இதிலும் டொயோட்டா ஃபார்ச்சூனர் தான் ஃபர்ஸ்ட்!! 2021 ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் வருகிறது ஆற்றல்மிக்க அப்கிரேட்

ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான ஆற்றல்மிக்க என்ஜின் தேர்வை டொயோட்டா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆற்றல்மிக்க என்ஜினை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இதிலும் டொயோட்டா ஃபார்ச்சூனர் தான் ஃபர்ஸ்ட்!! 2021 ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் வருகிறது ஆற்றல்மிக்க அப்கிரேட்

கணிசமான வாடிக்கையாளர்களை இந்தியாவில் எல்லா மாதங்களிலும் பெற்றுவரும் டொயோட்டா ஃபார்ச்சூனரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை அறிமுகப்படுத்துவதில் டொயோட்டா நிறுவனம் தீவிரமாக உள்ளது.

இதிலும் டொயோட்டா ஃபார்ச்சூனர் தான் ஃபர்ஸ்ட்!! 2021 ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் வருகிறது ஆற்றல்மிக்க அப்கிரேட்

வருகிற 6ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்படவுள்ள ஆற்றல்மிக்க என்ஜின் குறித்த விபரங்களை டொயோட்டா தற்போது வெளியிட்டுள்ளது.

இதிலும் டொயோட்டா ஃபார்ச்சூனர் தான் ஃபர்ஸ்ட்!! 2021 ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் வருகிறது ஆற்றல்மிக்க அப்கிரேட்

இதுகுறித்த ஃபேஸ்புக் பதிவில் மிஞ்சும் சக்தி என குறிப்பிடப்பட்டு 204 பிஎஸ் ஆற்றல் மற்றும் 500 என்எம் டார்க் திறன் என்ற வாக்கியங்கள் முதலில் காட்டப்பட்டுள்ளன. அதன்பின் ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுக தேதியான 6 ஜனவரி 2021 வருகிறது.

மற்றப்படி என்ன மாதிரியான என்ஜின் என்பது குறித்த எந்த விபரமும் வெளியிடப்படவில்லை. தற்போதைய ஃபார்ச்சூனரில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதிலும் டொயோட்டா ஃபார்ச்சூனர் தான் ஃபர்ஸ்ட்!! 2021 ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் வருகிறது ஆற்றல்மிக்க அப்கிரேட்

இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 166 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. டீசல் என்ஜினைதான் டொயோட்டா நிறுவனம் அதிகப்பட்சமாக 204 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் திருத்தியமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதிலும் டொயோட்டா ஃபார்ச்சூனர் தான் ஃபர்ஸ்ட்!! 2021 ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் வருகிறது ஆற்றல்மிக்க அப்கிரேட்

இந்த இரு என்ஜின்களுடனும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு நிலையாக வழங்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜினிற்கு கூடுதல் தேர்வாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் வழங்கப்படுகிறது.

இதிலும் டொயோட்டா ஃபார்ச்சூனர் தான் ஃபர்ஸ்ட்!! 2021 ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் வருகிறது ஆற்றல்மிக்க அப்கிரேட்

பெட்ரோல் என்ஜின் பின்சக்கர-ட்ரைவ் இல் மட்டுமே கிடைக்கவுள்ளது. ஆனால் டீசல் என்ஜின் பின்சக்கர-ட்ரைவ் மற்றும் அனைத்து-சக்கர-ட்ரைவ் என்ற இரு தேர்வில் கிடைக்கும். இதில் 4x4 வேரியண்ட்கள் ஆஃப்-ரோடு பயணங்களுக்காக போதுமான என்ஜின் ஆற்றலில் குறைவான வேகத்தில் இயங்கும் திறனை பெற்றுள்ளன.

இதிலும் டொயோட்டா ஃபார்ச்சூனர் தான் ஃபர்ஸ்ட்!! 2021 ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் வருகிறது ஆற்றல்மிக்க அப்கிரேட்

500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் என்ஜினை கொண்ட கார் எதுவும் டொயோட்டா ஃபார்ச்சூனர் பிரிவில் இல்லை. இதிலும் ஃபார்ச்சூனர் தான் முதலாவதாக வருகிறது. எம்ஜி க்ளோஸ்டர் - 480 என்எம், ஃபோர்டு எண்டேவியர் - 420 என்எம்.

இதிலும் டொயோட்டா ஃபார்ச்சூனர் தான் ஃபர்ஸ்ட்!! 2021 ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் வருகிறது ஆற்றல்மிக்க அப்கிரேட்

ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் கார் லெஜண்டர் வெர்சனிலும் வெளிவரவுள்ளது. ஃபார்ச்சூனர் லெஜண்டரின் ஸ்பை படங்கள் சமீபத்தில் தொலைக்காட்சி விளம்பர வீடியோவிற்கான படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளிவந்திருந்தன. அவற்றையும் நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தி தளத்தில் பதிவிட்டுள்ளோம்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota confirms more POWERFUL engine for Fortuner
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X