Just In
- 4 hrs ago
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- 8 hrs ago
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
- 9 hrs ago
100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!
- 9 hrs ago
மாஸ்க் அணியவில்லை என்றால், என்ன இப்படி தூக்குறாங்க!! போலீஸாரிடம் சிக்கிய தம்பதியினர்...
Don't Miss!
- News
பிரார்த்தனையில் மூழ்கிய பெண்.. பின்னாலிருந்து திடீரென.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போதகர் கைது
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Lifestyle
நீங்க போதுமான உணவை சாப்பிடாதபோது உங்க உடலில் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகமா படிங்க...!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லிஸ்ட்ல இந்த காருதான் இல்லாம இருந்துச்சு... அதையும் இப்போ டொயோட்டா சேர்த்துடுச்சு... கவலையில் வாடிக்கையாளர்கள்
முன்னதாக லிஸ்டில் சேர்க்காத ஓர் கார் மாடலை டொயோட்டா நிறுவனம், இப்போதைய புதிய லிஸ்டில் சேர்த்திருப்பது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன லிஸ்ட் என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

உற்பத்தி செலவு அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி அண்மைக் காலங்களாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளின் விலையைக் கணிசமாக உயர்த்திய வண்ணம் இருக்கின்றன.

பஜாஜ், யமஹா, ஹீரோ உள்ளிட்ட இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஃபோர்டு, மாருதி சுசுகி, நிஸான் உள்ளிட்ட நான்கு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் என நாட்டின் பல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் மிக சமீபத்திலேயே விலையுயர்வு பற்றிய தகவலை அறிவித்தன.

இந்த நிலையில், டொயோட்டா நிறுவனம் அதன் ஃபார்ச்சூனர் லெஜன்டர் மாடலின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம், ஏப்ரல் 1ம் தேதி முதல் கேம்ரி, ஃபார்ச்சூனர், க்ளான்ஸா, இன்னோவா க்ரிஸ்டா, அர்பன் க்ரூஸர், வெல்ஃபையர் மற்றும் யாரிஸ் ஆகிய கார் மாடல்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்தது.

இந்த வரிசையில் ஃபார்ச்சூனர் லெஜண்டர் விடுபட்டிருந்த நிலையில் தற்போது அக்காரின் விலையையும் உயர்த்தியிருக்கின்றது, டொயோட்டா. ஏப்ரல் 1ம் தேதி முதல் மேற்கூறிய அனைத்து கார் மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது ஃபார்ச்சூனர் லெஜண்டர் எஸ்யூவி காரின் விலையில் ரூ. 72 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆகையால், இக்காரின் விலை ரூ. 38.30 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. வழக்கமான ஃபார்ச்சூனர் காரைக் காட்டிலும் கூடுதல் ஸ்போர்ட்டி லுக் மற்றும் அதிக லக்சூரி வசதிகளை வழங்கும் மாடலாக லெஜண்டர் இருக்கின்றது.

இக்கார் கருப்பு (ரூஃப்பின் நிறம்) மற்றும் பவள வெள்ளை (உடலின் நிறம்) ஆகிய நிறங்கள் கலந்த ஒற்றை நிற தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், கார் வேகத்தை அறிந்து தானாகவே அனைத்து கதவுகளையும் லாக் செய்யும் வசதி, பிரேக் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சிறுவர்கள் இருக்கை, ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் எமர்ஜென்சி பிரேக் சிக்னல் என பல்வேறு சிறப்பம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர ஒயர்லெஸ் சார்ஜர், பின் பக்க பயணிக்கும் யுஎஸ்பி சார்ஜர் போர்ட் மற்றும் கெஸ்சர் ஆபரேடட் டெயில்கேட், ஆம்பிசியன்ட் மின் விளக்கு, ட்யூவல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பன்முக கன்ட்ரோல்கள்கொண்ட ஸ்டியரிங் வீல் மற்றும் சாவியில்லா நுழைவு போன்ற பிரீமியம் வசதிகளையும் இக்கார் பெற்றிருக்கின்றது.

இதுபோன்று பல்வேறு சிறப்பு அம்சங்களைத் தனித்துவமாகக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் இக்காருக்கு ஃபார்ச்சூனருடன் சேர்த்து லெஜண்டர் எனும் கூடுதல் பெயரையும் நிறுவனம் வைத்திருக்கின்றது. காருக்குள் இருக்கும் சிறப்பம்சங்கள் மட்டுமில்லைங்க இந்த லெஜண்டர் தேர்வின் வெளிப்புறத் தோற்றமும் மிக கவர்ச்சியானதாக இருக்கின்றது.

ஆம், வழக்கமான ஃபார்ச்சூனர் காரைக் காட்டிலும் மாறுபட்டு காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றத்தை நிறுவனம் செய்திருக்கின்றது. அதாவது, ஏற்கனவே கூறியதைப் போல் இக்காருக்கு அதிக கவர்ச்சியான மற்றும் முரட்டுத்தனமான தோற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது.

டொயோட்டா லெஜண்டர் எஸ்யூவி காரில் 2.8 லிட்டர் டர்போசார்ஜட், இன்லைன் 4 டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜிந் 204 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இக்காரில் ஒற்றை தேர்விலான கியர்பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே டொயோட்டா வழங்குகின்றது. 6 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே இந்த எஸ்யூவி காரில் வழங்கப்படுகின்றது.