இந்திய டாடா பஞ்ச் vs ஐரோப்பிய டொயோட்டா அய்கோ எக்ஸ்!! சிறந்த மைக்ரோ-எஸ்யூவி கார் எது?

எஸ்யூவி கார்களின் பயன்பாடு கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளன. கிட்டத்தட்ட இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் சாலைகளை இவை தான் ஆக்கிரமித்துள்ளன. அளவில் பெரியதாக முழு-அளவு எஸ்யூவி, நடுத்தர-அளவு எஸ்யூவிகள் விற்பனையில் இருக்கும் நிலையில், மக்கள் குறைந்தது அளவில்-சிறிய காம்பெக்ட் எஸ்யூவிகளையாவது வாங்க விருப்பப்படுகின்றனர்.

இந்திய டாடா பஞ்ச் vs ஐரோப்பிய டொயோட்டா அய்கோ எக்ஸ்!! சிறந்த மைக்ரோ-எஸ்யூவி கார் எது?

அதேநேரம் தற்போது மைக்ரோ-எஸ்யூவிகளுக்கான சந்தையும் விரிவடைந்து வருகிறது. முன்பு இந்திய சந்தையில் மைக்ரோ எஸ்யூவிகளாக மாருதி சுஸுகி இக்னிஸ் மற்றும் மஹிந்திரா கேயூவி100 உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வந்தன. இவற்றுடன் கடந்த அக்டோபரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பஞ்ச் மாடலை புதிய மைக்ரோ-எஸ்யூவி காராக இணைத்தது.

இந்திய டாடா பஞ்ச் vs ஐரோப்பிய டொயோட்டா அய்கோ எக்ஸ்!! சிறந்த மைக்ரோ-எஸ்யூவி கார் எது?

இதற்கிடையில் ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் அய்கோ எக்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. ஐரோப்பாவில் அடுத்த 2022ஆம் ஆண்டில் விற்பனைக்குவரும் என எதிர்பார்க்கப்படும் இந்த டொயோட்டா மைக்ரோ எஸ்யூவி காருக்கும், டாடா பஞ்ச்சிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய டாடா பஞ்ச் vs ஐரோப்பிய டொயோட்டா அய்கோ எக்ஸ்!! சிறந்த மைக்ரோ-எஸ்யூவி கார் எது?

பரிமாண அளவுகள்

டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி மற்றும் ஹெரியர் கார்களில் இருந்து சில பாகங்களை பெற்றுள்ளதால் டாடா பஞ்ச் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு மினி ஹெரியர் போல் சிலருக்கு தோன்றலாம். இந்த விஷயத்தில், இந்த டாடா தயாரிப்பினை ஐரோப்பாவிற்கான டொயோட்டாவின் அய்கோ எக்ஸ் உடன் ஒப்பிடுகையில், பஞ்ச் அதிக க்ரவுண்ட் க்ளியரென்ஸை பெற்றுள்ளது. ஐரோப்பிய சாலைகளுக்காக அய்கோ எக்ஸ் காருக்கு குறைவான க்ரவுண்ட் க்ளியரென்ஸ் வழங்கப்பட்டிருக்கலாம்.

இந்திய டாடா பஞ்ச் vs ஐரோப்பிய டொயோட்டா அய்கோ எக்ஸ்!! சிறந்த மைக்ரோ-எஸ்யூவி கார் எது?

நீளம், அகலம் மற்றும் உயரத்தில் டாடா பஞ்ச் குறிப்பிடத்தக்க அளவில் பெரியதாக காட்சியளிக்கிறது. இதனால் வீல்பேஸ் எனப்படும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் பஞ்ச் மாடலில் அதிகமாக உள்ளது. மேலும் உட்புறத்திலும் இந்த டாடா காரில் அதிக இடவசதியை எதிர்பார்க்கலாம். ஆனால் உண்மையில், இந்தியாவிற்கான அய்கோ எக்ஸ்-இன் பரிமாண அளவுகளை டொயோட்டா சற்று திருத்தியமைக்கலாம்.

இந்திய டாடா பஞ்ச் vs ஐரோப்பிய டொயோட்டா அய்கோ எக்ஸ்!! சிறந்த மைக்ரோ-எஸ்யூவி கார் எது?

