ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணதுக்கே 1000 கிமீ தூரம் பயணித்த டொயோட்டா மிராய்... இப்படி ஒரு கார் தான் நமக்கு தேவை..

டொயோட்டா மிராய் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார்குறித்த ஆச்சர்யமளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணதுக்கே 1000 கிமீ தூரம் பயணித்த டொயோட்டா மிராய்... இப்படி ஒரு கார் தான் நமக்கு தேவை...

உலகின் மிக முன்னேறிய தொழில்நுட்பம் கொண்ட ஹைட்ரஜன் காராக டொயோட்டா மிராய் இருக்கின்றது. இந்த காரை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இது மிகவும் அரிதான காராகும். உலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே இக்கார் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணதுக்கே 1000 கிமீ தூரம் பயணித்த டொயோட்டா மிராய்... இப்படி ஒரு கார் தான் நமக்கு தேவை...

இந்த நிலையில், அண்மையில் இதன் ரேஞ்ஜ் வழங்கும் திறன்குறித்த ஆய்வை டொயோட்டா செய்திருக்கின்றது. இந்த ஆய்வில் ஒரு முறை டேங்கை முழுமையாக நிரப்பியதற்கு டொயோட்டா மிராய் 1000 கிமீ வரை பயணித்து புதிய சாதனைப் படைத்திருக்கின்றது. இது ஒட்டுமொத்த வாகன உலகிற்கே பெரிய ஆச்சரியமாக அமைந்துள்ளது.

ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணதுக்கே 1000 கிமீ தூரம் பயணித்த டொயோட்டா மிராய்... இப்படி ஒரு கார் தான் நமக்கு தேவை...

மின்சார கார்களைப் பயன்படுத்துவோர் பெரும்பாலானோர் அதை சார்ஜ் செய்வதில் அதிகளவு சிரமத்தைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, சார்ஜ் செய்ய அதிகம் நேரம் பிடிப்பதானாலயே அவர்கள் பெருத்த சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். ஆனால், இந்த நிலை ஹைட்ரஜன் கார்களில் ஏற்படாது. பெட்ரோல், டீசல் கார்களைப் போலவே மிக குறுகிய நேரத்தில் ஹைட்ரஜனை நிரப்ப முடியும்.

ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணதுக்கே 1000 கிமீ தூரம் பயணித்த டொயோட்டா மிராய்... இப்படி ஒரு கார் தான் நமக்கு தேவை...

அதேசமயம், மின்சார கார்களுக்கு இணையாக சுற்றுச்சுழுலுக்கு நண்பனாக இது செயல்படும். ஆம், ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கும் கார்கள் வெளியேற்றமாக நீராவியை மட்டுமே வெளியேற்றும். பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போன்று கார்பன் கழிவுகளை வெளியேற்றாது.

ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணதுக்கே 1000 கிமீ தூரம் பயணித்த டொயோட்டா மிராய்... இப்படி ஒரு கார் தான் நமக்கு தேவை...

எனவேதான் ஹைட்ரஜன் கார்கள் சிறந்தது என வாகனத்துறைச் சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த காரே டொயோட்டா மிராய். இதனை பிரான்சைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போதே, அது ஒரு ஆயிரம் கிலோமீட்டர் தூரம் ரேஞ்ஜ் (வீச்சு) வழங்கி பிரம்மிப்பை ஏற்படுத்தியது.

ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணதுக்கே 1000 கிமீ தூரம் பயணித்த டொயோட்டா மிராய்... இப்படி ஒரு கார் தான் நமக்கு தேவை...

நான்கு ஓட்டுநர்கள் இக்காரை சோதனையிட்டிருக்கின்றனர். நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலைகள் என அனைத்து விதமான சாலைகளிலும் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. அண்மையில் இதேபோன்று ஓர் பரிசோதனையில் ஹூண்டாய் நிறுவனத்தின் நெக்ஸோ ப்யூவல் செல் கார் உட்படுத்தப்பட்டது. இக்கார் 900 கிமீ தூரம் வரை சென்றது.

ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணதுக்கே 1000 கிமீ தூரம் பயணித்த டொயோட்டா மிராய்... இப்படி ஒரு கார் தான் நமக்கு தேவை...

இந்த சாதனையை தற்போது டொயோட்டா மிராய் முறியடித்துள்ளது. 1003 கிமீ வெற்றி கரமான பயணத்திற்கு பின்னர் இக்கார் பாரிஸ் நகரத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருக்கின்றது. அப்போது, இன்னும் 9 கிமீ பயணிக்குமளவிற்கு அதில் திறன் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இது மிக சுவாரஷ்யமான ரேஞ்ஜ் ஆகும்.

எக்ஸ்எல்இ மற்றும் லிமிடெட் ஆகிய இரு விதமான வேரியண்டுகளில் 2021 டொயோட்டா மிராய் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஜேபிஎல் பிரீமியம் ஆடியோ சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்ட 12.3 இன்சிலான தொடுதிரை, ஸ்மார்ட் கீ மற்றும் கீ-லெஸ் என்ட்ரீ உள்ளிட்ட சிறப்பு வசதிகளுடன் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Mirai Reached 1000KM On One Fill Of Hydrogen. Read In Tamil.
Story first published: Thursday, June 3, 2021, 12:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X