Just In
- 6 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 7 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 8 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 9 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- News
ஒட்டுமொத்த நாடும் தேடும் 'அந்த' ஒற்றை நபர்... பிரிட்டனில் பரபரப்பு... காரணம் இதுதான்
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விற்பனையில் டொயோட்டாவை தூக்கி நிறுத்தும் ஃபார்ச்சூனர்!! மொத்த விற்பனை 92% அதிகரிப்பு!
2021ஆம் ஆண்டின் துவக்க ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனையில் சுமார் 92 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ஜனவரி மாதத்தில் மொத்தம் 11,126 கார்களை இந்தியாவில் ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020 ஜனவரி மாதத்தை காட்டிலும் 5,804 அதிகமாகும்.

டொயோட்டா நிறுவனம் ஜப்பானை சேர்ந்த மற்றொரு நிறுவனமான சுஸுகி உடன் கூட்டணியில் உள்ளது. கூட்டணி நிறுவனத்தின் உதவியுடன் க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் காம்பெக்ட் எஸ்யூவி கார்களை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

க்ளான்ஸா மாருதி சுஸுகியின் பலேனோவின் அடிப்படையிலும், அர்பன் க்ரூஸர் பிரபலமான விட்டாரா பிரெஸ்ஸாவின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்ட டொயோட்டா கார்களாகும். இவை இரண்டும் ஒவ்வொரு மாதத்திலும் கணிசமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை பெற்று வருகின்றன.

மேற்கூறப்பட்ட கடந்த ஜனவரி மாத டொயோட்டாவின் விற்பனை எண்ணிக்கையில் க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்களின் விற்பனை எண்ணிக்கையும் அடங்குகின்றன. மேலும் சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியில் இதுவரையில் மட்டுமே 50,000 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளதாகவும் டொயோட்டா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் இந்திய சந்தையில் டொயோட்டாவின் விற்பனைக்கு மூல ஆதாரமாக விளங்குபவை என்றால் அவை இன்னோவா க்ரிஸ்டாவும் ஃபார்ச்சூனரும் தான். சமீபத்தில் அப்கிரேட் செய்யப்பட்ட இவை இரண்டின் விற்பனையும் முன்பதிவும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது.

இந்தியாவில் விற்பனையில் 92 சதவீதம் வளர்ச்சியை கண்டிருப்பது குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் முதன்மை துணை தலைவர் நவீன் சோனி கருத்து தெரிவிக்கையில், புதிய ஆண்டு எங்களுக்கு ஒரு நேர்மறையான குறிப்புடன் தொடங்கியுள்ளது. எங்கள் விற்பனை வளர்ச்சி அதற்கு சான்றாக உள்ளது.

எங்களது மொத்த விற்பனை மிகவும் ஊக்கமளிக்கிறது மற்றும் முன்பதிவு ஆர்டர்களும் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளன. கூடுதலான ஸ்டைல், சவுகரியம் மற்றும் செயல்திறனை எதிர்பார்க்கும் எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக புத்தாண்டில் புதிய பார்ச்சூனர் மற்றும் லெஜெண்டரை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.

இரண்டு மாடல்களுக்கும் மிகப்பெரிய வாடிக்கையாளர் பட்டாளம் சேர்ந்து வருகிறது. இது பார்ச்சூனரின் மீதான தொடர்ச்சியான நம்பிக்கையை காட்டுகிறது. ஃபார்ச்சூனர் அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் ஆனாலும் பிரிவில் இதுதான் முதன்மையான மாடலாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இன்னோவா க்ரிஸ்டாவிற்கும் நல்லப்படியான வரவேற்பே கிடைத்து வருகிறது என கூறிய அவர், சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியினால் புதிய புதிய வாடிக்கையாளர்கள் டொயோட்டாவிற்கு கிடைத்து வருவதாகவும் தெரிவித்தார்.