இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் நாட்டிற்குள் நுழைய இருக்கும் புதிய கார் மாடல்கள்... 5 கார்களின் பட்டியல்!

நடப்பாண்டின் (2021) இறுதியில் இந்தியாவில் தொடக்கத்தைப் பெறும் விதமாக குறிப்பிட்ட சில கார் மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அவை எவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் நாட்டிற்குள் நுழைய இருக்கும் புதிய கார் மாடல்கள்... 5 கார்களின் பட்டியல்!

கடந்த 2020ம் ஆண்டைப் போலவே நடப்பு 2021ம் ஆண்டு ஒட்டுமொத்த வாகன உலகிற்குமே பெரிதும் இன்னல் மிகுந்த ஆண்டாக கடந்து வருகின்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உற்பத்தி மற்றும் விற்பனை என அனைத்திலும் தொடர் சரிவை வாகன உலகம் சந்தித்து வருகின்றது. அதேநேரத்தில், சில நிறுவனங்கள் மட்டும் புதுமுகங்களின் அறிமுகத்தின் காரணமாக விற்பனையில் லேசான ஏற்றத்தைச் சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் நாட்டிற்குள் நுழைய இருக்கும் புதிய கார் மாடல்கள்... 5 கார்களின் பட்டியல்!

வைரஸ் பரவல் காரணமாக விற்பனை சரிவு மற்றும் உற்பத்தி குறைவு ஆகியவை மட்டுமே நிகழவில்லை. புதுமுக வாகனங்களின் அறிமுகமும் தள்ளி போயிருக்கின்றன. பல மாதங்களுக்கு முன்னரே அறிமுகமாக வேண்டிய புதிய கார் மாடல்கள் வைரஸ் பரவல் காரணமாக அடுத்த வருடம் வரை தள்ளி போயிருக்கின்றன.

இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் நாட்டிற்குள் நுழைய இருக்கும் புதிய கார் மாடல்கள்... 5 கார்களின் பட்டியல்!

அதேநேரத்தில் நடப்பாண்டிலேயே களம் காணுவோம் என சில புதிய வாகன மாடல்கள் அதன் அறிமுகத்தை 2021லேயே வழங்கியிருக்கின்றன. அந்தவகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் டாடா பஞ்ச் மற்றும் மாருதி சுசுகி செலிரியோ ஆகியவை அடங்கும்.

இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் நாட்டிற்குள் நுழைய இருக்கும் புதிய கார் மாடல்கள்... 5 கார்களின் பட்டியல்!

இந்த நிலையில், இன்னும் சில கார் மாடல்களும் நடப்பாண்டின் இறுதிக்குள்ளாக அறிமுகமாக இருக்கின்றன. நடப்பாண்டு முடிவைச் சந்திக்க இருக்கின்ற நேரத்திலும் சில கார் மாடல்கள் அறிமுகமாகியே தீருவோம் என்ற முடிவில் இருக்கின்றன. அவற்றில் ஐந்து முக்கிய கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் நடப்பாண்டின் இறுதியில் தொடக்கத்தைக் காண இருக்கும் அந்த 5 கார் மாடல்கள் பற்றிய முக்கிய விபரங்களைக் காணலாம்.

இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் நாட்டிற்குள் நுழைய இருக்கும் புதிய கார் மாடல்கள்... 5 கார்களின் பட்டியல்!

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (Volkswagen Tiguan)

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் முதல் காம்பேக்ட் எஸ்யவி ரக காரான டைகுன் மாடலை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நிறுவனம் இந்தியாவிற்கு ஒதுக்கியிருக்கும் கார் மாடலாக டைகுன் இருக்கின்றது. இது ஓர் பிரீமியம் தர எஸ்யூவி வாகனம் ஆகும்.

இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் நாட்டிற்குள் நுழைய இருக்கும் புதிய கார் மாடல்கள்... 5 கார்களின் பட்டியல்!

இக்காரை நிறுவனம் டிசம்பர் 7ம் தேதி அன்று விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. செமிகன்டக்டர் பற்றாக்குறை மற்றும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடப்பாண்டின் ஆரம்பத்தில் அரங்கேற இருந்த இக்காரின் அறிமுகம் நடப்பாண்டின் இறுதி வரை தள்ளி வந்திருக்கின்றது.

இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் நாட்டிற்குள் நுழைய இருக்கும் புதிய கார் மாடல்கள்... 5 கார்களின் பட்டியல்!

கடந்த வாரமே இக்காரின் உற்பத்தி பணிகள் இந்தியாவில் தொடங்கின. டிஎஸ்ஐ தொழில்நுட்பம் மற்றும் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த கார் உருவாகி வருகின்றது. ஹூண்டாய் நிறுவனத்தின் டக்சன், ஜீப் காம்பஸ் மற்றும் சிட்ரோன் சி5 ஏர் க்ராஸ் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியளிக்கும் வகையில் புதிய டிகுவான் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் நாட்டிற்குள் நுழைய இருக்கும் புதிய கார் மாடல்கள்... 5 கார்களின் பட்டியல்!

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி (BMW iX electric SUV)

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கும் முதல் மின்சார கார் மாடலே ஐஎக்ஸ். இந்திய சொகுசு வாகன பிரியர்களின் மாபெரும் எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இந்த கார் மாறியுள்ளது. டிசம்பர் 13ம் தேதி இந்த கார் இந்தியாவில் அறிமுகத்தைப் பெற இருக்கின்றது. முற்றிலும் கட்டியமைக்கப்பட்ட வாகனமாக இந்தியாவில் இறக்குமதி செய்து இக்கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கிறது.

இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் நாட்டிற்குள் நுழைய இருக்கும் புதிய கார் மாடல்கள்... 5 கார்களின் பட்டியல்!

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் மின்சார கார் ஒற்றை முழுமையான சார்ஜில் 414 கிமீ ரேஞ்ஜை வழங்கும். எக்ஸ்டிரைவ் 40 மற்றும் எக்ஸ்டிரைவ் 50 என இரு விதமான தேர்வுகளில் இந்த மின்சார கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதில், எக்ஸ்டிரைவ் 50 உயர் நிலை வேரியண்டாக விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இது அதிகபட்சமாக 611 கிமீ வரை ரேஞ்ஜ் வழங்கும்.

இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் நாட்டிற்குள் நுழைய இருக்கும் புதிய கார் மாடல்கள்... 5 கார்களின் பட்டியல்!

மினி கூப்பர் எஸ்இ (Mini Cooper SE)

மினி நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் மின்சார கார் கூப்பர் எஸ்இ. இது ஒற்றை முழுமையான சார்ஜில் 270 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இக்காருக்கான புக்கிங் பணிகள் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்கியது. ரூ. 1 லட்சம் என்ற முன் தொகையில் காருக்கான புக்கிங்குகள் செய்யப்பட்டன.

இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் நாட்டிற்குள் நுழைய இருக்கும் புதிய கார் மாடல்கள்... 5 கார்களின் பட்டியல்!

இப்பணி தொடங்கிய வெறும் இரண்டே மணி நேரங்களில் இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்ட அனைத்து மினி கூப்பர் எஸ்இ கார்களும் விற்று தீர்ந்தன. மொத்தம் 30 யூனிட்டுகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. அறிமுகத்திற்கு முன்னரே அனைத்து கார் மாடல்களும் விற்று தீர்ந்திருப்பது இந்திய வாகன உலகையே மெர்சலாக்கியிருக்கின்றது.

இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் நாட்டிற்குள் நுழைய இருக்கும் புதிய கார் மாடல்கள்... 5 கார்களின் பட்டியல்!

கியா கேரன்ஸ் (Kia Carens)

ஹூண்டாய் அல்கஸார் மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார் மாடல்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் கியா நிறுவனம் விரைவில் கேரன்ஸ் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. மூன்று வரிசை இருக்கை வசதிகளுடன் இக்கார் அடுத்த மாதம் அறிமுகமாக இருக்கின்றது. இக்காரில் ஏழு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.

இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் நாட்டிற்குள் நுழைய இருக்கும் புதிய கார் மாடல்கள்... 5 கார்களின் பட்டியல்!

மெர்சிடிஸ் சி கிளாஸ் (Mercedes C-Class)

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே இந்த ஆண்டு சில புதுமுக வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இத்துடன், புதிதாக சி கிளாஸ் சொகுசு கார் ஒன்றையும் நிறுவனம் சேர்க்க இருக்கின்றது. 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் இச்சொகுசு கார் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Top five upcoming new cars in december 2021
Story first published: Tuesday, November 30, 2021, 18:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X