டொயோட்டா இன்னோவாவில் ஸ்பெஷல் எடிசன்!! இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது!

டொயோட்டா இன்னோவாவின் 50ஆம் ஆண்டு நிறைவு எடிசன் கார்கள் இந்தோனிஷியாவில் டீலர்ஷிப் மையங்களை சென்றடைந்துள்ளன. இதனை வெளிக்காட்டும் வீடியோவினை இனி பார்ப்போம்.

டொயோட்டா இன்னோவாவில் ஸ்பெஷல் எடிசன்!! இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது!

இன்னோவாவின் 50ஆம் ஆண்டு நிறைவு எடிசனை டொயோட்டா நிறுவனம் இந்தோனிஷிய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டொயோட்டா அஸ்ட்ரா மோட்டார்ஸின் மூலம் இந்த ஸ்பெஷல் எடிசன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவாவில் ஸ்பெஷல் எடிசன்!! இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது!

50 ஆண்டுகள் என்பதினால் வெறும் 50 யூனிட்கள் மட்டுமே இந்த ஸ்பெஷல் எடிசன் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. தனித்துவமான முத்திரை பெற்றுவந்துள்ள இந்த லிமிடெட் எடிசன் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் காஸ்மெட்டிக் அப்டேட்களை பெற்றுள்ளது.

பி சேனல் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் இன்னோவாவின் வழக்கமான வெள்ளை நிறத்தில் தான் இந்த ஸ்பெஷல் பதிப்பு காரும் காட்சியளிக்கிறது. இருப்பினும் அதேநேரம் தங்க நிறத்தில் லைன் ஒன்றை காரின் பக்கவாட்டில் பார்க்க முடிகிறது.

டொயோட்டா இன்னோவாவில் ஸ்பெஷல் எடிசன்!! இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது!

லக்சரி தோற்றத்திற்காக முன்பக்க க்ரில்லை சுற்றிலும் பளபளப்பான கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புற கேபின் முழுக்க பழுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் டேஸ்போர்டில் மர துண்டுகளையும் பார்க்க முடிகிறது.

டொயோட்டா இன்னோவாவில் ஸ்பெஷல் எடிசன்!! இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது!

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் மற்றும் 3-ஸ்போக் பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை மட்டுமே கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. மற்றவை அனைத்தும் அப்படியே தான் தொடரப்பட்டுள்ளன.

டொயோட்டா இன்னோவாவில் ஸ்பெஷல் எடிசன்!! இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது!

இந்த ஸ்பெஷல் எடிசன் இன்னோவாவில் 6 ஸ்போக், 18 இன்ச் அலாய் சக்கரங்கள் க்ரே நிறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. பிரத்யேகமான ‘50வது ஆண்டு நிறைவு எடிசன்' முத்திரையை காரின் பின்பக்கத்திலும் உட்புறத்திலும் பார்க்க முடிகிறது.

டொயோட்டா இன்னோவாவில் ஸ்பெஷல் எடிசன்!! இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது!

இந்தோனிஷிய நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டொயோட்டா கிஜங் இன்னோவா லிமிடெட் எடிசன் வி லக்சரி வேரியண்ட்டில் 2.0 லிட்டர், டிஒஎச்சி பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

டொயோட்டா இன்னோவாவில் ஸ்பெஷல் எடிசன்!! இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது!

இந்த என்ஜின்கள் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதுவே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இன்னோ க்ரிஸ்டாவில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினிற்கு மாற்றாக 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவாவில் ஸ்பெஷல் எடிசன்!! இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு கடந்த ஆண்டில் தான் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் கொண்டுவரப்பட்டு இருந்தது. இந்த அப்கிரேட் செய்யப்பட்ட காரில் இணைப்பு வசதிகளுடன் 9 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டு இருந்தன.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Innova 50th Anniversary Edition Detailed In First Look Walkaround.
Story first published: Tuesday, May 11, 2021, 12:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X