Just In
- 52 min ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 53 min ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 1 hr ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 2 hrs ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- Movies
ரம்ஜான் நாளில் சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட்.. ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு!
- Education
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- News
எவரெஸ்ட் மலை சிகரத்தையும் விட்டு வைக்காத கொரோனா - மலையேற்ற வீரருக்கு தொற்று உறுதி
- Sports
ஹர்பஜன் காலில் விழுந்த சுரேஷ் ரெய்னா. களத்திலேயே நடந்த சம்பவம்.. சக வீரர்கள் திகைப்பு..காரணம் என்ன?
- Finance
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா?
- Lifestyle
கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டூர் போகும்போது நிறைய லக்கேஜை எடுத்து செல்லலாம்... அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட டாப் 5 ஹேட்ச்பேக் கார்கள்...
அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட டாப் 5 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். என்ன விலை மற்றும் எத்தனை லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டவை என்பது பற்றிய துள்ளியமான தகவலை இப்பதிவில் காணலாம் வாங்க.

அதிக இருக்கை, இடம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட கார்களைப் போலவே அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட கார்களுக்கான தேடலும் நம் நாட்டில் அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக, வெளியூர் பயணங்களை அதிகம் மேற்கொள்ளும் நபர்களே இத்தகைய வாகனங்களை பெருமளவில் எதிர்பார்க்கின்றனர்.

அவ்வாறு, அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட தேடும் நபர்களுக்கு உதவும் விதமாக இப்பதிவை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தொகுத்து வழங்கியுள்ளது. இப்பதிவில் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட ஹேட்ச்பேக் கார்களைப் பற்றியும், அவற்றின் விலைகுறித்த முழுமையான தகவலையே நாம் பார்க்கவிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

ஹோண்டா ஜாஸ்
பூட் ஸ்பேஸ்: 354 லிட்டர்
ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஜாஸ் மாடலும் ஒன்று. அதிக இடவசதிக்கு பெயர் போன வாகனமாக இக்கார் இருக்கின்றது. இந்த ஐந்து பெரியவர்கள் மிக தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் இருக்கை வசதியைப் போலவே பூட் ஸ்பேஸும் அதிக பரப்பளவைக் கொண்டதாக இருக்கின்றது.

அதாவது, இதன் பின்பகுதியில் 354 லிட்டர் பொருட்களை நிரப்பிச் செல்கின்ற வகையில் அதிக இடவசதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதுவே தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் அதிக பூட் ஸ்பேஸ் வசதிக் கொண்ட காராகும். இக்கார், ரூ. 7.55 லட்சம் தொடங்கி ரூ. 9.79 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஒட்டுமொத்தமாக ஆறு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி வேகன்ஆர்
பூட் ஸ்பேஸ்: 340 லிட்டர்
ஹோண்டா ஜாஸ் காருக்கு அடுத்தபடியாக அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட காராகா மாருதி வேகன்ஆர் ஹேட்ச்பேக் கார் இருக்கின்றது. மாருதி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் இக்காரும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் பூட் ஸ்பேஸ் 340 லிட்டர் ஆகும்.

ஆகையால், எந்தவித தங்கு தடையின்றி ஒரு குடும்பத்திற்கு தேவையான ஒரு வார பொருட்களை தாராளமாக எடுத்து செல்ல முடியும். மாருதி வேகன்ஆர் இந்தியாவில் ரூ. 4.66 லட்சம் தொடங்கி ரூ. 6.18 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மாருதி பலினோ
பூட் ஸ்பேஸ்: 339 லிட்டர்
அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் மாருதி நிறுவனத்தின் தயாரிப்பே இருக்கின்றது. இந்த இடத்தை பலினோ கார் பிடித்திருக்கின்றது. இக்காரில் 339 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த காரிலும் ஐந்து பெரியவர்கள் மிக தாராளமாக அமர்ந்து செல்லலாம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி பலினோ ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காராகும். இந்த கார் இந்தியாவில் ரூ. 5.88 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலை ரூ. 9.09 லட்சம் ஆகும்.

ஹூண்டாய் ஐ20
பூட் ஸ்பேஸ்: 311 லிட்டர்
ஹூண்டாய் நிறுவனத்தின் புதுமுக கார்களில் ஐ20 மாடலும் ஒன்று. புதிய தலைமுறை மாடலாக மிக சமீபத்திலேயே நிறுவனம் இந்தியாவில் இக்காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பழைய தலைமுறை ஐ20 மாடலைக்காட்டிலும் இது அதிக நீளமான வீல் பேஸைக் கொண்டிருக்கின்றது.

இதேபோன்று, இதன் பூட் ஸ்பேசும் சற்று அதிகமாக காணப்படுகின்றது. எனவேதான் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட கார்களின் பட்டியலில் ஹூண்டாய் ஐ20 நான்காவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இதன் பூட் ஸ்பேஸ் 311 லிட்டர் ஆகும். முந்தைய மாடலைக் காட்டிலும் இது 26 லிட்டர் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் ரூ. 6,79,900 தொடங்கி ரூ. 1,074,900 வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

ரெனால்ட் க்விட்
பூட் ஸ்பேஸ்: 300 லிட்டர்
ரெனால்ட் நிறுவனத்தின் ஆரம்ப நிலை மாடல்களில் க்விட் கார் இருக்கின்றது. இதுவும் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஓர் பிரீமியம் வசதிக் கொண்ட காராகும். இந்த காரே இந்த பட்டியலில் பார்க்க இருக்கும் கடைசி அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட வாகனமாகும்.

இக்கார் அதிகபட்சமாக 300 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டிருக்கின்றது. 4 பெரிய பேக்குகளை எடுத்துச் செல்கின்ற வகையில் இட வசதிக்கொடுக்கப்பட்டிருக்கின்றது. இக்கார் இந்தியாவில் ரூ. 3,12,800 தொடங்கி ரூ. 5,31,200 வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.