விற்பனையில் பெரும் வளர்ச்சி! முதல் இடத்திற்கு முன்னேறிய Eco! இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் 7சீட்டர் கார்கள்

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஏழு இருக்கைகள் வசதிக் கொண்ட கார்களின் பட்டியலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

விற்பனையில் பெரும் வளர்ச்சி... முதல் இடத்திற்கு முன்னேறிய ஈகோ! இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் கார்கள்!

இந்தியாவில் எஸ்யூவி, ஹேட்ச்பேக், செடான் ரக கார்களுக்கு கிடைப்பதைப் போலவே எம்பிவி கார்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அந்தவகையில், நாட்டின் அதிகம் விற்பனையாகும் ஏழு இருக்கைகள் வசதிக் கொண்ட எம்பிவி மற்றும் எஸ்யூவி கார்கள் பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். 2021 ஆகஸ்டு மாத விற்பனை நிலவரப்படி பற்றி இத்தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.

விற்பனையில் பெரும் வளர்ச்சி... முதல் இடத்திற்கு முன்னேறிய ஈகோ! இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் கார்கள்!

இப்பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஈகோ எம்பிவி காரே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த கார் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டைக் காட்டிலும் லேசான விற்பனை வளர்ச்சியை பெற்று டாப் இடத்தில் அமர்ந்திருக்கின்றது. ஆகையால், நாட்டின் அதிகம் விற்பனையாகும் ஏழு இருக்கைகள் கொண்ட காராக மாருதி ஈகோ மாறியிருக்கின்றது.

விற்பனையில் பெரும் வளர்ச்சி... முதல் இடத்திற்கு முன்னேறிய ஈகோ! இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் கார்கள்!

2020 ஆகஸ்டு மாதத்தைக் காட்டிலும் 17 சதவீதம் விற்பனை வளர்ச்சியை மாருதி சுசுகி ஈகோ எம்பிவி பெற்றிருக்கின்றது. அதாவது, 2021 ஆகஸ்டு மாதத்தில் 10,666 யூனிட் வரை ஈகோ விற்பனையாகியிருக்கின்றது. கடந்த ஆண்டு (2020) ஆகஸ்டு மாதத்தில் 9,115 யூனிட் வரை ஈகோ விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

விற்பனையில் பெரும் வளர்ச்சி... முதல் இடத்திற்கு முன்னேறிய ஈகோ! இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் கார்கள்!

மாருதி சுசுகி ஈகோவிற்கு அடுத்தபடியாக மாருதி சுசுகி எர்டிகா இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது. பல மடங்கு விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்த பின்னரும் இக்கார் இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பது ஒட்டுமொத்த வாகன உலகிற்குமே ஆச்சரியத்தை வழங்கியிருக்கின்றது. மாருதி சுசுகி எர்டிகா கார் 2021 ஆகஸ்டில் 6,251 யூனிட் வரை மட்டுமே விற்பனையாகியிருக்கின்றது.

விற்பனையில் பெரும் வளர்ச்சி... முதல் இடத்திற்கு முன்னேறிய ஈகோ! இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் கார்கள்!

2020 ஆகஸ்ட் மாதத்தில் 9,302 யூனிட் வரை விற்பனையாகியிருக்கின்றது. இதைக்காட்டிலும் நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 33 சதவீதம் வரை குறைவான விற்பனை வளர்ச்சியை எர்டிகா எம்பிவி பெற்றிருக்கின்றது. இந்த வீழ்ச்சியைப் பெற்றிருக்கின்ற நிலையிலும் எர்டிகா இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது.

விற்பனையில் பெரும் வளர்ச்சி... முதல் இடத்திற்கு முன்னேறிய ஈகோ! இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் கார்கள்!

மாருதி எர்டிகாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை டொயோட்டா இன்னோவா பிடித்திருக்கின்றது. இந்த கார் 96 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2020 ஆகஸ்டு மாதத்தில் இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி காரானது வெறும் 2,943 யூனிட் வரை மட்டுமே விற்பனையாகியிருந்தது.

