1359கிமீ கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்த ப்யூவல் செல் கார்! இது இருந்த பல நாளுக்கு பங்க் பக்கமே போக வேண்டாம்!

2021 டொயோட்டா மிராய் கார் கின்னஸ் உலக சாதனை படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

1359கிமீ கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்த ப்யூவல் செல் கார்... இது இருந்த பல நாட்களுக்கு பங்க் பக்கம் ஒதுங்கவே வேண்டாம்!

டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் மிராய் (Mirai)-ம் ஒன்று. இது ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கும் மின்சார கார் (hydrogen fuel cell electric vehicle) ஆகும். இந்த காரே தற்போது கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கின்றது.

1359கிமீ கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்த ப்யூவல் செல் கார்... இது இருந்த பல நாட்களுக்கு பங்க் பக்கம் ஒதுங்கவே வேண்டாம்!

ஒரே ஒரு முறை டேங்க் நிறைய ஹைட்ரஜன் ப்யூவல் செல்லை நிரப்பி சுமார் 1359 கிமீ தூரம் பயணித்தன் காரணத்தினால் இக்காருக்கு கின்னஸ் உலக சாதனை வழங்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கும் ஓர் மின்சார வாகனம் இத்தகைய அதிகபட்ச தூரத்தைக் கடப்பது இதுவே முதல் முறையாகும்.

1359கிமீ கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்த ப்யூவல் செல் கார்... இது இருந்த பல நாட்களுக்கு பங்க் பக்கம் ஒதுங்கவே வேண்டாம்!

மறுபடியும் ப்யூவல் செல் நிரப்பாமல் இத்தகைய தூரத்தை ஓர் கடப்பதும் இதுவே முதல் முறை ஆகும். ஆகையால், சுற்றுச்சூழலுக்கு சிறந்த வாகனமான டொயோட்டா மிராய்-க்கு உலக கின்னஸ் சாதனை விருது கொடுக்கப்பட்டுள்ளது. 1359 கிமீ பரப்பளவு கொண்ட தெற்கு கலிஃபோர்னியாவை டொயோட்டா மிராய் சுற்றி வந்து இந்த விருதை தட்டிச் சென்றிருக்கின்றது.

1359கிமீ கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்த ப்யூவல் செல் கார்... இது இருந்த பல நாட்களுக்கு பங்க் பக்கம் ஒதுங்கவே வேண்டாம்!

அதிகபட்ச ரேஞ்ஜை பெற வேண்டும் என்பதற்காக சில யுக்திகளை டொயோட்டா நிறுவனம் கையாண்டிருக்கின்றது. அதாவது, குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்குதல், எடை குறைப்பு (தேவையற்ற பொருட்களை வெளியேற்றதல்), தேவைக்கேற்ப பிரேக் பிடித்துதல் (உடனடி பிரேக்குகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன), டயர்களில் காற்று முழு அளவில் இருத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

1359கிமீ கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்த ப்யூவல் செல் கார்... இது இருந்த பல நாட்களுக்கு பங்க் பக்கம் ஒதுங்கவே வேண்டாம்!

1359 கிமீ இடைவெளியைக் கடக்க டொயோட்டா மிராய் இரண்டு நாட்கள் எடுத்திருக்கின்றது. கடும் பல விதிகள் மற்றும் ஆவணப்படுத்துதலுக்கு பின்னரே கின்னஸ் உலக சாதனை போட்டியில் பங்கேற்று, டொயோட்டா மிராய் அதற்கான விருதை சூடியிருக்கின்றது.

1359கிமீ கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்த ப்யூவல் செல் கார்... இது இருந்த பல நாட்களுக்கு பங்க் பக்கம் ஒதுங்கவே வேண்டாம்!

