மறைப்பின்றி, இந்தியாவில் முதல்முறையாக காட்சித்தந்துள்ள டொயோட்டா ஹிலக்ஸ் பிக்அப் ட்ரக்- 2022 ஜனவரியில் அறிமுகம்

டொயோட்டா ஹிலக்ஸ் பிக்அப் ட்ரக் வாகனம் இந்தியாவில் விளம்பர வீடியோவிற்கான படப்பிடிப்பின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மறைப்பின்றி, இந்தியாவில் முதல்முறையாக காட்சித்தந்துள்ள டொயோட்டா ஹிலக்ஸ் பிக்அப் ட்ரக்- 2022 ஜனவரியில் அறிமுகம்

டொயோட்டா வருகிற 2022 ஜனவரி மாதத்தில் அதன் ஹிலக்ஸ் பிக்அப் ட்ரக் வாகனத்தினை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிலையில் தான் தற்போது இந்த ஜப்பானிய பிக்அப் ட்ரக் இந்தியாவில் காட்சி தந்துள்ளது. இதுதொடர்பாக டீம் பிஎச்பி செய்திதளத்தின் மூலம் நமக்கு கிடைக்க பெற்றுள்ள ஸ்பை படங்களை கீழே காணலாம்.

மறைப்பின்றி, இந்தியாவில் முதல்முறையாக காட்சித்தந்துள்ள டொயோட்டா ஹிலக்ஸ் பிக்அப் ட்ரக்- 2022 ஜனவரியில் அறிமுகம்

தொலைக்காட்சி கமர்ஷியல் (டிவிசி) வீடியோவிற்கான படப்பிடிப்பின்போது இந்த ஹிலக்ஸ் வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இந்த பிக்அப் ட்ரக் எந்தவொரு மறைப்பும் இல்லாமல் காட்சி தந்திருப்பது இதுவே முதல்முறையாகும். பிரபலமான இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் அதே ஐஎம்வி-2 ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டே ஹிலக்ஸ் வடிவமைக்கப்படுகிறது.

மறைப்பின்றி, இந்தியாவில் முதல்முறையாக காட்சித்தந்துள்ள டொயோட்டா ஹிலக்ஸ் பிக்அப் ட்ரக்- 2022 ஜனவரியில் அறிமுகம்

இதனால் அந்த இரு டொயோட்டா கார்களை போன்று, இந்த பிக்அப் ட்ரக் வாகனத்திற்கும் ஏகோபித்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பொருட்களை வைப்பதற்கான பின்பகுதியினால், இன்னோவா & ஃபார்ச்சூனர் மாடல்களை காட்டிலும் ஹிலக்ஸ் கிட்டத்தட்ட 5.3 மீட்டர்களில் நீண்ட நீளத்தை கொண்டதாக விளங்குகிறது.

மறைப்பின்றி, இந்தியாவில் முதல்முறையாக காட்சித்தந்துள்ள டொயோட்டா ஹிலக்ஸ் பிக்அப் ட்ரக்- 2022 ஜனவரியில் அறிமுகம்

அதேபோல், 3,085மிமீ-இல் வீல்பேஸும், மற்ற எம்பிவி & 3-இருக்கை வரிசை கொண்ட எஸ்யூவி காரை காட்டிலும் நீளமானதாக உள்ளது. மேலும், முன்பக்கத்தையும் ஹிலக்ஸ் தனித்துவமானதாக கொண்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் அளவில் பெரிய அறுகோண வடிவ க்ரில், எல்இடி டிஆர்எல்களுடன் பக்கவாட்டிற்கு வளைக்கப்பட்ட ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

மறைப்பின்றி, இந்தியாவில் முதல்முறையாக காட்சித்தந்துள்ள டொயோட்டா ஹிலக்ஸ் பிக்அப் ட்ரக்- 2022 ஜனவரியில் அறிமுகம்

இவற்றுடன் முரட்டுத்தனமான தோற்றத்திற்காக கருப்பு க்ளாடிங்களை கொண்ட பருத்த முன்பக்க பம்பர் மற்றும் பெரிய அளவிலான பேஷ் தட்டையும் இந்த பிக்அப் ட்ரக் வாகனம் கொண்டுள்ளது. அப்படியே பக்கவாட்டிற்கு சென்றால், அகலமான சக்கர மேற்வளைவுகள், பாடி க்ளாடிங்குகள் மற்றும் படிக்கட்டை பார்க்க முடிகிறது. பின்பக்கத்தில் நேர்த்தியான வடிவில் எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மறைப்பின்றி, இந்தியாவில் முதல்முறையாக காட்சித்தந்துள்ள டொயோட்டா ஹிலக்ஸ் பிக்அப் ட்ரக்- 2022 ஜனவரியில் அறிமுகம்

