2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான்! குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!

விலைக் குறைந்த டாப் 5 பட்ஜெட் பைக்குகள் பற்றிய தகவலை எஞ்ஜின் விவரத்துடன் பட்டியலாகத் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

2021ம் ஆண்டின் விலை குறைந்த பைக்குகளின் பட்டியல்... குடியரசு தினத்தில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!!

உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதைக் காரணம் காட்டி நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல அதன் தயாரிப்புகளின் (வாகனங்களின்) விலையை உயர்த்தின. இதனால், 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து புதிய வாகனங்கள் சில புதிய விலை உயர்வின்படியே விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

2021ம் ஆண்டின் விலை குறைந்த பைக்குகளின் பட்டியல்... குடியரசு தினத்தில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!!

அந்தவகையில், இந்திய இருசக்கர வாகன சந்தையில் விலையையுர்வு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் மோட்டார்சைக்கிளைப் பற்றியே இப்பதிவில் நாம் பார்க்கிவிருக்கின்றோம். குறிப்பாக மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 5 பைக்குகளைப் பற்றியே நாம் காண இருக்கின்றோம்.

2021ம் ஆண்டின் விலை குறைந்த பைக்குகளின் பட்டியல்... குடியரசு தினத்தில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!!

72ம் ஆண்டு குடியரசு தினத்தில் புதிய பைக்கை வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால் நிச்சயம் இந்த பட்டியல் உங்களுக்கு உதவியாக இருக்கும். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

2021ம் ஆண்டின் விலை குறைந்த பைக்குகளின் பட்டியல்... குடியரசு தினத்தில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!!

பஜாஜ் பிளாட்டினா 100

விலை: ரூ. 59,859 - ரூ. 63,578

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் மோட்டார்சைக்கிள்களில் பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா 100 பைக்கும் ஒன்றாகும். தினசரி பயணம் மேற்கொள்வோரின் விருப்பமிகு பைக்காக இது இருக்கின்றது. இப்பைக்கே நம் பார்க்கவிருக்கும் குறைந்த விலை பைக்குகளின் வரிசையில் ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கின்றது. இப்பைக்கினை பஜாஜ் நிறுவனம் ரூ. ரூ. 59,859 என்ற ஆரம்ப விலையில் விற்பனைச் செய்து வருகின்றது.

2021ம் ஆண்டின் விலை குறைந்த பைக்குகளின் பட்டியல்... குடியரசு தினத்தில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!!

இப்பைக்கின் உயர்நிலை வேரியண்டின் விலை ரூ. 63,578 ஆகும். இவையிரண்டும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இப்பைக்கில் 102 சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய 4 ஸ்ட்ரோக், டிடிஎஸ்-ஐ, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினையே பஜாஜ் பயன்படுத்தியுள்ளது. இது அதிகபட்சமாக 7.9 பிஎஸ் பவரையும், 8.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

2021ம் ஆண்டின் விலை குறைந்த பைக்குகளின் பட்டியல்... குடியரசு தினத்தில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!!

டிவிஎஸ் ஸ்போர்ட்

விலை: ரூ. 56,100 - ரூ. 62,950

நாம் பார்க்கவிருக்கும் அடுத்த விலைக் குறைந்த பைக்காக டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்போர்ட் இருக்கின்றது. மைலேஜ் வழங்குவதில் பெயர்போன மோட்டார்சைக்கிளாக இருக்கும் இந்த மாடல் இந்தியாவில் ரூ. 56,100 தொடங்கி ரூ. 62,950 வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

2021ம் ஆண்டின் விலை குறைந்த பைக்குகளின் பட்டியல்... குடியரசு தினத்தில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!!

இப்பைக் ட்யூப் லெஸ் டயர், கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இப்பைக்கில் 109.7 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.29 பிஎஸ் பவரையும், 8.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக் கூடியது.

2021ம் ஆண்டின் விலை குறைந்த பைக்குகளின் பட்டியல்... குடியரசு தினத்தில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!!

பஜாஜ் சிடி 110

விலை: ரூ. 54,138

விலைக் குறைந்த பைக்குகளிலேயே பிரீமியம் தரத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்காக பஜாஜ் சிடி110 மோட்டார்சைக்கிள் இருக்கின்றது. இப்பைக்கிள் எல்இடி டிஆர்எல்கள், ரப்பர் டேங்க் பேட்கள், பேஸ் பிளேட், அடர்த்தியான பேட்டட் இருக்கை, அப்சஸ்வெப்ட் எக்சாஸ்ட் என பல்வேறு பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

2021ம் ஆண்டின் விலை குறைந்த பைக்குகளின் பட்டியல்... குடியரசு தினத்தில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!!

இருப்பினும் விலைக் குறைந்த பைக்காக இது இந்திய சந்தையில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றது. இப்பைக் சிங்கிள் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 54,138 ஆகும். இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இப்பைக்கில் 115.45 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 8.6 பிஎஸ், 9.81 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

2021ம் ஆண்டின் விலை குறைந்த பைக்குகளின் பட்டியல்... குடியரசு தினத்தில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!!

ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்

விலை: ரூ. 51,200 - ரூ. 61,225

ஹீரோ நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக்காக எச்எஃப் டீலக்ஸ் மோட்டார்சைக்கிள் இருக்கின்றது. இப்பைக் 1.4 லட்சம் யூனிட் வரை விற்பனையாகி புதிய மைல் கல்லை அண்மையில் எட்டியது. இந்த புதிய எண்ணிக்கையால் நாட்டிந் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் பட்டியலில் இப்பைக் இரண்டாம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தகுந்தது.

2021ம் ஆண்டின் விலை குறைந்த பைக்குகளின் பட்டியல்... குடியரசு தினத்தில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!!

இதனை ரூ. 51,200 என்ற விலையில் தொடங்கி ரூ. 61,225 வரையிலான விலையில் விற்பனைச் செய்து வருகின்றது. குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எச்எஃப் டீலக்ஸ் பைக்கில் கிக் ஸ்டார்ட் வசதி மட்டுமே இடம் பெற்றிருக்கின்றது. அதேசமயம், அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எச்எஃப் டீலக்ஸ் வேரியண்டின் கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் என இரு வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.

2021ம் ஆண்டின் விலை குறைந்த பைக்குகளின் பட்டியல்... குடியரசு தினத்தில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!!

பஜாஜ் சிடி 100

விலை: ரூ. 47,654

இந்த பட்டியலில் நாம் பார்க்கவிருக்கும் மிக குறைந்த விலைக் கொண்ட பைக்காக பஜாஜ் சிடி 100 இருக்கின்றுத. இப்பைக் அதிகபட்சமாக ரூ. 47,654 என்ற விலையிலேயே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இப்பைக்கில் 102 சிசி திறன் கொண்ட எஞ்ஜினையே பஜாஜ் பயன்படுத்தியுள்ளது.

2021ம் ஆண்டின் விலை குறைந்த பைக்குகளின் பட்டியல்... குடியரசு தினத்தில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!!

இது 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 7.9 பிஎஸ் பவரையும், 8.34 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

குறிப்பு: மேலே பார்த்த அனைத்து பைக்குகளின் விலையும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும்.

Most Read Articles

English summary
Top 5 Most Affordable Motorcycles In India: Here Is New List. Read In Tamil.
Story first published: Monday, January 25, 2021, 19:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X