முதல் நாள் பயணத்திலேயே டொயோட்டா மிராய் 761 கிமீ இடைவெளியை கடந்திருக்கின்றது. அடுத்த நாள் மீத இடைவெளியை பூஜ்ஜியம் ஹைட்ரஜன் என்ற அளவில் அது நிறைவு செய்தது. இதன் பின்னரே சாதனை பயணம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இப்பயணத்தின்போது ஒட்டுமொத்தமாக 5.65 கிலோகிராம் ஹைட்ரஜன் ப்யூவல் செல்லை டொயோட்டா மிராய் பயன்படுத்தியிருக்கின்றது.

1359கிமீ கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்த ப்யூவல் செல் கார்... இது இருந்த பல நாட்களுக்கு பங்க் பக்கம் ஒதுங்கவே வேண்டாம்!

கின்னஸ் உலக சாதனைக்கு முன்னரே இந்த காரை டொயோட்டா நிறுவனம் இதுமாதிரியான ரேஞ்ஜ் திறன் குறித்து ஆய்வு செய்யும் பணியில் இறங்கிவிட்டது. இதன்படி, முன்னதாக ஜூன் மாதம் செய்யப்பட்ட சோதனையில் டொயோட்டா மிராய் ஆயிரத்திற்கும் அதிகமான கிமீ பயணித்தது சாதனைப் படைத்தது.

1359கிமீ கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்த ப்யூவல் செல் கார்... இது இருந்த பல நாட்களுக்கு பங்க் பக்கம் ஒதுங்கவே வேண்டாம்!

தற்போது 2021 டொயோட்டா மிராய் 1359 கிமீ இடைவெளியைக் கடந்து கின்னஸ் உலக சாதனையைப் படைத்திருக்கின்றது. இந்த காரை டொயோட்டா நிறுவனம் உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இது பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போன்று கார்பன் கழிவுகளை வெளியேற்றாது.

1359கிமீ கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்த ப்யூவல் செல் கார்... இது இருந்த பல நாட்களுக்கு பங்க் பக்கம் ஒதுங்கவே வேண்டாம்!

ஹைட்ரஜன் ப்யூவல் செல்லை மின்சாரமாக மாற்றி மின்சாரத்தால் இயங்கும் ஓர் காராகும். அதேவேலையில், இதனை மின்சார கார்களைப் போல் சார்ஜ் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. எரிபொருள் நிரப்புவதைப் போல மிகக் குறுகிய நேர இடைவெளியில் ஹைட்ரஜன் ப்யூவல் செல்லை நிரப்பிக் கொள்ளலாம்.

1359கிமீ கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்த ப்யூவல் செல் கார்... இது இருந்த பல நாட்களுக்கு பங்க் பக்கம் ஒதுங்கவே வேண்டாம்!

ஆகையால், பெட்ரோல்-டீசல் மற்றும் வழக்கமான எலெக்ட்ரிக் வாகனம் ஆகியவற்றைக் காட்டிலும் அதிக பயனுள்ள வாகனமாக ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கும் டொயோட்டா மிராய் இருக்கின்றது. டொயோட்டா மிராய் ஓர் பிரீமியம் தர பின் வீல் இயக்கம் கொண்ட காராகும். கவர்ச்சியான டிசைன், கட்டிங்-எட்ஜ் தொழில்நுட்பம், அதிக திறன் வெளிப்பாடு மற்றும் அதிக ஹைட்ரஜனை சேமிக்கும் வசதி என மிகவும் தரமான சிறப்புகளுடன் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

1359கிமீ கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்த ப்யூவல் செல் கார்... இது இருந்த பல நாட்களுக்கு பங்க் பக்கம் ஒதுங்கவே வேண்டாம்!

இந்தியாவில் இந்த கார் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போதே ப்யூவல் செல் வாகனங்களின் இயக்கம்குறித்த ஆய்வுகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகையால், அதிக ரேஞ்ஜ் வழங்கக் கூடிய ப்யூவல் செல் வாகனங்களின் இயக்கம் நாட்டில் தொடங்க இன்னும் சில ஆண்டுகள் எடுக்கும் என யூகிக்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Toyota mirai sets guinness world record title with 845 mile
Story first published: Wednesday, October 13, 2021, 10:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X