இந்தியாவில் முதற்கட்டமாக இரட்டை இருக்கை வரிசை வெர்சனில் ஹிலக்ஸ் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. கமர்ஷியல் பயன்பாட்டிற்கான ஒற்றை இருக்கை வரிசை வெர்சன் பின்னர் காலத்தில் அறிமுகப்படுத்தப்படலாம். ஹிலக்ஸின் உட்புற கேபினை கிட்டத்தட்ட ஃபார்ச்சூனருக்கு இணையானதாக டொயோட்டா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைப்பின்றி, இந்தியாவில் முதல்முறையாக காட்சித்தந்துள்ள டொயோட்டா ஹிலக்ஸ் பிக்அப் ட்ரக்- 2022 ஜனவரியில் அறிமுகம்

அதாவது, ஃபார்ச்சூனரில் வழங்கப்படும் அதே வடிவில் டேஸ்போர்டு & இருக்கை உள்ளமைவுகளுடன் இந்தியாவிற்கு வரும் ஹிலக்ஸின் கேபின் காட்சியளிக்கலாம். இதனால் இந்த பிக்அப் ட்ரக்கிலும் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உடன் இணைக்கக்கூடிய 8.0 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை எதிர்பார்க்கிறோம்.

மறைப்பின்றி, இந்தியாவில் முதல்முறையாக காட்சித்தந்துள்ள டொயோட்டா ஹிலக்ஸ் பிக்அப் ட்ரக்- 2022 ஜனவரியில் அறிமுகம்

இயக்க ஆற்றலை வழங்க, ஹிலக்ஸில் இரு டீசல் என்ஜின் தேர்வுகளை டொயோட்டா வழங்கவுள்ளது. இதில் ஒன்றான 2.4 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 148 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனையும், 2.8 லிட்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 201 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக விளங்குகின்றன.

மறைப்பின்றி, இந்தியாவில் முதல்முறையாக காட்சித்தந்துள்ள டொயோட்டா ஹிலக்ஸ் பிக்அப் ட்ரக்- 2022 ஜனவரியில் அறிமுகம்

டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக, 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இரு டீசல் என்ஜின் தேர்வுகளுடனும் வழங்கப்படலாம். அதேநேரம் ஆற்றல்மிக்க 2.8 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வை பெறும் ஹிலக்ஸின் டாப் வேரியண்ட்களில் 4x4 ட்ரைவ்ட்ரெயின் அமைப்பும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைப்பின்றி, இந்தியாவில் முதல்முறையாக காட்சித்தந்துள்ள டொயோட்டா ஹிலக்ஸ் பிக்அப் ட்ரக்- 2022 ஜனவரியில் அறிமுகம்

இந்தியாவில் டொயோட்டா ஹிலக்ஸ் பிக்அப் ட்ரக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.25 லட்சங்களில் இருந்து ரூ.35 லட்சங்கள் வரையில் நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனருக்கான பாகங்களையே பெரும்பான்மையாக இந்த பிக்அப் ட்ரக் பெற்றுவர உள்ளதால் விலையினை நிச்சயமாக மற்ற பிக்அப் ட்ரக்குகளுக்கு சவாலானதாக நிர்ணயிக்க டொயோட்டா முயற்சிக்கும்.

மறைப்பின்றி, இந்தியாவில் முதல்முறையாக காட்சித்தந்துள்ள டொயோட்டா ஹிலக்ஸ் பிக்அப் ட்ரக்- 2022 ஜனவரியில் அறிமுகம்

ஆனால் தற்போதைக்கு இந்தியாவில் ஹிலக்ஸிற்கு விற்பனையில் போட்டியளிக்கும் வகையில் இஸுஸு ஹைலேண்டர் மற்றும் வி-கிராஸ் பிக்அப் ட்ரக் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் விலைகள் ரூ.18.05 லட்சங்களில் இருந்து ரூ.25.60 லட்சங்கள் வரையில் உள்ளன.

Source: Team BHP

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota hilux spied during tvc shoot
Story first published: Monday, December 20, 2021, 11:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X