சொகுசு கார்களுக்கே செம்ம டஃப் கொடுக்குது... Mahindra XUV700 கார் பற்றிய டாப் 5 முக்கிய தகவல்கள்!

பிஎம்டபிள்யூ, பென்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அதிக தொழில்நுட்பம் மற்றும் சிறப்பம்சங்களுடன் உருவாகி இருக்கும் Mahindra XUV700 கார் பற்றி அறிய வேண்டிய டாப் 5 முக்கிய தகவல்களை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சொகுசு கார்களுக்கே செம்ம டஃப் கொடுக்குது... Mahindra XUV700 கார் பற்றி டாப் 5 முக்கிய தகவல்கள்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் புதுமுக அறிமுகமாக எக்ஸ்யூவி 700 (XUV700) கார் மாடல் இருக்கின்றது. மிகவும் பிரம்மிக்க வைக்கும் தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த கார் உருவாகி இருக்கின்றது. இது பற்றி அறிய வேண்டிய ஐந்து முக்கிய தகவல்களையே இப்பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் புதிய எக்ஸ்யூவி 700 கார் பற்றிய முக்கிய விபரங்களைக் கீழே காணலாம்.

சொகுசு கார்களுக்கே செம்ம டஃப் கொடுக்குது... Mahindra XUV700 கார் பற்றி டாப் 5 முக்கிய தகவல்கள்!

டிசைன் (Design):

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 முழுக்க முழுக்க சொகுசு மற்றும் அதிக பிரீமியம் தர வசதிகளைக் கொண்ட காராக உருவாக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இதில் எக்கசக்க அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரை காட்டிலும் இது அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கிய கார் மாடலாக உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

சொகுசு கார்களுக்கே செம்ம டஃப் கொடுக்குது... Mahindra XUV700 கார் பற்றி டாப் 5 முக்கிய தகவல்கள்!

எக்ஸ்யூவி500 கார் மாடலை தழுவி இது (புதிய எக்ஸ்யூவி 700) உருவாக்கப்பட்டிருந்தாலும் வெளிப்புற தோற்றம் மற்றும் சிறப்பு வசதிகளில் வேற லெவலில் காட்சியளிக்கின்றது. புதிய கார் கதவு கைப்பிடிகள், லோகோ (சின்னம்), அட்டகாசமான ஹெட்லேம்ப் மற்றும் டிஆர்எல்கள் என முற்றிலும் கவர்ச்சியான கார் மாடலாக இது எக்ஸ்யூவி 700 உருவாகியுள்ளது.

சொகுசு கார்களுக்கே செம்ம டஃப் கொடுக்குது... Mahindra XUV700 கார் பற்றி டாப் 5 முக்கிய தகவல்கள்!

வெளிப்புறத்தைப் போலவே காரின் உட்பகுதியிலும் அதிக பிரீமியம் தர அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், பரந்த கிடைமட்டமான டேஷ்போர்டு, இலகு ரக இருக்கைகள் மற்றும் டேஷ்போர்டில் இரு பெரிய திரைகள் உள்ளிட்ட பிரம்மிக்க அம்சங்களை எக்ஸ்யூவி700 பெற்றிருக்கின்றது.

சொகுசு கார்களுக்கே செம்ம டஃப் கொடுக்குது... Mahindra XUV700 கார் பற்றி டாப் 5 முக்கிய தகவல்கள்!

சிறப்பம்சங்கள் (Features):

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் ட்யூவல்-ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரானிக் பார்கிங் பிரேக், ஒயர்லெஸ் சார்ஜிங், மல்டி ஃபங்க்ஷன் ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல், 360 டிகிரி கேமிரா, எலெக்ட்ரானிக் அட்ஜஸ்டபிள் முன் பக்க இருக்கை உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சொகுசு கார்களுக்கே செம்ம டஃப் கொடுக்குது... Mahindra XUV700 கார் பற்றி டாப் 5 முக்கிய தகவல்கள்!

பாதுகாப்பு அம்சங்கள்:

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பாதுகாப்பான கார் மாடல்களில் ஒன்றாக எக்ஸ்யூவி300 இருக்கின்றது. இதைவிட பல மடங்கு பாதுகாப்பு கருவிகள் கொண்ட கார் மாடலாக எக்ஸ்யூவி700-ஐ மஹிந்திரா உருவாக்கி இருக்கின்றது. அந்தவகையில், ஏறு ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்பி, அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டண்ட் சிஸ்டம் (Advanced Driver Assistance Systems) ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.

சொகுசு கார்களுக்கே செம்ம டஃப் கொடுக்குது... Mahindra XUV700 கார் பற்றி டாப் 5 முக்கிய தகவல்கள்!

இந்த அடாஸ் சிஸ்டமானது அதி நவீன பாதுகாப்பு அம்சமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல்,லேன் கீப் அசிஸ்டன்ஸ், அவசர கால பிரேக்கிங் உள்ளிட்ட வசதிகளை இது வழங்கும். இந்த அம்சம் எக்ஸ்யூவி700 இல் இடம் பெற இருப்பதன் காரணத்தினாலேயே இது மிக அதிக பாதுகாப்பு திறன் கொண்ட காராக பார்க்கப்படுகின்றது.

சொகுசு கார்களுக்கே செம்ம டஃப் கொடுக்குது... Mahindra XUV700 கார் பற்றி டாப் 5 முக்கிய தகவல்கள்!

எஞ்ஜின் (Powertrain):

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் வசதிகளில் இது கிடைக்கும்.

