அதிக திறனை வெளியேற்றும் டாப் 5 டர்போ பெட்ரோல் எஞ்ஜின் வாகனங்கள்... விலையுடன் கூடிய பட்டியல்!!

அதிக திறனை வெளியேற்றக் கூடிய டாப் ஐந்து டர்போ பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட கார்கள் பற்றிய தகவலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அதிக திறனை வெளியேற்றும் டாப் 5 டர்போ பெட்ரோல் எஞ்ஜின் வாகனங்கள்... விலையுடன் கூடிய பட்டியல்!!

இந்தியாவில் மாசு உமிழ்வு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. அதேவேலையில், எரிபொருள்களின் (பெட்ரோல் மற்றும் டீசல்) விலையும் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டு வருகின்றது. இவற்றின் விளைவாக, மாசுபாட்டை குறைத்து, மைலேஜ் விஷயத்திலும் சமரசம் இன்றி செயல்படக் கூடிய டர்போசார்ஜட் வசதிக் கொண்ட எஞ்ஜின் கொண்ட வாகனங்கள் இந்திய சந்தையில் அதிகமாகக் களமிறக்கப்பட்டு வருகின்றன.

அதிக திறனை வெளியேற்றும் டாப் 5 டர்போ பெட்ரோல் எஞ்ஜின் வாகனங்கள்... விலையுடன் கூடிய பட்டியல்!!

பல கார் உற்பத்தியாளர்கள் மிக சிறிய எஞ்ஜின்களில்கூட டர்போசார்ஜட் வசதியை வழங்கி வருகின்றனர். இம்மாதிரியான வசதிகளுடன் இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இருக்கும் டாப் 5 ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்கள் பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அதிக திறனை வெளியேற்றும் டாப் 5 டர்போ பெட்ரோல் எஞ்ஜின் வாகனங்கள்... விலையுடன் கூடிய பட்டியல்!!

Hyundai i10 Nios (ஹூண்டாய் ஐ10 நியாஸ்)

Hyundai (ஹூண்டாய்) நிறுவனம் அதன் i10 Nios (ஐ10 நியாஸ்) காரில் பன்முக எஞ்ஜின் தேர்வை வழங்குகின்றது. அந்தவகையில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கும் மிக சிறந்த எஞ்ஜின் தேர்வாக 1.0 லிட்டர் டர்போ ஜிடிஐ (Gasoline Direct Injection) எஞ்ஜின் தேர்வு இருக்கின்றது.

அதிக திறனை வெளியேற்றும் டாப் 5 டர்போ பெட்ரோல் எஞ்ஜின் வாகனங்கள்... விலையுடன் கூடிய பட்டியல்!!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைந்து இயங்கும். ஹூண்டாய் ஐ10 நியாஸ் இந்தியாவில் ரூ. 5,28,590 தொடங்கி ரூ. 7,53,450 வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

அதிக திறனை வெளியேற்றும் டாப் 5 டர்போ பெட்ரோல் எஞ்ஜின் வாகனங்கள்... விலையுடன் கூடிய பட்டியல்!!

Hyundai i20 (ஹூண்டாய் ஐ20)

Hyundai (ஹூண்டாய்) நிறுவனத்தின் மற்றுமொரு சிறிய மற்றும் டர்போ எஞ்ஜின் வசதிக் கொண்ட காராக i20 (ஐ20) இருக்கின்றது. நிறுவனம் 1.0 லிட்டர் டர்போ ஜிடிஐ எஞ்ஜினை இக்காரில் வழங்கி வருகின்றது. கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் இடம் பெற்றிருப்பதைப் போலவே இக்காரிலும் மிக சிறந்த எஞ்ஜினை ஹூண்டாய் வழங்குகின்றது.

அதிக திறனை வெளியேற்றும் டாப் 5 டர்போ பெட்ரோல் எஞ்ஜின் வாகனங்கள்... விலையுடன் கூடிய பட்டியல்!!

ஹூண்டாய் ஐ20 டர்போ 6 ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மிக சமீபத்தில் நிறுவனம் இந்த கார் மாடலில் என் லைன் எனும் புதிய தேர்வை விற்பனைக்குக் களமிறக்கியது குறிப்பிடத்தகுந்தது. ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு இணையான வசதிகளுடன் இந்த கார் விற்பனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் ஐ20 ரூ. 6,91,200 ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது.

அதிக திறனை வெளியேற்றும் டாப் 5 டர்போ பெட்ரோல் எஞ்ஜின் வாகனங்கள்... விலையுடன் கூடிய பட்டியல்!!

Hyundai Aura (ஹூண்டாய் அவுரா)

Hyundai (ஹூண்டாய்) நிறுவனத்தின் இன்னொரு டர்போ எஞ்ஜின் வசதிக் கொண்ட கார் மாடலாக Aura (அவரா) இருக்கின்றது. இந்த காரில் நிறுவனம் 1.0லிட்டர் டர்போசாரஜட் ஜிடிஐ எஞ்ஜினை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த எஞ்ஜின் 100 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டார் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இயங்குகின்றது. இந்த கார் ரூ. 5,99,900 ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது.

அதிக திறனை வெளியேற்றும் டாப் 5 டர்போ பெட்ரோல் எஞ்ஜின் வாகனங்கள்... விலையுடன் கூடிய பட்டியல்!!

Volkswagen Polo (ஃபோக்ஸ்வேகன் போலோ)

Volkswagen (ஃபோக்ஸ்வேகன்) நிறுவனம் அதன் Polo (போலோ) ஹேட்ச்பேக் ரக காரில் டர்போ-பெட்ரோல் எஞ்ஜின் தேர்வை விற்பனைக்கு வழங்குகின்றது. இந்த போலோ கார் மாடல் இந்திய சந்தையில் நிறுவனத்தின் கீழ் பல ஆண்டுகளாக விற்பனையில் இருக்கின்றது. 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மோட்டார் போலோ-வில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 110 பிஎஸ் மற்றும் 175 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

அதிக திறனை வெளியேற்றும் டாப் 5 டர்போ பெட்ரோல் எஞ்ஜின் வாகனங்கள்... விலையுடன் கூடிய பட்டியல்!!

உயர்நிலை தேர்வுகளாக மட்டுமே டர்போ மோட்டார்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த கார் ரூ. 6.27 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது டர்போ வேரியண்டின் விலை அல்ல. ஆரம்ப நிலையில் விற்பனைக்குக் கிடைக்கும் போலோவின் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக திறனை வெளியேற்றும் டாப் 5 டர்போ பெட்ரோல் எஞ்ஜின் வாகனங்கள்... விலையுடன் கூடிய பட்டியல்!!

Skoda Rapid (ஸ்கோடா ரேபிட்)

Skoda (ஸ்கோடா) நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கும் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் வசதிக் கொண்ட கார் மாடலாக Rapid (ரேபிட்) இருக்கின்றது. ஃபோக்ஸ்வேகன் போலோவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே எஞ்ஜின்தான் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதிக திறனை வெளியேற்றும் டாப் 5 டர்போ பெட்ரோல் எஞ்ஜின் வாகனங்கள்... விலையுடன் கூடிய பட்டியல்!!

இந்த எஞ்ஜின் 110 பிஎஸ் மற்றும் 175 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த கார் மாடலின் ஆரம்ப நிலை மாடல் ரூ. 7,79,000 என்ற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Top five cars with 1 0 l turbo petrol engine option
Story first published: Monday, September 6, 2021, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X