இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக டொயோட்டா கார்கள் விற்பனை!! 2021 நவம்பரில் 53% அதிகரிப்பு!

இந்தியாவில் கடந்த நவம்பர் மாத கார்கள் விற்பனையில் சுமார் 53% வளர்ச்சியை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அடைந்துள்ளதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக டொயோட்டா கார்கள் விற்பனை!! 2021 நவம்பரில் 53% அதிகரிப்பு!

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான டொயோட்டா கடந்த 2021 நவம்பர் மாதத்தில் மொத்தம் 13,003 யூனிட் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனை எண்ணிக்கை 2020 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 53% அதிகமாகும்.

இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக டொயோட்டா கார்கள் விற்பனை!! 2021 நவம்பரில் 53% அதிகரிப்பு!

ஏனெனில் அந்த மாதத்தில் 8,508 கார்களையே டொயோட்டா நம் நாட்டில் விற்பனை செய்திருந்தது. உண்மையில் கடந்த சில மாதங்களாகவே டொயோட்டா கார்களின் விற்பனை இந்திய சந்தையில் சிறப்பானதாக இருந்து வருகிறது. கடந்த 2021 அக்டோபர் மாதத்திலும் கடந்த நவம்பர் மாத விற்பனையை காட்டிலும் வெறும் 5% மட்டுமே குறைவாக 12,440 டொயோட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக டொயோட்டா கார்கள் விற்பனை!! 2021 நவம்பரில் 53% அதிகரிப்பு!

இந்தியாவில் கார்கள் விற்பனையில் இத்தகைய வளர்ச்சி அடைந்திருப்பது குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் துணை நிர்வாக இயக்குனர் வைஸ்லைன் சிகாமணி கருத்து தெரிவிக்கையில், சந்தையில் இருந்து தேவை தொடர்ந்து வலுவாக கிடைத்து வருகிறது. இது எங்கள் முன்பதிவு ஆர்டர்களில் சரியாக பிரதிபலிக்கிறது.

இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக டொயோட்டா கார்கள் விற்பனை!! 2021 நவம்பரில் 53% அதிகரிப்பு!

மேலும் இந்த ஆர்டர்களை பூர்த்தி செய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். தேவை & ஆர்டர்கள் ஆகிய இரண்டின் அதிகரிப்புக்கு, எங்கள் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களிடையே உள்ள பிரபலம் காரணமாக இருக்கலாம். மேலும் புதிய லெஜண்டர் 4x4 மற்றும் இன்னோவா க்ரிஸ்ட்டா லிமிடெட் எடிசன் உள்ளிட்ட சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட தயாரிப்புகள் மேலும் உதவுகின்றன.

இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக டொயோட்டா கார்கள் விற்பனை!! 2021 நவம்பரில் 53% அதிகரிப்பு!

ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய இரண்டும் அந்தந்த பிரிவுகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. எங்கள் பிராண்டின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி. டொயோட்டா பிராண்டிற்கு புதியவைகளான க்ளான்ஸா & அர்பன் க்ரூஸர் உட்பட அனைத்து பிரிவுகளிலும் விற்பனையில் வளர்ச்சியுடன் இந்த காலண்டர் ஆண்டை நிறைவு செய்வோம் என்று நம்புகிறோம்.

இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக டொயோட்டா கார்கள் விற்பனை!! 2021 நவம்பரில் 53% அதிகரிப்பு!

எவ்வாறாயினும், இரண்டு மாடல்களுக்கும் பெற்ற நேர்மறையான வரவேற்புடன், தொலைத்தூர இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களை அணுகுவதற்கு எங்களால் முடிந்தவரை முயற்சித்து வருகிறோம் என்றார். வைஸ்லைன் சிகாமணி கூறியதுபோல், ஃபோர்டு நிறுவனத்தின் இந்திய வெளியேற்றதால், எண்டேவியரின் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளதை அடுத்து, ஃபார்ச்சூனர் அதன் பிரிவிலேயே சிறந்த விற்பனை மாடலாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக டொயோட்டா கார்கள் விற்பனை!! 2021 நவம்பரில் 53% அதிகரிப்பு!

ஜப்பானை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமாக இருப்பினும், இந்திய சந்தையில் டொயோட்டாவிற்கு நீண்ட கால அனுபவம் உள்ளது. ஏனெனில் சுமார் 22 வருடங்களுக்கு முன்னர் 1999இல் இந்தியாவில் தொழிற்சாலை பணிகளை துவங்கிய டொயோட்டா இதற்காக கர்நாடகா மாநிலத்தில் பிடாடி என்கிற பகுதியில் தொழிற்சாலையினை நிறுவியது.

இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக டொயோட்டா கார்கள் விற்பனை!! 2021 நவம்பரில் 53% அதிகரிப்பு!

அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளிலும் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வரும் டொயோட்டா, இந்தியாவில் ஃபார்ச்சூனர் & இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை தவிர்த்து, பட்ஜெட் ரக கார்களை விற்பனை செய்ய போராடி கொண்டுதான் வருகிறது. இதனாலேயே நஷ்டத்தை தவிர்க்க, பிரபலமான சுஸுகி கார்களின் அடிப்படையில் தயாரிப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் டொயோட்டா உள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக டொயோட்டா கார்கள் விற்பனை!! 2021 நவம்பரில் 53% அதிகரிப்பு!

இந்த வகையில் க்ளான்ஸா (மாருதி சுஸுகி பலேனோ) மற்றும் அர்பன் க்ரூஸர் (விட்டாரா பிரெஸ்ஸா) என்ற சுஸுகி ரீ-பேட்ஜ்டு கார்கள் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன. இவை மட்டுமின்றி எதிர்காலத்தில் மேலும் சில கார்களை கொண்டுவர டொயோட்டா தயாராகி வருகிறது. இதில் முதலாவதாக எர்டிகாவின் ரீபேட்ஜ்டு வெர்சனான ரூமியன், டொயோட்டா பிராண்டில் இருந்து வெளிவரலாம் என எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக டொயோட்டா கார்கள் விற்பனை!! 2021 நவம்பரில் 53% அதிகரிப்பு!

ரூமியன், தென்னாப்பிரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடலின் பெயராகும். இந்தியாவிலும் இதே பெயரில் தான் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஏனெனில் சமீபத்தில் இதன் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக காப்புரிமை படம் ஒன்று வெளியாகி இருந்தது. ரூமியனிலும் எர்டிகாவில் வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்பட உள்ளது. மேலும் சிஎன்ஜி தேர்வும் கொடுக்கப்படலாம்.

இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக டொயோட்டா கார்கள் விற்பனை!! 2021 நவம்பரில் 53% அதிகரிப்பு!

எர்டிகாவின் ரீ-பேட்ஜ்டு வெர்சன் மட்டுமின்றி சுஸுகியின் செடான் மாடலான சியாஸின் ரீ-பேட்ஜ்டு வெர்சனும் எதிர்காலத்தில் டொயோட்டா பிராண்டில் இருந்து வெளிவரவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த டொயோட்டா செடான் காரின் பெயர் பெல்டா என அழைக்கப்பட உள்ளதாம். இவை மட்டுமல்ல, அர்பன் க்ரூஸரின் புதிய தலைமுறையையும் வரும் மாதங்களில் அறிமுகப்படுத்த டொயோட்டா தயாராகி வருகிறது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Kirloskar Motor registers a 53% growth in domestic sales in November 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X