உட்புற கேபின்

டொயோட்டா அய்கோ எக்ஸ், டாடா பஞ்ச் அளவிற்கு பெரிய கேபினை கொண்டில்லை என்றாலும், தற்காலத்திற்கு ஏற்ற மாடர்ன் எஸ்யூவி கார் என்பதில் எந்த விதத்திலும் சந்தேகமில்லை. இந்த டொயோட்டா மைக்ரோ-எஸ்யூவி காரின் உட்புற டேஸ்போர்டில் 9-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமானது ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே வசதி உடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய டாடா பஞ்ச் vs ஐரோப்பிய டொயோட்டா அய்கோ எக்ஸ்!! சிறந்த மைக்ரோ-எஸ்யூவி கார் எது?

இதே இணைப்பு வசதிகளுடன் பஞ்ச் காரில் 7-இன்ச்சில் தொடுத்திரை வழங்கப்படுகிறது. மேலும் இந்த காரில் ரூ.30,000இல் பிராண்டின் iRA இணைப்பு தொழிற்நுட்பத்தையும் பிரத்யேகமாக டாடா வழங்குகிறது. டாடாவின் iRA மூலம் ஸ்மார்ட்போன் இணைப்பு, ஜியோ-ஃபென்சிங் மற்றும் சில ரிமோட் வசதிகளை பெற முடியும்.

இந்திய டாடா பஞ்ச் vs ஐரோப்பிய டொயோட்டா அய்கோ எக்ஸ்!! சிறந்த மைக்ரோ-எஸ்யூவி கார் எது?

பாதுகாப்பு வசதிகள்

அய்கோ எக்ஸ் காரில் மிக முக்கிய அம்சமாக உள்ளிழுக்கக்கூடிய கேன்வாஸ் மேற்கூரையை டொயோட்டா வழங்கியுள்ளது. மறுப்பக்கம் பஞ்ச் மாடலில், இந்திய சாலைக்கு ஏற்ற டிராக்‌ஷன் ப்ரோ மோட் கொண்டுவரப்பட்டுள்ளது. அய்கோ எக்ஸ் காரில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களாக, தானியங்கி அவசரகால பிரேக்கிங், பாதசாரிகளை அடையாளம் காணும் வசதி & அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

இந்திய டாடா பஞ்ச் vs ஐரோப்பிய டொயோட்டா அய்கோ எக்ஸ்!! சிறந்த மைக்ரோ-எஸ்யூவி கார் எது?

இதில் சில வசதிகள் அய்கோ எக்ஸ்-இன் இந்திய வெர்சனில் நீக்கப்படலாம். டாடா பஞ்ச்சை பொறுத்தவரையில், இந்த டாடா தயாரிப்பு உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் முழு ஐந்து நட்சத்திரங்களை பெற்று நம்மையும், நம் இந்திய தயாரிப்புகளையும் பெருமையடைய செய்துள்ளது. இதனால் பஞ்ச் காரில் பாதுகாப்பு குறித்து எந்த கவலையும் வேண்டாம்.

இந்திய டாடா பஞ்ச் vs ஐரோப்பிய டொயோட்டா அய்கோ எக்ஸ்!! சிறந்த மைக்ரோ-எஸ்யூவி கார் எது?

என்ஜின்

டாடா பஞ்ச்சில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதுவே டொயோட்டா அய்கோ எக்ஸ் மைக்ரோ-எஸ்யூவி மாடலில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை இரண்டிலும் தற்போதைக்கு பெட்ரோல் என்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்திய டாடா பஞ்ச் vs ஐரோப்பிய டொயோட்டா அய்கோ எக்ஸ்!! சிறந்த மைக்ரோ-எஸ்யூவி கார் எது?

என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளை பொறுத்தவரையில் அய்கோ எக்ஸ் காரில் சில குதிரையாற்றல்கள் குறைந்துள்ளன. ஆனால் டொயோட்டா அய்கோ எக்ஸ் காரின் 1 KR-FE என்ஜின் ஆனது ஐரோப்பிய மாசு உமிழ்வு விதிமுறைக்களுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பஞ்ச் மாடலை காட்டிலும் ஐரோப்பாவில் விற்பனைக்குவரும் இந்த டொயோட்டா கார் செயல்திறன்மிக்கதாக விளங்கலாம்.

Most Read Articles

English summary
Toyota Aygo X vs Tata Punch, Battle Of The Best Micro SUVs.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X