விற்பனையில் பெரும் வளர்ச்சி... முதல் இடத்திற்கு முன்னேறிய ஈகோ! இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் கார்கள்!

இதைக்காட்டிலும் பல மடங்கு விற்பனை விகிதம் 2021 ஆகஸ்டில் உயர்ந்திருக்கின்றது. 5,755 யூனிட் வரை விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு அடுத்த இடத்தை நான்காவது இடத்தை ரெனால்ட் நிறுவனத்தின் ட்ரைபர் கார் பிடித்திருக்கின்றது. 2020 ஆகஸ்டு மாதத்தில் இக்கார் 3,906 யூனிட் வரை விற்பனையாகியிருந்தது.

விற்பனையில் பெரும் வளர்ச்சி... முதல் இடத்திற்கு முன்னேறிய ஈகோ! இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் கார்கள்!

இதைக் காட்டிலும் ஆறு யூனிட் மட்டுமே கூடுதலாக 2021 ஆகஸ்டு மாதத்தில் விற்பனையைப் பெற்றிருக்கின்றது. இதையடுத்து ஐந்தாவது இடத்தை ஹூண்டாய் அல்கஸார் கார் பிடித்திருக்கின்றது. விற்பனைக்கு அறிமுகமான சில வாரங்களிலேயே இத்தகைய விற்பனை வளர்ச்சியை அல்கஸார் பெற்றிருப்பது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

விற்பனையில் பெரும் வளர்ச்சி... முதல் இடத்திற்கு முன்னேறிய ஈகோ! இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் கார்கள்!

ஹூண்டாய் நிறுவனம் அதன் க்ரெட்டா எஸ்யூவி காரை தழுவியே அல்கஸார் எஸ்யூவி ரக காரை உருவாக்கியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், க்ரெட்டாவைக் காட்டிலும் பல சிறப்பு வசதிகளுடன் இக்கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

விற்பனையில் பெரும் வளர்ச்சி... முதல் இடத்திற்கு முன்னேறிய ஈகோ! இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் கார்கள்!

தொடர்ந்து, 3,218 யூனிட் விற்பனையுடன் மஹிந்திரா பொலிரோ ஆறாவது இடத்திலும், 2,606 யூனிட் விற்பனையுடன் மஹிந்திரா ஸ்கார்பியோ ஏழாவது இடத்திலும், டொயோட்டா ஃபார்ச்சூனர் 2,387 யூனிட் விற்பனை உடன் எட்டாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன. இதேபோல் 928 யூனிட்டுகளுடன் ஒன்பதாவது இடத்தை ஃபோர்டு என்டீயோவர் காரும், 383 யூனிட் விற்பனை உடன் 10 இடத்தை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரும் பிடித்திருக்கின்றன.

விற்பனையில் பெரும் வளர்ச்சி... முதல் இடத்திற்கு முன்னேறிய ஈகோ! இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் கார்கள்!

முழுமையான விற்பனை நிலவரத்தைப் பட்டியலாகக் கீழே பார்க்கலாம்:

வரிசை எண் மாடல் ஆகஸ்டு-21 ஆகஸ்டு-20 விகிதம் (%)
1 Maruti Eeco 10,666 9,115 17
2 Maruti Ertiga 6,251 9,302 -33
3 Toyota Innova 5,755 2,943 96
4 Renault Triber 3,912 3,906 0.15
5 Hyundai Alcazar 3,468 - -
6 Mahindra Bolero 3,218 5,847 -41
7 Mahindra Scorpio 2,606 3,327 -22
8 Toyota Fortuner 2,387 733 226
9 Ford Endeavour 928 637 46
10 Mahindra XUV500 383 919 -58
Most Read Articles

English summary
Top ten 7 seater suv and mpv cars list in august 2021
Story first published: Wednesday, September 8, 2021, 11:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X