புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் கார் குறித்த 6 முக்கிய அம்சங்கள்!

இந்தியாவின் பிரிமீயம் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி வந்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், பிஎஸ்-6 தர எஞ்சின் மட்டுமின்றி, ஏராளமான சிறப்பு அம்சங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த 6 முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் கார் குறித்த 6 முக்கிய அம்சங்கள்!

ஒரே வேரியண்ட்

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே வேரியண்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும். ரூ.31.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வரும் ஜனவரி மாத மத்தியில் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும். இந்த கார் 5 சீட்டர் மாடலாக கிடைக்கிறது.

 புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் கார் குறித்த 6 முக்கிய அம்சங்கள்!

இந்தியாவில் அசெம்பிள்

முந்தைய மாடல் போன்றே இந்த புதிய டிகுவான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் முக்கிய பாகங்களாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஆலையில் அசெம்பிள் செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, இந்த காரின் உற்பத்திப் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

 புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் கார் குறித்த 6 முக்கிய அம்சங்கள்!

பிஎஸ்-6 எஞ்சின்

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியில் மிக முக்கிய மாற்றமாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 4 மோஷன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. இந்த கார் லிட்டருக்கு 12.65 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் கார் குறித்த 6 முக்கிய அம்சங்கள்!

வெளிப்புற அம்சங்கள்

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியில் முகப்பில் சில டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள், இரண்டு L வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகல், புதிய பனி விளக்குகள், 19 அங்குல அலாய் வீல்கள், மெல்லிய எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை புதிய அம்சங்கள் என்பதும் அதிக வசீகரத்தையும் வழங்குகின்றன.

 புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் கார் குறித்த 6 முக்கிய அம்சங்கள்!

உட்புற அம்சங்கள்

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியில் விர்ச்சுவல் காக்பிட், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கை அசைவு மூலமாக கட்டுப்படுத்தும் வசதி, வியன்னா லெதர் இருக்கைகள், சாஃப்ட் டச் பிளாஸ்டிக் கொண்ட டேஷ்போர்டு, 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 30 விதமான வண்ணங்களில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் கார் குறித்த 6 முக்கிய அம்சங்கள்!

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு, ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட் ஆகியவற்றுடன் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மாடலாகவும் இருக்கிறது.

 புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் கார் குறித்த 6 முக்கிய அம்சங்கள்!

ஹூண்டாய் டூஸான், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஆகிய பிரிமீயம் வகை மிட்சைஸ் எஸ்யூவி மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். இந்த ரகத்தில் மிகச் சிறந்த வசதிகளுடன் கிடைப்பதால் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் என்று கூறலாம்.

Most Read Articles

English summary
Here are the important things of the new Volkswagen Tiguan facelift SUV.
Story first published: Wednesday, December 8, 2021, 13:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X