பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம்... இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

பழைய வாகனங்களை அழிப்பதற்கான புதிய கொள்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று வெளியிட்டார். இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன என்பது பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பார்க்கலாம்.

பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம்... இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

பழைய மற்றும் மாசை ஏற்படுத்தும் வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது. இதுகுறித்த தகவலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவ்வப்போது அறிவித்து வந்தநிலையில், 2021 மத்திய பட்ஜெட்டின்போது பழைய வாகனங்களை அழிப்பதற்கான புதிய கொள்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிப்படுத்தினார்.

பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம்... இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

தாமாக முன் வந்து பழைய (20 ஆண்டுகள் பழைய தனி நபர் மற்றும் 15 ஆண்டுகள் பழைய வர்த்தக) வாகனங்களை அழிப்போருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார். காற்று மாசை ஏற்படுத்தும் வாகனங்களை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் இப்புதிய கொள்கை கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம்... இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

பழைய வாகனங்களை அழிப்பதற்காக மத்திய அரசு காட்டும் தீவிர தன்மை ஒரு சிலரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அதேசமயம், இயற்கை சமூக நல ஆர்வலர்கள் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் இப்புதிய கொள்கை பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம்... இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம் புதிய வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டிற்கு வரும். இதனால், காற்று மாசுபாட்டைப் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என அரசும், சமூக ஆர்வலர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம்... இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

இந்தநிலையிலேயே, பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த பழைய வாகன அழிப்பு கொள்கை பற்றிய முக்கிய தகவல்களை நேற்றைய தினம் மக்களவை கூட்டத்தில் பேசிய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.

பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம்... இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

அதாவது, பழைய வாகனங்களை தாமாக முன் வந்து ஸ்கிராப் செய்வோர்க்கு என்ன மாதிரியான சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன, இதன் நோக்கம் என்ன என்பது பற்றிய தகவலை அவர் வெளியிட்டிருந்தார். மிக நீண்ட உரையாக வெளியிடப்பட்ட பழைய வாகன அழிப்பு கொள்கையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள் சிலவற்றையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம்... இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

இனியும் இயக்க வேண்டாம்:

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதன்படி, தற்போது இந்தியாவில் 51 லட்சத்திற்கும் அதிகமான 20 ஆண்டுகள் பழைய வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்திருக்கின்றது. இதேபோன்று, 15 ஆண்டுகளுக்கும் அதிகமான பழைய வாகனங்கள் 34 லட்சம் வரையிலும், 17 லட்சத்திற்கும் அதிகமான அதிக மாசை ஏற்படுத்தக் கூடிய 15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் தற்போதும் சாலையில் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம்... இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

இவற்றில் பெரும்பாலானவை ஃபிட்னஸ் சான்று எனப்படும் உடற்தகுதி ஆவணம் இல்லாமல் இயங்குவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இவை ஒவ்வொன்றும் வழக்கத்திற்கு மாறாக 10 முதல் 12 சதவீதம் வரை அதிகளவு மாசை வெளியேற்றுகின்றன. இவற்றை சாலையில் இயக்குவதால் மாசின் அளவு கட்டுக்கடங்காமல் உயரும். மேலும், இந்த வாகனங்களின் இயக்கம் பேராபத்தை விளைவிக்கக் கூடியது என்றும் அவர் கூறினார். ஆகையால், இந்த வாகனங்களை இனியும் இயக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம்... இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

பழைய வாகனங்களை இயக்க என்ன செய்ய வேண்டும்?

தனி நபர் ஒருவர், தன்னிடத்தில் இருக்கும் 20 ஆண்டுகள் பழைய வாகனத்தை தொடர்ச்சியாக பயன்படுத்த விரும்பினால். அந்த வாகனம் தொடர்ச்சியாக இயங்குவதற்கு தகுதியானவை என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும். அதாவது, ஃபிட்னஸ் சான்றை அந்த வாகனம் பெற வேண்டும். இதன்மூலமே உங்கள் வாகனத்தின் இயக்கத்தை சட்டபூர்வமாக்கப்படும்.

பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம்... இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

ஒரு வேலை ஃபிட்னஸ் சான்று பெறவோ அல்லது பதிவினை புதுப்பிக்கத் தவறினாலோ அந்த வாகனம் இயக்கத்திற்கு தகுதியற்ற வாகனமாக கருதப்படும். இதுமட்டுமின்றி, இதற்காக பெரும் அபராதத்தைச் சந்திக்க நேரிடும். இதேநிலைதான் பழைய வணிக வாகங்களுக்கும் பொருந்தும். ஆனால், வணிக வாகங்களுக்கு 15 ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம்... இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கான பலன்

வாகன அழிப்பு கொள்கையின் மூலம் பல லட்சக் கணக்கான பழைய வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட இருக்கின்றன. இதன் விளைவாக தற்போது இருப்பதைக் காட்டிலும் இரு மடங்கு புதிய வாகனங்களின் தேவை அதிகரிக்கும் என்றும் அரசு நம்புகின்றது. ஆகையால், வாகன உற்பத்தியாளர்களுக்கு இப்பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம் மிகப் பெரிய வர்த்தகத்தை உருவாக்கிக் கொடுக்க என நம்பப்படுகின்றது.

பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம்... இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

பலன் என்ன?

புதிய கொள்கையின் கீழ், தங்களது பழைய கார்களை அழிப்பவர்களுக்கு புதிய வாகனத்தை வாங்கும்போது பல்வேறு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. குறிப்பாக சாலை வரியில் மாபெரும் தள்ளுபடி வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கின்றார்.

பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம்... இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

பயணிகள் வாகனங்களுக்கு 25 சதவீதம் வரையிலும், வர்த்தக வாகனங்களுக்கு 15 சதவீதம் வரையிலும் வரி தள்ளுபடி வழங்கப்பட இருக்கின்றது. இத்துடன் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ததற்கான சான்றை வைத்திருப்போர்க்கு, புதிய வாகனங்களை வாங்கும்போது அதற்கான பதிவு கட்டணத்தை தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம்... இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

இதுதவிர, 5 சதவீத தள்ளுபடியை வழங்கும்படி வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆகையால், இந்த நடவடிக்கை புதிய வாகனத்தின் விலையைக் கணிசமாக குறைக்கும். இதன்மூலம் புதிய வாகனங்கள் விலை கணிசமாக குறைந்து வாங்குவோரை ஊக்குவிக்க உதவும்.

பழைய வாகன அழிப்பு கொள்கை திட்டம்... இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

அதே நேரத்தில், பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பது மற்றும் எஃப்சி-க்கான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இது பழைய வாகனங்களை பயன்படுத்துவோரை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Top Things To Know Old Vehicle Scrappage Policy. Read In Tamil.
Story first published: Friday, March 19, 2021, 11:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X