மாருதி பலேனோவை தொடர்ந்து ஹைப்ரீட் என்ஜினை பெறும் டொயோட்டா க்ளான்ஸா!! டீசல் என்ஜினும் மீண்டும் வருகிறது!

டொயோட்டா க்ளான்ஸா ஹைப்ரீட் கார் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மோட்டார்பீம் செய்திதளம் மூலம் வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி பலேனோவை தொடர்ந்து ஹைப்ரீட் என்ஜினை பெறும் டொயோட்டா க்ளான்ஸா!! டீசல் என்ஜினும் மீண்டும் வருகிறது!

2019ல் இந்தியாவில் அறிமுகமான டொயோட்டா க்ளான்ஸா கூட்டணி நிறுவனமான சுஸுகியின் பலேனோவின் ரீபேட்ஜ்டு வெர்சனாகும். இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்றான பலேனோ சமீபத்தில் ஹைப்ரீட் என்ஜின் உடன் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது.

மாருதி பலேனோவை தொடர்ந்து ஹைப்ரீட் என்ஜினை பெறும் டொயோட்டா க்ளான்ஸா!! டீசல் என்ஜினும் மீண்டும் வருகிறது!

இந்த நிலையில் தற்போது டொயோட்டா க்ளான்ஸா கார் ஒன்று மாசு உமிழ்வை அளவிடும் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. மாருதி பலேனோ ஹைப்ரீட் காரில் அதிகப்பட்சமாக 91 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 10 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்பட்டது.

மாருதி பலேனோவை தொடர்ந்து ஹைப்ரீட் என்ஜினை பெறும் டொயோட்டா க்ளான்ஸா!! டீசல் என்ஜினும் மீண்டும் வருகிறது!

எலக்ட்ரிக் மோட்டார் கூடுதலாக 13.5 பிஎஸ் மற்றும் 30 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். கூட்டணி கொள்கைகளினால் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்விஃப்ட் ஹைப்ரீட் காரிலும் வழங்கப்பட்ட இதே ஹைப்ரீட் என்ஜின் அமைப்புதான் இந்த க்ளான்ஸாவிலும் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி பலேனோவை தொடர்ந்து ஹைப்ரீட் என்ஜினை பெறும் டொயோட்டா க்ளான்ஸா!! டீசல் என்ஜினும் மீண்டும் வருகிறது!

இந்த அமைப்பில் பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் சிஸ்டத்தின் மூலமாக சுயமாக சார்ஜ் ஏற்றி கொள்ளும் இந்த ஹைப்ரீட் என்ஜின் அமைப்பை பெற்ற சுஸுகி ஸ்விஃப்ட் ஹைப்ரீட் கார் வழங்கக்கூடிய மைலேஜ் 32kmpl ஆக என அறிவிக்கப்பட்டது.

மாருதி பலேனோவை தொடர்ந்து ஹைப்ரீட் என்ஜினை பெறும் டொயோட்டா க்ளான்ஸா!! டீசல் என்ஜினும் மீண்டும் வருகிறது!

டொயோட்டா இவ்வாறு கூட்டணி நிறுவனத்தின் ஹைப்ரீட் என்ஜினை பெற்று வரவுள்ள நிலையில் மாருதி சுஸுகி நிறுவனம் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மூலம் மீண்டும் அதன் கார்களில் டீசல் என்ஜின் தேர்வை வழங்க முடிவெடுத்துள்ளது.

மாருதி பலேனோவை தொடர்ந்து ஹைப்ரீட் என்ஜினை பெறும் டொயோட்டா க்ளான்ஸா!! டீசல் என்ஜினும் மீண்டும் வருகிறது!

இந்த டீசல் என்ஜின் மலிவான ஹேட்ச்பேக் கார்களில் வழங்கப்பட வாய்ப்பில்லை. நமக்கு தெரிந்தவரை அதன் தயாரிப்பு செலவினால் ப்ரீமியம் கார்களில் மட்டுமே வழங்கப்படும். இந்த வகையில்தான் விலைமிக்க இந்த ஹைப்ரீட் என்ஜின் தேர்வு பலேனோ மற்றும் க்ளான்ஸா ஹேட்ச்பேக் கார்களில் இந்த நிறுவனங்கள் வழங்குகின்றன.

மாருதி பலேனோவை தொடர்ந்து ஹைப்ரீட் என்ஜினை பெறும் டொயோட்டா க்ளான்ஸா!! டீசல் என்ஜினும் மீண்டும் வருகிறது!

டொயோட்டா க்ளான்ஸா ஹைப்ரீட் காரின் அறிமுகம் மாருதி பலேனோ ஹைப்ரீட் காரின் வருகையை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு கார்களின் மைல்ட்-ஹைப்ரீட் வெர்சன்களை காட்டிலும் அவற்றின் ஹைப்ரீட் வெர்சன்களின் விலைகள் சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Glanza Hybrid Spied, Launch Expected Later This Year
Story first published: Tuesday, February 2, 2021, 18:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X