2021 டொயோட்டா ஃபார்ச்சூனருக்கான புதிய லிமிடெட் எடிசன் ஆக்ஸஸரீ தொகுப்பு!! தாய்லாந்தில் அறிமுகம்

உலகளவில் பிரபலமான ஃபார்ச்சூனர் காருக்கான புதிய லிமிடெட் எடிசன் ஆக்ஸஸரீகள் தொகுப்பை டொயோட்டா நிறுவனம் தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனருக்கான புதிய லிமிடெட் எடிசன் ஆக்ஸஸரீ தொகுப்பு!! தாய்லாந்தில் அறிமுகம்

‘பிரைஸ் பேக்கேஜ் 2' என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஆக்ஸஸரீ தொகுப்பை அங்குள்ள வாடிக்கையாளர்கள் இந்த மார்ச் மாத 31 இறுதியில் வரையில் மட்டுமே வாங்கும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஃபார்ச்சூனரின் ஸ்டாண்டர்ட் மாடலுக்கு மட்டுமே இந்த புதிய ஆக்ஸஸரீ தேர்வு கொடுக்கப்பட்டுளது. ஃபார்ச்சூனர் லெஜண்டருக்கு வழங்கப்படவில்லை. இந்த லிமிடெட் ஆக்ஸஸரீ தொகுப்பில் முன்பக்க மற்றும் பின்புறத்திற்கான பம்பர்கள், முன்பக்க க்ரில்லை சுற்றிலும் கருப்பு நிற பேனல்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனருக்கான புதிய லிமிடெட் எடிசன் ஆக்ஸஸரீ தொகுப்பு!! தாய்லாந்தில் அறிமுகம்

இவை மட்டுமில்லாமல் பின்பக்கத்தை பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகளுக்கான கருப்பு நிற மூடிகள், கருப்பு நிறத்தில் சைடு படிக்கட்டுகள், கருப்பு நிற மேற்கூரை மற்றும் பின்பக்க பொனெட்டில் கருப்பு நிறத்தில் ‘FORTUNER' லோகோ போன்றவற்றையும் அங்குள்ள வாடிக்கையாளர்கள் ஆக்ஸஸரீயாக பெற முடியும்.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனருக்கான புதிய லிமிடெட் எடிசன் ஆக்ஸஸரீ தொகுப்பு!! தாய்லாந்தில் அறிமுகம்

இந்த ஆக்ஸஸரீ தொகுப்பிற்கான விலையாக 46,500 தாய் பாட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1.1 லட்சமாகும். தாய்லாந்து சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் இரு டீசல் என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனருக்கான புதிய லிமிடெட் எடிசன் ஆக்ஸஸரீ தொகுப்பு!! தாய்லாந்தில் அறிமுகம்

இதில் ஒன்றான 2.4 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-4 சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎஸ் மற்றும் 400 என்எம் டார்க் திறனையும், மற்றொன்றான 2.8 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-4 என்ஜின் அதிகப்பட்சமாக 204 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனருக்கான புதிய லிமிடெட் எடிசன் ஆக்ஸஸரீ தொகுப்பு!! தாய்லாந்தில் அறிமுகம்

இந்த இரு என்ஜின்களுடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஆனால் இதில் ஃபார்ச்சூனர் ஸ்டாண்டர்ட் மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் மட்டும் தான் வழங்கப்படுகிறது. ஃபார்ச்சூனர் லெஜண்டரில் தான் இரு டீசல் என்ஜின் தேர்வு கொடுக்கப்படுகிறது.

2021 டொயோட்டா ஃபார்ச்சூனருக்கான புதிய லிமிடெட் எடிசன் ஆக்ஸஸரீ தொகுப்பு!! தாய்லாந்தில் அறிமுகம்

பின்சக்கர ட்ரைவ் & அனைத்துசக்கர ட்ரைவ் என்ற இரு வடிவங்களில் தாய்லாந்தில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா ஃபார்ச்சூனரின் விலைகள் 1.35 மில்லியன் பாட்டில் இருந்து 1.83 மில்லியன் பாட் வரையில் உள்ளன. இந்திய ரூபாயில் சொல்ல வேண்டுமென்றால், ரூ.31.94 லட்சத்தில் இருந்து ரூ.44.37 லட்சம் வரையில் ஆகும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2021 Toyota Fortuner Gets A Limited Edition Styling Package. Read In Tamil.
Story first published: Sunday, March 14, 2021, 22:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X