Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 7 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021ல் விற்பனைக்கு பெற முடியாத கார்கள் இவைதான்!! அச்சச்சோ.. இதையெல்லாம் தவறவிட்டோமா?!
2021ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. இதற்கு முதல் ஒரு புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லிவிடுகிறேன். நமது இந்தியாவில் உள்ள கார்களை பொறுத்தவரையில், 2020ல் சில மாதங்கள் அல்லது பல மாதங்கள் விற்பனையில் இருந்த சில கார்கள் 2021ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட போவதில்லை. அவற்றில் சிலவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரெனால்ட் கேப்சர் எஸ்யூவி
பிஎஸ்6 தரத்திற்கு தயாரிப்பு நிறுவனத்தினால் அப்கிரேட் செய்யப்படாததால் விற்பனை நிறுத்தப்பட்ட கார்களுள் ரெனால்ட் கேப்சர் எஸ்யூவி காரும் ஒன்று. மிக சமீபத்தில் 2017ல்தான் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எஸ்யூவி கார் மாருதி எஸ்-க்ராஸ், நிஸான் கிக்ஸ், கியா செல்டோஸ் கார்களை விற்பனை நிறுத்தப்படும் வரையில் விற்பனையில் போட்டியாக இருந்து வந்தது.

இவ்வாறான ஜாம்பவான் நிறுவனங்களது தயாரிப்புகளின் முன் நிற்க முடியவில்லையோ என்னமோ தெரியவில்லை, ஆரம்பத்தில் இருந்தே விற்பனையில் இந்த ரெனால்ட் கார் சோபிக்கவில்லை. இவ்வளவு மோசமான வரவேற்பு வேறெந்த ரெனால்ட் காருக்கும் கூட கிடைவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் மற்ற நாட்டு சந்தைகளில் நல்ல வரவேற்பே இந்த பிரிட்டிஷ் கார் நிறுவனத்தின் எஸ்யூவி காருக்கு கிடைக்கிறது. அத்தகைய நாடுகளுள் ஒன்றான ரஷ்யாவில் 2020ஆம் ஆண்டிற்கான கேப்சர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவில் இதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

நிஸான் சன்னி செடான்
2011ல் இருந்து நிஸான் நிறுவனத்தின் செடான் காரான சன்னி இந்தியாவில் விற்பனையில் இருந்தது. அதன்பின் 2017ல் புதிய தலைமுறை அப்கிரேடை பெற்றிருந்த நிஸான் சன்னி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டன.

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி
பிஆர்-வி எஸ்யூவி காரின் விற்பனை நிறுத்தத்துடன் ஹோண்டா நிறுவனம் அதன் வணிகத்தை இந்த 2021ல் இந்தியாவில் துவங்கவுள்ளது. ஏனெனில் இந்த கார் இன்னும் பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்படவில்லை.

2015ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா பிஆர்-வி 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து விற்பனைக்கு வந்தது. 2019ல் 2,857 யூனிட்கள் விற்பனையாகி இருந்த இந்த ஹோண்டா எஸ்யூவி கார் கடந்த 2018ல் 7,140 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மற்ற நாட்டு சந்தைகளில் ஹோண்டா பிஆர்-வி 5-இருக்கை மற்றும் 7-இருக்கை தேர்வுகளில் கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில் இந்த கார் 7-இருக்கை அமைப்பில் மட்டும்தான் கிடைத்தது. இதுவே இந்த ஹோண்டா கார் வாடிக்கையாளர்களை கவராததற்கு முக்கிய காரணம் எனலாம்.

நிஸான் மைக்ரா ஹேட்ச்பேக்
நிஸான் நிறுவனத்தின் மைக்ரா ஹேட்ச்பேக் கார் அறிமுகம் செய்யப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன. நமக்கு தெரிந்தவரை 2014ல் ஆயுட்காலத்தை சிறிது அதிகப்படுத்தும் விதமாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்றிருந்த இந்த நிஸான் கார் முழு-ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை 2017ல் பெற்றது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்
தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் இந்திய இணையத்தள பக்கத்தில் இருந்து அதன் சப்-4 மீட்டர் செடான் காரான எக்ஸ்சென்ட்டின் பெயரை நீக்கியுள்ளது.

இதற்கு மாற்றாக அவ்ரா செடான் காரை 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தினாலும், உண்மையாக இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் ஐ10 (கிராண்ட் ஐ10) கார் கொடுத்த ஆறுதல் பங்களிப்பே எக்ஸ்சென்ட் காரின் விற்பனை நிறுத்தத்தை மேற்கொள்ள ஹூண்டாய் நிறுவனத்திற்கு தைரியத்தை கொடுத்தது என சொல்ல வேண்டும்.

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்ட இந்த ஹூண்டாய் காம்பெக்ட் செடான் கார் 5-ஸ்பீடு என்ற ஒற்றை ட்ரான்ஸ்மிஷன் தேர்வுடன் வழங்கப்பட்டது.