சொகுசு கார்களுக்கே செம்ம டஃப் கொடுக்குது... Mahindra XUV700 கார் பற்றி டாப் 5 முக்கிய தகவல்கள்!

இதன் பெட்ரோல் எஞ்ஜின் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் 4 சிலிண்டர் மோட்டாராகும். இது அதிகபட்சமாக 197 பிஎச்பி திறனை வெளியேற்றக் கூடியது. இதன் டீசல் எஞ்ஜின் 2.2 லிட்டர் டர்போசார்ஜட் மோட்டாராகும். இது அதிகபட்சமாக 182 பிஎச்பி திறனை வெளியேற்றக் கூடியது.

சொகுசு கார்களுக்கே செம்ம டஃப் கொடுக்குது... Mahindra XUV700 கார் பற்றி டாப் 5 முக்கிய தகவல்கள்!

வேரியண்ட் மற்றும் விலை விபரம் (Variants & Price):

மஹிந்திர எக்ஸ்யூவி 700 கார் ஒட்டுமொத்தமாக 28 வேரியண்ட்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், ஐந்து இருக்கை தேர்வு மற்றும் ஏழு இருக்கை தேர்வு என இரு விதமான இருக்கைத் தேர்வுகளிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

சொகுசு கார்களுக்கே செம்ம டஃப் கொடுக்குது... Mahindra XUV700 கார் பற்றி டாப் 5 முக்கிய தகவல்கள்!

ஐந்து இருக்கை தேர்வில் கிடைக்க இருக்கும் எக்ஸ்யூவி700 மாடலின் வேரியண்ட் மற்றும் விலை விபரம்:

MX petrol MT - Rs 11.99 lakh

MX diesel MT - Rs 12.29 lakh

AX3 petrol MT - Rs 13.99 lakh

AX3 diesel MT - Rs 14.99 lakh

AX5 petrol MT - Rs 14.99 lakh

AX5 diesel MT - Rs 15.99 lakh

AX5 petrol AT - Rs 16.29 lakh

AX5 diesel AT - Rs 17.29 lakh

AX5 diesel AT AWD - Rs 18.79 lakh

AX5(O) petrol AT - Rs 16.99 lakh

AX5(O) petrol AT AWD - Rs 18.49 lakh

AX5(O) diesel AT - Rs 17.99 lakh

AX5(O) diesel AT AWD - Rs 19.49 lakh

சொகுசு கார்களுக்கே செம்ம டஃப் கொடுக்குது... Mahindra XUV700 கார் பற்றி டாப் 5 முக்கிய தகவல்கள்!

ஏழு இருக்கை தேர்வில் கிடைக்க இருக்கும் எக்ஸ்யூவி700 மாடலின் வேரியண்ட் மற்றும் விலை விபரம்:

MX diesel MT - Rs 13.19 lakh

AX5 petrol MT - Rs 15.69 lakh

AX5 petrol AT - Rs 16.99 lakh

AX5 petrol AT AWD - Rs 18.49 lakh

AX5 diesel MT - Rs 16.69 lakh

AX5 diesel AT - Rs 17.99 lakh

AX5(O) petrol AT - Rs 17.69 lakh

AX5(O) diesel AT - Rs 18.69 lakh

AX7 petrol AT - Rs 18.49 lakh

AX7 petrol AT AWD - Rs 19.99 lakh

AX7(O) petrol AT - Rs 19.19 lakh

AX7(O) petrol AT AWD - Rs 20.69 lakh

AX7 diesel AT - Rs 19.49 lakh

AX7(O) diesel AT - Rs 20.19 lakh

AX7(O) diesel AT AWD - Rs 21.69 lakh

சொகுசு கார்களுக்கே செம்ம டஃப் கொடுக்குது... Mahindra XUV700 கார் பற்றி டாப் 5 முக்கிய தகவல்கள்!

மேலே பார்த்த வேரியண்ட் தேர்வுகளுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஐந்து விதமான வண்ண தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அந்தவகையில், சிவப்பு ரேஜ், மிட்நைட் கருப்பு, எவரெஸ்ட் வெள்ளை, எலெக்ட்ரிக் நீலம் மற்றும் டாஸ்லிங் சில்வர் ஆகிய நிற தேர்வில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கிறது.

சொகுசு கார்களுக்கே செம்ம டஃப் கொடுக்குது... Mahindra XUV700 கார் பற்றி டாப் 5 முக்கிய தகவல்கள்!

இரண்டு கட்டமாக இக்காரை விற்பனைக்குக் கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை, கோயம்பத்தூர், டெல்லி என்சிஆர், பெங்களூரு, மும்பை, ஹைதரபாத், அஹமதாபாத், இந்தூர், புனே, லக்னோ மற்றும் வதோதரா ஆகிய நகரங்களில் வரும் நாளை (அக்டோபர் 2) விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

சொகுசு கார்களுக்கே செம்ம டஃப் கொடுக்குது... Mahindra XUV700 கார் பற்றி டாப் 5 முக்கிய தகவல்கள்!

இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக அக்டோபர் 7ம் தேதி கொச்சின், கோழிகோடு, கான்பூர், நாஷிக், கத்தக், பாட்னா, சூரத் மற்றும் ஜெய்பூர் நகரங்களில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, பிற நகரங்களில் விற்பனைக்குக் கொண்டுவருவது குறித்த தகவலை நிறுவனம் அடுத்த சில நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Top five things to know about mahindra xuv700
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X