2021 கியா செல்டோஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ள 8 புதிய அம்சங்கள்

வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள கியா செல்டோஸ் கார் சில தினங்களுக்கு பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரில் இடம்பெற்றுள்ள 7 புதிய அம்சங்கள்குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய கியா செல்டோஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ள 8 புதிய அம்சங்கள்

விலை விபரம்

புதிய கியா செல்டோஸ் கார் ரூ.9.95 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆரம்ப விலை தொடர்ந்து ரூ.10 லட்சத்திற்கு மிகாமல் பார்த்துக் கொண்டுள்ளது கியா. டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், 17 விதமான கூடுதல் அம்சங்களுடன் 2021 மாடலாக வந்துள்ளது. இதில் பல சிறப்பம்சங்கள் இதன் ரகத்தில் முதலாவதாக இந்த எஸ்யூவியில் இடம்பெற்றுள்ளது. அதில், முக்கியமானவற்றை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய கியா செல்டோஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ள 8 புதிய அம்சங்கள்

புதிய லோகோ

சில மாதங்களுக்கு முன் கியா நிறுவனம் வெளியிட்ட புதிய லோகோவுடன் கியா செல்டோஸ் கார் வந்துள்ளது. இந்த புதிய லோகோ மூலமாக புதிதாக இந்த காரை வாங்குவோருக்கு புதிய அம்சமாக இருக்கும் என்பதுடன், புதிய மாடல் என்பதை எளிதாக அடையாளம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

புதிய கியா செல்டோஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ள 8 புதிய அம்சங்கள்

ஐஎம்டி கியர்பாக்ஸ்

புதிய செல்டோஸ் காரில் ஐஎம்டி எனப்படும் இன்டெலிஜென்ட் மேனுவல் கியர்பாக்ஸ் எனப்படும் புதிய வகை கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு சொனெட் காரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கியர்பாக்ஸ் தேர்வு இப்போது செல்டோஸ் காரிலும் வழங்கப்படுகிறது. க்ளட்ச் இல்லாமல், கியரை ஓட்டுனர் மேனுவலாக மாற்றும் வகையில் இந்த கியர்பாக்ஸ் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கியா செல்டோஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ள 8 புதிய அம்சங்கள்

வேரியண்ட் மாற்றங்கள்

கியா செல்டோஸ் காரின் 1.5 லிட்டர் டீசல் மாடலில் வழங்கப்பட்டு வந்த எச்டிஎக்ஸ் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டுவிட்டது. தற்போது 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் ஐஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட தேர்வு எச்டிகே ப்ளஸ் என்ற வேரியண்ட்டிலும், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் மாடலில் ஜிடிஎக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட்டும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

புதிய கியா செல்டோஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ள 8 புதிய அம்சங்கள்

பேடில் ஷிஃப்ட் வசதி

புதிய செல்டோஸ் காரின் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் கொண்ட ஜிடிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டிலும், டீசல் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிலும் பேடில் ஷிஃப்ட் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய கியா செல்டோஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ள 8 புதிய அம்சங்கள்

புதிய வசதிகள்

இதன் ரக கார்களில் முதல்முறையாக வைரஸ் மற்றும் பாக்டீரியாவை அழிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட் ப்யூர் ஏர் பியூரிஃபயர் வழங்கப்படுகிறது. மேனுவல் மாடலில் ஸ்மார்ட் கீ மூலமாக ரிமோட் முறையில் எஞ்சின் ஸ்டார்ட் செய்யும் வசதி, ஓடிஏ தொழில்நுட்ப முறையில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் மேப்பை அப்டேட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய கியா செல்டோஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ள 8 புதிய அம்சங்கள்

கூடுதல் அம்சங்களுடன் வாய்ஸ் கமாண்ட்

சன்ரூஃபை திறந்து மூடுவது மற்றும் ஓட்டுனர் பக்கத்திற்கான ஜன்னலை வாய்ஸ் கமாண்ட் மூலமாக கட்டுப்படுத்தும் வகையில் கூடுதல் வசதிகள் யுவோ கனெக்டெட் கார் தொழில்நுட்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய கியா செல்டோஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ள 8 புதிய அம்சங்கள்

கூடுதல் பாதுகாப்பு வசதிகள்

விலை குறைவான வேரியண்ட்டுகளில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், பிரேக் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய கியா செல்டோஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ள 8 புதிய அம்சங்கள்

சீட் அப்ஹோல்ஸ்ட்ரி

புதிய செல்டோஸ் காரின் எச்டிகே ப்ளஸ் ஐஎம்டி வேரியண்ட்டில் பீஜ் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரியும், எச்டிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டில் பழுப்பு வண்ண செயற்கை தோல் தன்மையை வழங்கும் லெதரேட் இருக்கைகளும் உள்ளன. இந்த மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் ஜிடிஎக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட்டில் கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலான ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய கியா செல்டோஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ள 8 புதிய அம்சங்கள்

கூடுதல் அம்சங்கள் புதிய கியா செல்டோஸ் கார் பிரியர்களை மேலும் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா, விரைவில் வரும் ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்களால் கடும் சந்தைப் போட்டி உருவாகி உள்ள நிலையில், இந்த புதிய அம்சங்கள் அவசியமானதாக இருக்கிறது.

Most Read Articles

English summary
Here are some important things you should know about 2021 Kia Seltos.
Story first published: Tuesday, May 4, 2021, 12:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X