பிராண்டின் மலிவு விலை மின்சார காராக வர இருக்கிறது Toyota BZ... இந்தியாவிற்கு இந்த கார் வர வாய்ப்பு இருக்கா?

தனது பிராண்டின் மலிவு விலை மின்சார காராக டொயோட்டா பிஇசட் (Toyota BZ) விற்பனைக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

பிராண்டின் மலிவு விலை மின்சார காராக வர இருக்கிறது Toyota BZ... இந்தியாவிற்கு இந்த கார் வர வாய்ப்பு இருக்கா?

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா (Toyota) அண்மையில் அதன் மின் வாகன உற்பத்தி திட்டம் பற்றிய தகவலை வெளியிட்டது. நிறுவனம் ஒட்டுமொத்தமாக 15 எலெக்ட்ரிக் புதிய கார்களின் கான்செப்ட் மாடல்களை வெளியீடு செய்தது. இவற்றையே எதிர்காலத்தில் நிறுவனம் அடுத்தடுத்தாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

பிராண்டின் மலிவு விலை மின்சார காராக வர இருக்கிறது Toyota BZ... இந்தியாவிற்கு இந்த கார் வர வாய்ப்பு இருக்கா?

இதில், ஓர் கார் மிகவும் மலிவான விலையில் டொயோட்டா விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் காட்சிப்படுத்திய 15 எலெக்ட்ரிக் கார் மாடல்களில் பிஇசட் (BZ) மாடலும் ஒன்று. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக மின்சார வாகனம் ஆகும்.

பிராண்டின் மலிவு விலை மின்சார காராக வர இருக்கிறது Toyota BZ... இந்தியாவிற்கு இந்த கார் வர வாய்ப்பு இருக்கா?

இந்த இ-காரையே டொயோட்டா நிறுவனம் அதன் பிராண்டிலேயே மிகவும் குறைவான விலைக் கொண்ட மின்சார காராக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. மேலும், இந்த கார் குறித்து கருத்து தெரிவித்த நிறுவத்தின் சிஇஓ அகி டொயோட்டா, "பிஇசட் டொயோட்டாவின் மிக சிறந்த வணிக சொத்தமாக மாறும்" என்றார்.

பிராண்டின் மலிவு விலை மின்சார காராக வர இருக்கிறது Toyota BZ... இந்தியாவிற்கு இந்த கார் வர வாய்ப்பு இருக்கா?

தொடர்ந்து, "பிஇசட் மிக முக்கியமாக ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தைகளை மனதில் கொண்டு உருவாக்கியிருப்பதாகவும்" அவர் கூறினார். ஆகையால், மலிவு விலையில் மின் வாகன சந்தையில் விற்பனைக்கு வர இருக்கும் இது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்பனைக்கு வருவது சந்தேகமாகியுள்ளது.

பிராண்டின் மலிவு விலை மின்சார காராக வர இருக்கிறது Toyota BZ... இந்தியாவிற்கு இந்த கார் வர வாய்ப்பு இருக்கா?

அதே நேரத்தில் இதன் உட்பக்க கட்டமைப்புகள் பலரைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. இதன் வெளிப்புற தோற்றமும் சிறிய கார் பிரியர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியிருக்கின்றது. காம்பேக்ட் எஸ்யூவி மின்சார கார்களில் மிக சிறப்பான திறனை வெளிப்படுத்தும் காராக இது இருக்கும் என டொயோட்டா தெரிவித்திருக்கின்றது.

பிராண்டின் மலிவு விலை மின்சார காராக வர இருக்கிறது Toyota BZ... இந்தியாவிற்கு இந்த கார் வர வாய்ப்பு இருக்கா?

டொயோட்டா பிஇசட் மின்சார கார் 12.5kWh/100km என்ற குறைந்த மின் நுகர்வை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. இலகுவான சிறிய பேட்டரிகள் கொண்ட வாகனங்கள் மூலம் தங்களது மின்சார கார்களைப் பிரபலப்படுத்த டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே பிஇசட் வருகை மிக விரைவில் அமைய இருக்கின்றது.

பிராண்டின் மலிவு விலை மின்சார காராக வர இருக்கிறது Toyota BZ... இந்தியாவிற்கு இந்த கார் வர வாய்ப்பு இருக்கா?

"ஓர் மின்சார வாகனத்தை அதிக ரேஞ்ஜ் தர கூடியதாக மாற்ற அதிக பேட்டரிகளைச் சேர்க்க வேண்டியிருக்கும். இதனால் அவ்வாகனம் பெரியதாகவும், கனமானதாகவும் மற்றும் அதிக விலைக் கொண்டதாகவும் மாறுகின்றது. இந்த நிலையை சிறிய பேட்டரிகள் கொண்ட சிறிய வாகனங்கள் மாற்றும். மேலும், மிக சிறந்த இயக்க அனுபவத்தையும் சிறிய மின்சார கார்கள் வழங்கும்" என அகி டொயோட்டா கருத்து தெரிவித்துள்ளார்.

பிராண்டின் மலிவு விலை மின்சார காராக வர இருக்கிறது Toyota BZ... இந்தியாவிற்கு இந்த கார் வர வாய்ப்பு இருக்கா?

பிஇசட் மின்சார கார் தற்போது கான்செப்ட் மாடலாகவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இது உற்பத்தி நிலைக்கு உயர்த்தப்படும்போது சற்று லேசான மாற்றங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டொயோட்டா நிறுவனம் அதன் பிஇசட்4எக்ஸ் மாடலின் டிசைன் தாத்பரியத்தையும், ஆய்கோ எக்ஸ் மாடலின் டிசைன் தாத்பரியங்களையும் பயன்படுத்தியே இப்புதிய பிஇசட் காம்பேக்ட் எஸ்யூவி உருவாக்கியிருக்கின்றது.

பிராண்டின் மலிவு விலை மின்சார காராக வர இருக்கிறது Toyota BZ... இந்தியாவிற்கு இந்த கார் வர வாய்ப்பு இருக்கா?

இ-டிஎன்ஜிஏ பிளாட்பாரத்தைக் கொண்டே டொயோட்டா பிஇசட்4எக்ஸ் மின்சார கார் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், தற்போது வெளியீடு செய்யப்பட்டிருக்கும் பிஇசட் எலெக்ட்ரிக் புதிய பிளாட்பாரத்தின் வாயிலாக கட்டமைக்கப்பட இருக்கின்றது. மிகக் குறைவான விலைக்கேற்ப அம்சங்களுடன் அது விரைவில் உலக சந்தையைக் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிராண்டின் மலிவு விலை மின்சார காராக வர இருக்கிறது Toyota BZ... இந்தியாவிற்கு இந்த கார் வர வாய்ப்பு இருக்கா?

டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், எம்ஜி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி உள்ளிட்ட நிறுவனங்களே இந்தியாவில் மின்சார கார்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றன. இன்னும் பல நிறுவனங்கள் இப்போதும் எலெக்ட்ரிக் வாகனங்களை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. அவற்றில் பட்டியலில் டொயோட்டாவும் ஒன்று. தொடர்ச்சியாக முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கி வருவதை வைத்து பார்த்தால் மிக விரைவில் டொயோட்டாவும் இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் கார் பற்றிய தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Toyota bz will be the brand s low cost electric car
Story first published: Friday, December 17, 2021, 16:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X