இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய லிமிடெட் எடிசன் அறிமுகம்!! டொயோட்டாவின் பண்டிகை காலத்திற்கான தயாரிப்பு!

டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா காரின் புதிய லிமிடெட் எடிசனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய இன்னோவா க்ரிஸ்டா ஸ்பெஷல் எடிசனில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய லிமிடெட் எடிசன் அறிமுகம்!! டொயோட்டாவின் பண்டிகை காலத்திற்கான தயாரிப்பு!

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதை அடுத்து புதிய தயாரிப்புகளை சந்தையில் விற்பனைக்கு களமிறக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த வகையில் தீபாவளியை சிறப்பிக்க டொயோட்டா விற்பனைக்கு கொண்டுவந்துள்ள தயாரிப்பு தான் இந்த இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிசன் ஆகும்.

இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய லிமிடெட் எடிசன் அறிமுகம்!! டொயோட்டாவின் பண்டிகை காலத்திற்கான தயாரிப்பு!

2005இல் முதன்முதலாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னோவாவிற்கு நம் வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்து வருகின்ற வரவேற்பை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என்றே நினைக்கிறேன். தற்சமயம் இந்த ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் நம் நாட்டு சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யும் கார்களுள் ஒன்றாக இன்னோவா க்ரிஸ்டா உள்ளது.

இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய லிமிடெட் எடிசன் அறிமுகம்!! டொயோட்டாவின் பண்டிகை காலத்திற்கான தயாரிப்பு!

இன்னோவா க்ரிஸ்டா என்பது 2005இல் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னோவாவின் அடுத்த தலைமுறை மாடலாகும். இவ்வாறு தலைமுறை தலைமுறைகளாக இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா எம்பிவி மாடலின் விற்பனை 9 லட்சத்தை சமீபத்தில் கடந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாகவும் தான் இந்த லிமிடெட் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளதாக டொயோட்டா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய லிமிடெட் எடிசன் அறிமுகம்!! டொயோட்டாவின் பண்டிகை காலத்திற்கான தயாரிப்பு!

புதிய லிமிடெட் எடிசனை பொறுத்தவரையில், வழக்கமான டொயோட்டா இன்னோவா காரை காட்டிலும் சில கூடுதலான அம்சங்கள் இந்த ஸ்பெஷல் எடிசனில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பல-பாதை கண்காணிப்பு (360-கோண கேமிரா உடன்), ஹெட்-அப் திரை, டயரின் அழுத்தத்தை அளவிடும் சிஸ்டம், வயர் இல்லா சார்ஜர், கதவு முனை விளக்கு (16 நிறங்களில் விளக்குகளுடன்) மற்றும் காற்று அயனியாக்கி உள்ளிட்டவை அடங்குகின்றன.

இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய லிமிடெட் எடிசன் அறிமுகம்!! டொயோட்டாவின் பண்டிகை காலத்திற்கான தயாரிப்பு!

இவற்றுடன், ஏற்ற தொழிற்நுட்பங்கள் மற்றும் சவுகரியத்தை வழங்கக்கூடிய பிரத்யேகமான தொகுப்பையும் இன்னோவாவிற்கு வழங்கும் திட்டத்தில் டொயோட்டா உள்ளது. மற்றப்படி இன்னோவா எம்பிவி கார்களில் வழங்கப்படும் வசதிகள் அனைத்தும் இந்த புதிய லிமிடெட் எடிசனிலும் தொடரப்பட்டுள்ளன.

இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய லிமிடெட் எடிசன் அறிமுகம்!! டொயோட்டாவின் பண்டிகை காலத்திற்கான தயாரிப்பு!

இந்த வகையில் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் இணைக்கக்கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் தொடுத்திரை, டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள், கேபினை சுற்றிலும் விளக்குகள், 7 காற்றுப்பைகள், ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், மலை பாதைகளில் ஏறுவதற்கான உதவி, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பவர் & ஈக்கோ என்ற டிரைவிங் மோட்கள் உள்ளிட்டவற்றை இன்னோவா க்ரிஸ்ட்டா லிமிடெட் எடிசனிலும் பெறலாம்.

இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய லிமிடெட் எடிசன் அறிமுகம்!! டொயோட்டாவின் பண்டிகை காலத்திற்கான தயாரிப்பு!

இன்னோவா க்ரிஸ்ட்டா பொதுவாகவே அதன் சவுகரியமான கேபினிற்கும், அதன் ஏற்ற விலைக்கும் மற்றும் நேர்த்தியான வெளிப்புற டிசைனிற்கும் தான் பிரபலமானது. இத்தகைய எம்பிவி காரில் புதியதாக லிமிடெட் எடிசன் கொண்டுவந்திருப்பது குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் இணை பொது மேலாளர் வி.விஸ்லைன் சிகாமணி கருத்து தெரிவிக்கையில், "அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எம்பிவி கார் பிரிவில் இன்னோவா சந்தேகத்திற்கு இடமின்றி முன்னணியில் உள்ளது.

இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய லிமிடெட் எடிசன் அறிமுகம்!! டொயோட்டாவின் பண்டிகை காலத்திற்கான தயாரிப்பு!

இன்னோவா எங்களது முதன்மையான தயாரிப்புகளுள் ஒன்றாகும். தொழிற்நுட்பம், ஆடம்பரம், நிகரற்ற சவுகரியம், டொயோட்டாவின் தரம், ஆயுள் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றுடன் இணைந்த இன்னோவா க்ரிஸ்டாவில் 100க்கும் மேற்பட்ட அற்புதமான அம்சங்களை கொண்டுவர நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய லிமிடெட் எடிசன் அறிமுகம்!! டொயோட்டாவின் பண்டிகை காலத்திற்கான தயாரிப்பு!

பரிணாம வளர்ச்சியடைந்து வரும் வாடிக்கையாளர்களின் இரசனைகள், இயக்கத்திற்கான தேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப எங்கள் தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்துவது எங்கள் தொடர்ச்சியான முயற்சியாகும் என்றார். பண்டிகை காலத்திற்கான வெளியீட்டாக கொண்டுவரப்பட்டுள்ள இன்னோவா லிமிடெட் எடிசன் டீலர்ஷிப்களில் ஸ்டாக்கில் உள்ளவரை மட்டுமே விற்பனை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய லிமிடெட் எடிசன் அறிமுகம்!! டொயோட்டாவின் பண்டிகை காலத்திற்கான தயாரிப்பு!

இதனால்தான், இந்த புதிய இன்னோவா பதிப்பிற்கு ஸ்பெஷல் எடிசன் என பெயர் வைக்காமல், லிமிடெட் எடிசன் என பெயர் சூட்டியுள்ளனர். இன்னோவாவின் புதிய லிமிடெட் எடிசனை வாங்க விரும்புபவர்கள் கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள டொயோட்டா டீலர்ஷிப் மையத்தினை அணுகவும். முன்னதாக, இன்னோவா கார்களின் விலைகளை கடந்த ஜூலை மாதத்தில் டொயோட்டா நிறுவனம் ரூ.1.18 லட்சம் வரையில் அதிகரித்து இருந்தது.விற்பனையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு எம்ஜி க்ளோஸ்டர், கியா கார்னிவல், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Kirloskar Motor Launches the Innova Crysta Limited Edition this festive season.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X