுசுகி எக்ஸ்எல்6

மைலேஜ்: ஒரு லிட்டருக்கு 19.1 கிமீ தரும் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்)

இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் மாருதி சுசுகியின் எக்ஸ்எல்6 எம்பிவி கார் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இக்காரின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதிக் கொண்ட வேரியண்ட் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.1 கிமீ வரை மைலேஜை தரும்.

அதிக மைலேஜை தரும் அதிக இருக்கைகள் கொண்ட கார்... புதுசா கார் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட ஒரு முறை பாத்துடுங்க!!

இந்த காரில் 105 பிஎச்பி திறனை வெளியேற்றக் கூடிய 1.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் மோட்டாரையே நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இந்தியாவில் மாருதி சுசுகி எக்ஸ்எல்6 எம்பிவி ரூ. 9.94 லட்சம் தொடங்கி ரூ. 11.73 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

அதிக மைலேஜை தரும் அதிக இருக்கைகள் கொண்ட கார்... புதுசா கார் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட ஒரு முறை பாத்துடுங்க!!

2. மாருதி சுசுகி எர்டிகா

மைலேஜ்: ஒரு லிட்டருக்கு 19.1 கிமீ தரும் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்)

நமது அதிக மைலேஜ் தரும் எம்பிவி ரக கார்களின் பட்டியலில் மாருதி எர்டிகா மாடலே இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எம்பிவி காரான இது ரூ. 7.81 லட்சம் தொடங்கி ரூ. 10.59 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு தானியங்கி டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் தேர்வில் இக்கார் விற்பனைக்கு கிடைக்கிறது.

அதிக மைலேஜை தரும் அதிக இருக்கைகள் கொண்ட கார்... புதுசா கார் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட ஒரு முறை பாத்துடுங்க!!

1. டட்சன் கோ-ப்ளஸ்

மைலேஜ்: ஒரு லிட்டருக்கு 19.2 கிமீ தரும் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்)

இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரக்கூடிய எம்பிவி கார்களின் பட்டியலில் டட்சன் கோ ப்ளஸ் காரே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிகபட்சமாக 19.2 கிமீ மைலேஜை வழங்கி இக்கார் முதல் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றது.

அதிக மைலேஜை தரும் அதிக இருக்கைகள் கொண்ட கார்... புதுசா கார் வாங்க போறீங்கனா இந்த லிஸ்ட ஒரு முறை பாத்துடுங்க!!

டட்சன் கோ ப்ளஸ் இந்தியாவின் அதிக மைலேஜ் தரக்கூடிய கார் மட்டுமல்ல மிக மிக மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கக் கூடிய காரும்கூட. ரூ. 4.24 லட்சம் தொடங்கி ரூ. 6.99 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த விலையிலேயே தானியங்கி (சிவிடி) மற்றும் மேனுவல் (5 ஸ்பீடு) எனும் இரு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷனை டட்சன் வழங்குகின்றது.

Most Read Articles

English summary
Top 5 India’s Most Fuel Efficient Multi Utility Vehicles. Read In Tamil.
Story first published: Thursday, April 22, 2021, 13:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X