செம கெத்து... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்!

டொயோட்டா ஹைலக்ஸ் பிரிமீயம் பிக்கப் டிரக் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

சும்மா கம்பீரமா, செம கெத்தா... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்!

இந்தியாவில் தனிநபர் பயன்பாட்டு பிரிவிற்கான பிரிமீயம் பிக்கப் டிரக் மாடல்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால், இந்த ரகத்தில் புதிய மாடல்களை களமிறக்க கார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டத் துவங்கி இருக்கின்றன. குறிப்பாக, இசுஸு டி மேக்ஸ் வி க்ராஸ் மாடலுக்கு கிடைத்த வரவேற்புதான் ஏனைய பிற நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சும்மா கம்பீரமா, செம கெத்தா... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்!

அந்த வகையில், டொயோட்டா கார் நிறுவனம் தனது ஹைலக்ஸ் என்ற பிரிமீயம் பிக்கப் டிரக் மாடலை விரைவில் இந்தியாவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அண்மையில் இந்த ஹைலக்ஸ் பிக்கப் டிரக்குகள் இந்தியாவில் பல இடங்களில் தென்பட்டு வருகின்றன. இதனால், இந்த புதிய மாடல் இந்தியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தின.

சும்மா கம்பீரமா, செம கெத்தா... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்!

இந்த சூழலில், இந்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

சும்மா கம்பீரமா, செம கெத்தா... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்!

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் வெளிநாடுகளில் பல்வேறு எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கின்றன. இந்தியாவில் அண்மையில் வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 201 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

சும்மா கம்பீரமா, செம கெத்தா... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்!

இதுதவிர்த்து, இன்னோவா காரில் பயன்படுத்தப்படும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்விலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த புதிய ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் ரியர் வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம்.

சும்மா கம்பீரமா, செம கெத்தா... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்!

இந்த புதிய ஹைலக்ஸ் எஸ்யூவி 5.3 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். அதாவது, ஃபார்ச்சூனர் எஸ்யூவியைவிட அதிக நீளம் கொண்டதாக இருக்கும். இந்த பிக்கப் டிரக் 3,085 மிமீ வீல்பேஸ் நீளத்தை பெற்றிருக்கும். அதாவது, இரண்டு இருக்கை வரிசை அமைப்புடன் கூடிய பிக்கப் டிரக் மாடலாக இருக்கும்.

சும்மா கம்பீரமா, செம கெத்தா... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்!

புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் மாடலானது ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் இந்த எஸ்யூவிக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 28, 2021, 11:58 [IST]
English summary
According to reports, Toyota is planning to launch new Hilux pick up truck in India by mid of this year.
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+