2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் கார் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் ஃபார்ச்சூனரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை ரூ.29.98 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இந்த ஜனவரி மாத துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்களாக காரின் முன்பக்கத்தில் மிக முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேநேரம் காரை சுற்றிலும், காரின் உட்புறத்திலும் கூட சில அப்கிரேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது

ஸ்டாண்டர்ட் மற்றும் லெஜண்டர் என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்தான் தற்போது டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைந்துள்ளது.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது

இது தொடர்பான படங்கள் டீம் பிஎச்பி செய்திதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளில் ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது

ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் என்ற இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 4-சக்கர ட்ரைவ் தேர்வும் 2021 ஃபார்ச்சூனரில் வழங்கப்படுகிறது. டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அதிகப்பட்சமாக 201 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது

காரின் வெளிப்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களாக புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், திருத்தியமைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், முன் & பின்பக்க பம்பர்கள், ரீடிசைனில் எல்இடி டெயில்லைட்கள் மற்றும் 18 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது

உட்புறத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360-கோண கேமிரா, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் உள்பட பல வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் அதிக எண்ணிக்கையில் ஆக்ஸஸரீகளும் இந்த ஃபேஸ்லிஃப்ட் காருக்கு கொடுக்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
New Toyota Fortuner facelift begins arriving at dealerships
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X